Skip to main content

வந்தாச்சு பிட் அடிப்பதிலும் லேட்டஸ்ட் தொழில்நுட்பம்!

'பிட் அடித்து வாழ்வரே வாழ்வார் மற்றவரெல்லாம் பெயில் ஆகி போவார் 'என்ற பிட்டுலகின் பொன்மொழியில் நவீன பொன்மொழி 'அகர முதல பிட்டெல்லாம் வாட்ஸ் அப் பிட்டாகுமா? 'என்பதே. லேட்டஸ்ட் technology என நாம் நினைத்திருப்பதை சீனர்கள் சில வருடங்களுக்கு முன்னரே செ
ய்து விட்டார்கள். நாம்தான் இதிலும் லேட்.
உலகிலேயே சீனாவில் உள்ள மாணவர்கள்தான் மிகவும் அதி நவீன  தொழில் நுட்பத்தை பயன்படுத்தி  (HI TECH), பரீட்சையில் பிட் அடிக் கிறார்கள் என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 


இவர்களிடம்தான் ஜேம்ஸ் பாண்ட் ஸ்டைல்(007) ஜாக்கெட் உள்ளதாம். அதில் சிறிய கேமரா, தொலைபேசி, ஒட்டுக் கேட்கும் கருவி (காதுக்குள் மாட்டுவது) எல்லாம் இருக்கிறது.மேலும் சிறிய ரக பேனாவில் உள்ள கேமராவில்  பரீட்சைப் பேப்பரை அப்படியே படம் எடுத்து, வெளியே உள்ள நபர்களுக்கு அனுப்புகிறார்கள். வெளியே உள்ள நபர்கள் அதனை வாசித்து, உடனே பதிலை சொல்ல, காதுகளில் உள்ள சிறிய உள்வாங்கியில் அதனைக் கேட்டு எழுதுகிறார்கள் மாணவர்கள். இதற்கு மேல் ஒரு படி மேலேபோய், புற ஊதாக் கதிர்கள்(அல்ரா வைலட்) பேனாக்களை கொண்டு, விடை களை கைகளில் எழுதிக்கொண்டு, தேர்வு அகு சென்றுவிடுகிறார்களாம்பேனாவில் உள்ள புற ஊதாக் கதிர்களை கண்டறியும் லைட்டை  அடித்து பார்த்தால் கைகளில் உள்ள விடை தெரிந்துவிடுமாம். ஆனால் இவர்கள் கைகளில் என்ன எழுதி வைத்திருக்கிறார்கள் என்று சாதாரண கண்களால் பார்த்தால் எதுவும் தெரியாது. இப்படி அதி கூடிய தொழில் நுட்பத்தை கண்டுபிடித்து  பிட் அடிக்கிறார்கள் சீன மாணவர்கள். இதனால் சீனாவில் பெரிய பரீட்சைகள் நடக்கும்போது போலீசார் அழைக்கப்பட்டு பலத்த சோதனைகள் நடத்தப்பட்டு, இதன் பின்னரே மாணவர்கள்   உள்ளே அனுமதிக்கப்படுகிறார்கள். பரீட்சைக்கு எப்படி பிட் அடிக்க முடியும் என்று சொல்லித்தர மற்றும் அதற்கான பொருட்களை விற்க என்று அங்கே பல கடைகள் உள்ளனவாம். இதற்காக நம்நாட்டின் பிட்டுலகின் பிதாமகர்கள் அங்கே போய் பயிற்சி எடுக்க நினைத்தாலும் ஆச்சரியப்பட வேண்டாம்

Popular posts from this blog

ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம்

கருவூலம் மற்றும் கணக்குத்துறை முதன்மைச் செயலர் தகவல் வரும் நவம்பர் முதல் அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம் பெறுவதற்கான ஆணை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என கருவூலத்துறை முதன்மைச் செயலரும், ஆணையருமான தென்காசி சு. ஜவஹர் தெரிவித்தார்.தமிழ்நாடு கருவூலக் கணக்குத் துறை சார்பில், திண்டுக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனித வள மேலாண்மைத் திட்டத்தின் மூலம் பணம் பெற்று வழங்கும் அலுவலர்களுக்கான பயிற்சிக் கூட்டம் திங்கள்கிழமை தொடங்கியது. 6 நாள்கள் நடைபெறும் இப்பயிற்சி முகாமிற்கு திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் டி.ஜி. வினய் தலைமை வகித்தார். முகாமை கருவூல கணக்குத்துறை முதன்மைச் செயலர் மற்றும் ஆணையர் ஜவஹர்தொடக்கி வைத்துப் பேசியது: கடந்த 1964-ஆம் ஆண்டு முதல் தனித்துறையாகச் செயல்பட்டு வரும் கருவூலத்துறைக்கு தமிழகம் முழுவதும் 294 அலுவலகங்களும், தில்லியில் ஒரு அலுவலகமும் உள்ளன. அரசு ஊழியர்களுக்கான ஊதியம், நலத்திட்ட உதவித் தொகை, நிவாரணத் தொகை உள்ளிட்ட பல்வேறு பணிகளை கருவூலத் துறை மேற்கொண்டு வருகிறது. தமிழகம் முழுவதும் 9 லட்சம் அரசு ஊழியர்களின் பணிப் பதிவேடு...

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய யோகா

               சிபிஎஸ்இ பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் 40 முதல் 45 நிமிடங்கள் கட்டாய யோகா பயிற்சி அளிக்

அரசு துறைகள் மீது புகாரா? இனி ஆதார் எண் தேவை

 'அரசுத் துறைகள் குறித்து, ஆன்லைனில் புகார்களை பதிவு செய்வோர், இனி, ஆதார் எண்ணைக் குறிப்பிட வேண்டும்' என, மத்திய அரசு அறிவித்துள்ளது. நாடு முழுவதும் உள்ள அரசுத் துறைகள் மீதான புகார்கள் மற்றும் ஆலோசனைகளை,  www.pgportal.nic.in என்ற இணையதளத்தில் பதிவு