Skip to main content

ஆதார் அட்டை பதிவு நிலவரம் அறிய வாய்ப்பு! வரும் 12ல் முகாம்களில் பட்டியல் வெளியீடு


ஆதார் அட்டைக்கு உடற்கூறு பதிவு செய்தவர்களின் நிலை குறித்த பட்டியல், வரும் 12 முதல், பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்படுகிறது. ஆதார் அட்டைக்கு உடற்கூறுகளை பதிவு செய்யாமல் விடுபட்டோருக்கான நிரந்தர முகாம், மாவட்டம் முழுவதும் நடந்து வருகிறது. தாலுகா அலுவ
லகங்கள், நகராட்சிகள் மற்றும் மாநகராட்சி என 16 இடங்களில் ஆதார் பதிவு முகாம் செயல்படுகிறது.
விடுபட்டவர்களில் 50 சதவீதத் தினர், கடந்த மூன்று மாதங்களில் உடற்கூறு பதிவு செய்துள்ளனர். அவர்களுக்கு தபாலில் ஆதார் அட்டை வழங்கும் பணி நடந்து வருகிறது.

ஆதார் பதிவு செய்தவர்கள், அதற்கான ரசீதை பயன்படுத்தி, இணைய தளம் வாயிலாக பதிவிறக்கம் செய்து கொள்கின்றனர். இருப்பினும், முதல்கட்டமாக பதிவு செய்தவர்களில், பலருக்கு ஆதார் அட்டை இன்னும் கிடைக்கவில்லை. மேலும், தபால் துறை ஒத்துழைப்பு முழு மையாக இல்லாததால், ஆதார் அட்டை கிடைப்பதிலும் தாமதம் நிலவுகிறது.சில கிராமங்களில், உடற்கூறு பதிவு செய்தவர்களுக்கு ரசீது வழங்கப்படவில்லை; பெறப்பட்ட ரசீதை தொலைத்தவர்கள், ஆதார் பதிவுக்கான மேல்நட வடிக்கை விவரங்களை தெரிந்து கொள்ள முடியாமல் அவதிப்படுகின்றனர். மொபைல் போன் எண்களை தவறாக பதிவு செய்தல் அல்லது, வேறு மொபைல் எண் பயன்படுத்துவதால், ஆதார் அட்டை விவரங்களை தெரிந்துகொள்ள முடியாமல், பொதுமக்கள் திண்டாடுகின்றனர்.

இதுவரை உடற்கூறு பதிவு செய்து, அட்டை கிடைக்காதவர்களின் நலன் கருதி, ஆதார் பதிவு விவரங்கள், அந்தந்த இணைப்பு எண்களுடன் பட்டியலிடப்பட்டு உள்ளது. வரும் 12 முதல், அனைத்து ஆதார் மையங்களிலும், இணைப்பு எண் விவரங்கள் அடங்கிய பட்டியல், பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்படும். மக்கள் தொகை கணக்கெடுப்பின்போது வழங்கப்பட்ட ரசீது, உடற்கூறு பதிவின்போது வழங்கப்பட்ட ரசீது உள்ளிட்ட விவரங்களுடன் சென்று, பட்டியலை பார்வையிட்டு, ஆதார் அட்டை குறித்த விவரங் களை தெரிந்து கொள்ளலாம், என, ஆதார் பதிவு அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.

Popular posts from this blog

மாணவர்களுக்கு 'லேப்டாப்' டிசம்பருக்குள் கிடைக்கும்

இலவச, 'லேப்டாப்' வழங்கும் திட்டத்தை, டிசம்பர் மாதத்திற்குள் முடிக்கும்படி, அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டம், 2011ல் துவக்கப்பட்டது. முதல், இரண்டு ஆண்டுகள், அரசு மற்றும் அரசு உதவி

கணக்கெடுப்பு ! : பள்ளி செல்லா மாணவர்கள்...: ஏப்., 7ம் தேதி முதல் துவக்கம்

கடலூர் மாவட்டத்தில், அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், பள்ளி செல்லா மற்றும் பள்ளியை விட்டு இடைநின்ற மாணவ, மாணவிகள் குறித்த விவரங்கள் கணக்கெடுக்கும் பணி வரும் 7ம் தேதி, துவங்குகிறது. தமிழகத்தில், ஆண்டுதோறும் அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், 6 வயது முதல் 14 வயதுக்குட்பட்ட பள்ளி செல்லா மற்றும் பள்ளியை விட்டு

10ம் வகுப்பு கணிதத்தேர்வில் போனஸ் மதிப்பெண்

பத்தாம் வகுப்பு தேர்விற்கான விடைத்தாள்கள் திருத்தும் பணி நடக்கிறது. பத்தாம் வகுப்பு கணிதத்தேர்வில், 'ஏ' பிரிவு ஒரு மதிப்பெண் வினாவிற்கான 15 வது கேள்வியில் ஆங்கில வழி வினா தவறாக கேட்கப்பட்டுள்ளதா