Skip to main content

குறுவள மைய பயிற்சி நாள்களை ஈடுசெய் விடுப்பாக எடுத்துக் கொள்ளலாம்


            பள்ளி விடுமுறை நாள்களில் நடைபெறும் பள்ளித் தொகுப்பு கருத்தாய்வு மைய பயிற்சி (சிஆர்சி) வகுப்பில் பங்கேற்கும் ஆசிரியர்கள் அதனை ஈடுசெய் விடுப்பாக எடுத்துக்கொள்ளலாம் என்று பள்ளிக்
கல்வித் துறை அறிவித்துள்ளது. இதுகுறித்து பள்ளிக் கல்வித் துறை செயலர் வெளியிட்ட அரசாணையில் கூறியுள்ளது:


           அனைவருக்கும் கல்வித் திட்டத்தின் கீழ் பள்ளித் தொகுப்பு கருத்தாய்வு மையங்களில் செயல்வழிக் கற்றல் பயிற்சி (ஏபிஎல்) பெறும் தொடக்கப் பள்ளி ஆசிரியர்கள், படைப்பாற்றல் கல்விப் பயிற்சி (ஏஎல்எம்) பயிற்சி பெறும் 6-8-ஆம் வகுப்பு ஆசிரியர்கள் ஓராண்டில் பயிற்சி பெறும் 10 நாள்களையும் 10 பணி நாள்களாகக் கருதலாம் என்றும், அந்த 10 நாள்களும் பள்ளிச் செயல்பட நிர்ணயிக்கப்பட்டுள்ள 220 பணிநாள்களுக்குள் அடங்கும் வகையில் அனுமதிக்கலாம் எனவும் ஆணையிடப்படுகிறது.
             பள்ளித் தொகுப்பு கருத்தாய்வு மைய பயிற்சிகளில் கலந்துகொள்ளும் தொடக்க நிலை, நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி ஆசிரியர்களுக்கும் பொருந்தும் எனவும் திருத்தம் செய்யப்படுகிறது.

                  அதாவது இத்தகைய ஆசிரியர்களுக்கு வழங்கப்படும் பயிற்சிகளை ஆசிரியர் பணிக்கு குந்தகம் இல்லாமல் பணி நாள்களில் வழங்க கருதவேண்டும். ஆசிரியர்களுக்கு வழங்கப்படும் பயிற்சிகளில் பங்கேற்கும் நாள்கள் பணிநாள்களாக இருப்பின் பணி நாள்களாகவே கருதலாம். விடுமுறை நாள்களாக இருப்பின் 10 நாள்களுக்கு மிகாமல் அதனை ஈடுசெய் விடுப்பாக (சிறப்பு தற்செயல் விடுப்பு) அனுமதிக்கலாம் என கூறப்பட்டுள்ளது.

Popular posts from this blog

மாணவர்களுக்கு 'லேப்டாப்' டிசம்பருக்குள் கிடைக்கும்

இலவச, 'லேப்டாப்' வழங்கும் திட்டத்தை, டிசம்பர் மாதத்திற்குள் முடிக்கும்படி, அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டம், 2011ல் துவக்கப்பட்டது. முதல், இரண்டு ஆண்டுகள், அரசு மற்றும் அரசு உதவி

கணக்கெடுப்பு ! : பள்ளி செல்லா மாணவர்கள்...: ஏப்., 7ம் தேதி முதல் துவக்கம்

கடலூர் மாவட்டத்தில், அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், பள்ளி செல்லா மற்றும் பள்ளியை விட்டு இடைநின்ற மாணவ, மாணவிகள் குறித்த விவரங்கள் கணக்கெடுக்கும் பணி வரும் 7ம் தேதி, துவங்குகிறது. தமிழகத்தில், ஆண்டுதோறும் அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், 6 வயது முதல் 14 வயதுக்குட்பட்ட பள்ளி செல்லா மற்றும் பள்ளியை விட்டு

10ம் வகுப்பு கணிதத்தேர்வில் போனஸ் மதிப்பெண்

பத்தாம் வகுப்பு தேர்விற்கான விடைத்தாள்கள் திருத்தும் பணி நடக்கிறது. பத்தாம் வகுப்பு கணிதத்தேர்வில், 'ஏ' பிரிவு ஒரு மதிப்பெண் வினாவிற்கான 15 வது கேள்வியில் ஆங்கில வழி வினா தவறாக கேட்கப்பட்டுள்ளதா