Skip to main content

முதியோர், ஊனமுற்றோர் உதவித்தொகைக்கு இனி ஆதார் எண் அவசியம்


ஆதார் எண் உள்ளவர்களுக்கு மட்டும் முதியோர், ஊனமுற்றோர், விதவை உதவித்தொகை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
சமூகப் பாதுகாப்புத் திட்டத்தின்கீழ் முதியோர், விதவையர், ஊனமு
ற்றோர், கணவரால் கைவிடப்பட்டோர், முதிர்கன்னி உதவித் தொகை, உழவர் பாதுகாப்புத் திட்ட உதவித் தொகை வழங்கப்படுகிறது. இந்த உதவித் தொகை பெறும் பயனாளிகள் தங்களது ஆதார் எண்ணைப் பதிவு செய்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக மாவட்ட ஆட்சியர் எல்.சுப்பிரமணியன் வெளியிட்டுள்ள செய்தி:
சமூகப் பாதுகாப்புத் திட்டத்தின்கீழ் ரூ.1000 மாதாந்திர உதவித் தொகை பெறுபவர்கள் தங்களது ஆதார் எண்ணை கண்டிப்பாகப் பதிவு செய்ய வேண்டும். இந்த பயனாளிகள் தங்களுக்கு வழங்கப்பட்ட உதவித் தொகை உத்தரவு மற்றும் ஆதார் அட்டை நகலை சம்பந்தப்பட்ட கிராம நிர்வாக அலுவலர், வருவாய் ஆய்வாளர் அல்லது சமூகப் பாதுகாப்புத் திட்ட தனிவட்டாட்சியரிடம் ஒப்படைக்க வேண்டும்.
ஆதார் எண் இல்லாதவர்கள், புகைப்படம் எடுத்து இதுவரை ஆதார் அட்டை கிடைக்கப் பெறாதவர்கள் சம்பந்தப்பட்ட கிராம நிர்வாக அலுவலர், வருவாய் ஆய்வாளர் அல்லது சமூகப் பாதுகாப்புத் திட்ட தனிவட்டாட்சியரை நேரில் அணுகி புகைப்படம் எடுத்து உடனடியாக ஆதார் அட்டையைப் பெற்று பதிவு செய்து கொள்ளலாம். அவ்வாறு வரும்போது உதவித்தொகை உத்தரவைக் கொண்டு வருவது அவசியம். இனிவரும் காலங்களில் ஆதார் எண் பதிவு செய்த பயனாளிகளுக்கு மட்டுமே உதவித் தொகை வழங்கப்படும் என்பதால் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டு மார்ச் 20 ஆம் தேதிக்குள் ஆதார் எண் பதிவு செய்து கொள்ள வேண்டும் என்றார்.

Popular posts from this blog

அகஇ - 100% வாசித்தல் திறன் பெற்ற பள்ளிகளுக்கு ஊக்கத்தொகை - செயல்முறைகள்

அகஇ - 100% வாசித்தல் திறன் பெற்ற பள்ளிகளுக்கு ஊக்கத்தொகை - இயக்குனர் செயல்முறைகள்

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய யோகா

               சிபிஎஸ்இ பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் 40 முதல் 45 நிமிடங்கள் கட்டாய யோகா பயிற்சி அளிக்