Skip to main content

குரூப்-1 தேர்வு இந்த மாதம் அறிவிப்பு வெளியிடப்படும் என்று டி.என்.பி.எஸ்.சி. தலைவர் பேட்டி

துணை கலெக்டர், போலீஸ் துணை சூப்பிரண்டு உள்ளிட்ட 60 பணியிடம் கொண்ட புதிய குரூப்-1 தேர்வு இந்த மாதம் அறிவிப்பு வெளியிடப்படும் என்று டி.என்.பி.எஸ்.சி. தலைவர் பேட்டி

  துணை கலெக்டர், துணை போலீஸ் சூப்பிரண்டு உள்ளிட்ட 60 பணியிடங்களைநிரப்புவதற்கான தேர்வு அறிவிப்பு இந்த
மாதம் வெளியிடப்படும் என்று தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணைய தலைவர் சி.பாலசுப்பிரமணியன் தெரிவித்தார்.
சென்னை ஐகோர்ட்டில் தட்டச்சுப்பணியாளர்கள் 139 பணியிடங்களுக்கு 383பேர்களை அழைத்து சான்றிதழ் சரிபார்த்தல் பணி நேற்று பிராட்வே அருகே உள்ள தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணைய அலுவலகத்தில் தொடங்கியது. அப்போது தேர்வாணைய தலைவர் (பொறுப்பு) சி.பாலசுப்பிரமணியன் நிருபர்களிடம் கூறியதாவது:-

சான்றிதழ் சரிபார்த்தல் 

தட்டச்சு பணியாளர்களுக்கு சான்றிதழ் சரிபார்த்தல் பணி நேற்று தொடங்கியது. அது இன்று(செவ்வாய்க்கிழமை) முடிவடைகிறது. தோட்டக்கலை அதிகாரிகளுக்கான சான்றிதழ் சரிபார்த்தல் கடந்த (மார்ச்) மாதம் 30-ந்தேதி முதல் நடைபெற்று வருகிறது. அதுவும் இன்று முடிகிறது. மேலும் குரூப்-2 தேர்வில்தேர்ச்சி பெற்றவர்களுக்கான சான்றிதழ் சரிபார்த்தல் கடந்த மாதம் 26-ந்தேதி முதல் நடைபெற்று வருகிறது. இது மே மாதம் 8-ந்தேதி முடிவடைகிறது. 3 சான்றிதழ் சரிபார்ப்பும் நடைபெறுவதால் 27 பெஞ்சுகள் போடப்பட்டு 250 ஊழியர்கள் இந்த பணியில் ஈடுபட்டுள்ளனர்.மாவட்ட கல்வி அதிகாரி பணியிடங்களை நிரப்ப ஏற்கனவே தேர்வு நடத்தப்பட்டு நேர்முகத்தேர்வும் முடிந்துவிட்டது. வேலைக்கு தேர்ந்து எடுக்கப்பட்டோர் பட்டியல் இந்த வாரத்திற்குள் வெளியிடப்படும். குருப்-1 , குரூப்-2 தேர்வுகள் இந்த மாதம் அறிவிப்புதமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தி தேர்ந்து எடுக்கும் பதவிகளில்பெரிய பதவி துணை கலெக்டர், துணை சூப்பிரண்டு ஆகிய பதவிகள் ஆகும். 13 துணை கலெக்டர் பணியிடங்களும், 25 துணை சூப்பிரண்டு பணியிடங்கள் உள்பட மொத்தம் 60-க்கும் மேற்பட்ட பணியிடங்களுக்கு குருப்-1 தேர்வு நடத்தப்பட உள்ளது. இந்த தேர்வுக்கான அறிவிப்பு இந்த மாதத்திற்குள் வெளியிடப்படும். அதுபோல நேர்முகத்தேர்வு கொண்ட குரூப்-2 தேர்வுக்கு காலிப்பணியிடங்கள் ஆயிரத்துக்கும் மேற்பட்டவை உள்ளன. இந்த எண்ணிக்கையை விட கூடுதலாக வரலாம். இந்த அறிவிப்பும் இந்த மாதத்திற்குள் வர இருக்கிறது. இந்த தேர்வு முறையில்மாற்றம் கொண்டு வரலாமா? என்று பரிசீலனை நடந்து வருகிறது. 

இந்த மாதத்திற்குள் வெளியீடு

ஏற்கனவே குருப்-4 தேர்வு நடந்து முடிந்துவிட்டது. அந்த தேர்வை 10 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் எழுதினார்கள். ஆவலுடன் தேர்வு முடிவு எப்போது வரும் என்று தேர்வு எழுதியவர்கள் காத்திருக்கிறார்கள். இந்த முடிவும் இந்த மாதத்திற்குள் வர இருக்கிறது. இவ்வாறு சி.பாலசுப்பிரமணியன் தெரிவித்தார்.

Popular posts from this blog

அகஇ - 100% வாசித்தல் திறன் பெற்ற பள்ளிகளுக்கு ஊக்கத்தொகை - செயல்முறைகள்

அகஇ - 100% வாசித்தல் திறன் பெற்ற பள்ளிகளுக்கு ஊக்கத்தொகை - இயக்குனர் செயல்முறைகள்

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய யோகா

               சிபிஎஸ்இ பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் 40 முதல் 45 நிமிடங்கள் கட்டாய யோகா பயிற்சி அளிக்