Skip to main content

மிகுந்த வரவேற்பை பெற்று வரும் அஞ்சலக செல்வ மகள் சேமிப்பு கணக்கு திட்டம்


மிகுந்த வரவேற்பை பெற்று வரும் அஞ்சலக செல்வ மகள் சேமிப்பு கணக்கு திட்டம்: தமிழகத்தில் 2.50 லட்சம் கணக்குகள் தொடக்கம்

இந்திய அஞ்சல் துறையால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள செல்வ மகள் சேமிப்பு கணக்குத் திட்டம் (சுகன்யா சம்ருத்தி யோஜனா) மக்களின் பெரும் வரவேற்பை பெற்று மிகக் குறுகிய காலத்திலேயே தமிழகத்தில் ஏற
த்தாழ 2.50 லட்சம் கணக்குகள் தொடங்கப் பட்டுள்ளன.
பெண் குழந்தைகளின் எண் ணிக்கை குறைந்து வருவதைத் தடுக்கவும், அவர்களுக்கு உயர் கல்வி கிடைப்பதை உறுதி செய்யும் வகையிலும் மத்திய அரசு இந்திய அஞ்சல்துறை சார்பில் சுகன்யா சம்ருத்தி யோஜனா என்ற சேமிப்புத் திட் டம் தொடங்கப்பட்டது.தமிழகத்தில் சென்னை, மதுரை, திருச்சி, கோவை ஆகிய அஞ்சல் துறையின் 4 மண்டலங்களிலும் பிப்ரவரி மாதத்தில் இந்த திட் டம் தொடங்கப்பட்டது. இதில் நேற்று (மார்ச் 25) வரை ஏறத் தாழ 2.50 லட்சம் கணக்குகள் தொடங்கப்பட்டுள்ளன.

திட்டத்தின் சிறப்பு அம்சம்

அனைத்து அஞ்சல் கிளை அலு வலகங்களிலும் இந்த கணக்கை தொடங்கலாம். கணக்கு தொடங்க பெண் குழந்தையின் பிறப்புச் சான்றிதழ், முகவரி சான்றிதழ், அடையாளச்சான்று ஆகியவற்றை கொண்டு செல்ல வேண்டும்.10 வயதுக்குள் இருக்கும் பெண் குழந்தைகள் பெயரில் அவர்களது பெற்றோரோ அல்லது பாதுகாவலரோ இந்த கணக்கை தொடங்கலாம். ஒரு பெற்றோர் அதிகபட்சமாக 2 பெண் குழந்தைகளுக்கு மட்டுமே கணக்கு தொடங்க முடியும்.கணக்கு தொடங்கியதிலிருந்து 14 ஆண்டுகளுக்கு பணம் செலுத்த வேண்டும். 21-வது ஆண்டில் கணக்கு முதிர்வடை யும். அப்போது கணக்கில் சேர்ந் துள்ள பணத்தை அந்த பெண் குழந்தையே எடுத்துக் கொள்ள லாம். கணக்கு வைத்துள்ள பெண் ணுக்கு 18 வயது நிரம்பினால், அவரது கல்வி மற்றும் திருமண செலவுக்காக கணக்கில் உள்ள தொகையில் 50 சதவீதத்தை பெற் றுக்கொள்ளும் வாய்ப்புள்ளது.முதலில் ரூ.1,000 செலுத்தி கணக்கு தொடங்க வேண்டும். தொடர்ந்து ரூ.100 மடங்கில் எவ்வளவு வேண்டுமானாலும் செலுத்தலாம். 

இந்த திட்டம் குறித்து திருச்சி மண்டல அஞ்சல் துறை தலைவர் ஜெ.டி.வெங்கடேஸ்வரலு கூறியதாவது:

இத்திட்டத்தின் முக்கிய சிறப்பம்சமாக நிகழ் நிதியாண்டில் 9.1 சதவீத வட்டி வழங்கப்படுகிறது. தற்போதுள்ள சிறுசேமிப்புத் திட்டங்களிலேயே அதிக வட்டி வழங்கப்படும் திட்டம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், இந்த கணக்கில் செலுத்தப்படும் தொகைக்கு 80 சி பிரிவின் கீழ் வருமான வரியிலிருந்து விலக்கு பெறலாம்.தற்போது இந்த திட்டத்தின்கீழ் கணக்கு தொடங்குவதற்கு முக்கிய அஞ்சல் அலுவலகங்களில் தனி கவுன்ட்டர்கள் திறக்கப்பட்டுள்ளன என்றார்.

மூன்றரை மடங்கு முதிர்வுத்தொகை

உதாரணமாக, மாதந்தோறும் ரூ.1,000 வீதம் ஆண்டுக்கு ரூ.12,000 செலுத்தினால் 14 ஆண்டுகள் நிறைவில் நாம் செலுத்திய ரூ.1.68 லட்சம் வட்டியுடன் சேர்த்து ரூ.3.30 லட்சமாக இருக்கும். இந்த கணக்கு 21-வது ஆண்டில் நிறைவடையும்போது முதிர்வுத் தொகையாக ரூ.6.07 லட்சம்பெறலாம். இது உத்தேசமான கணக்கு தான். வட்டி விகிதம், செலுத்தும் தொகை அதிகமாகும்போது முதிர்வுத் தொகையும் அதிகரிக்கும். 

Popular posts from this blog

அகஇ - 100% வாசித்தல் திறன் பெற்ற பள்ளிகளுக்கு ஊக்கத்தொகை - செயல்முறைகள்

அகஇ - 100% வாசித்தல் திறன் பெற்ற பள்ளிகளுக்கு ஊக்கத்தொகை - இயக்குனர் செயல்முறைகள்

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய யோகா

               சிபிஎஸ்இ பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் 40 முதல் 45 நிமிடங்கள் கட்டாய யோகா பயிற்சி அளிக்