Skip to main content

விருதுநகர் ஓய்வூதியதாரர்கள் உரிய ஆவணங்களுடன் கருவூலங்களில் ஆஜராக உத்தரவு


மாவட்டக் கருவூலங்கள் மற்றும் சார் கருவூலங்கள் மூலம் ஓய்வூதியம் பெறும், ஓய்வூதியர்கள் அனைத்து ஆவணங்களுடன் நேரில் ஆஜராக வேண்டும் என ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். 
இது தொடர்பாக ஆட்சியர் வே.ராஜாராமன் சனிக்கிழமை வெ
ளியிட்டுள்ள  செய்திக்குறிப்பு:
மாவட்ட கருவூலம் மற்றும் சார் நிலை கருவூலங்களில் ஓய்வூதியம் பெறுவோருக்கு நிகழாண்டுக்கான நேர்காணல் ஏப்ரலில் தொடங்கி ஜூன் 15-ம் தேதி  வரையில் வங்கி வாரியாக நடைபெற இருக்கிறது. மேலும், ஓய்வூதியர்கள் ஓய்வூதியம் வழங்கும் அலுவலகத்துக்கு வருகிற போது ஓய்வூதியப் புத்தகம், வங்கி சேமிப்பு கணக்கு எண், வருமான வரி கணக்கு எண், குடும்ப அடையாள அட்டை, ஆதார் அட்டை, செல்லிடப்பேசி எண், இ.மெயில் முகவரி மற்றும் மறுமணம் புரியா சான்று ஆகியவைகளின் நகல்களுடன் ஆஜராக வேண்டும்.
இதில், பாரத ஸ்டேட் வங்கியில் ஓய்வூதியம் பெறுவோருக்கு ஏப்.1-ம் தேதி முதல் 15ம் தேதி வரையிலும், இந்தியன் வங்கி, கனரா வங்கி, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, இதர வங்கிகளில் ஓய்வூதியம் பெறுவோர் ஏப்.16-ம் தேதி முதல் 30ம் தேதி வரையிலும் கருவூலத்தில் ஆஜராக வேண்டும். அதைத் தொடர்ந்து மே-1 முதல் 30ம் வரையில் அனைத்து வங்கிகளிலும் கணக்கு வைத்திருப்போர் மற்றும் விடுபட்டோர் சம்பந்தப்பட்ட மாவட்ட கருவூலம், சார் கருவூலங்களில் நேரில் ஆஜராக வேண்டும். மேலும், நேரில் வர இயலாத ஓய்வூதியர்கள் வாழ்வு சான்று உரிய படிவத்தில் மேற்குறிப்பிட்ட 5 ஆவணங்களின் நகல்களை ஓய்வூதிய அலுவலகத்துக்கு அனுப்ப வேண்டும். இந்த நகல்களில் ஓய்வூதிய வங்கிக் கணக்கு உள்ள கிளை மேலாளர் (அல்லது) அரசிதழ் பதிவு பெற்ற மாநில மற்றும் மத்திய அரசு அலுவலர் (அல்லது) வட்டாட்சியர், துணை வட்டாட்சியர் அல்லது வருவாய் ஆய்வாளர் ஆகியோரிடம் சான்றொப்பம் பெற்று அனுப்ப வேண்டும். ஓய்வூதியர்கள் ஏப்ரல் முதல் ஜூன் வரை நேர்காணலுக்கு வரத் தவறினாலோ அல்லது சான்றொப்பம் செய்யப்பட்ட வாழ்வுச் சான்றினை அனுப்பத் தவறினாலோ அந்த  ஓய்வூதியதாரர்களின் ஓய்வூதியம் ஆகஸ்டு மாதம் முதல் நிறுத்தப்படும் என தெரிவித்துள்ளார்.

Popular posts from this blog

அகஇ - 100% வாசித்தல் திறன் பெற்ற பள்ளிகளுக்கு ஊக்கத்தொகை - செயல்முறைகள்

அகஇ - 100% வாசித்தல் திறன் பெற்ற பள்ளிகளுக்கு ஊக்கத்தொகை - இயக்குனர் செயல்முறைகள்

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய யோகா

               சிபிஎஸ்இ பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் 40 முதல் 45 நிமிடங்கள் கட்டாய யோகா பயிற்சி அளிக்