Skip to main content

'ரூபே' அட்டைகள் மூலம் கட்டணம்


'விசா' மற்றும் 'மாஸ்டர் கார்டு' அட்டைகள் போல, 'ரூபே' பண அட்டையை பயன்படுத்தி, தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் கீழ் தகவல்களைப் பெறலாம் என, மத்திய அரசு தெரிவித்துள்ளது.

தனிப்பட்ட நபர்கள் பற்றிய தகவல்கள், ராணுவம், உளவு, பாது
காப்பு துறை தகவல்கள் தவிர்த்து, பிற தகவல்களை பொதுமக்கள் கேட்டு அறியும் பொருட்டு, 2005ம் ஆண்டு முதல், தகவல் பெறும் உரிமைச் சட்டம் அமலில் உள்ளது. தகவல்களை பெற விரும்புபவர்கள், அதற்கான மனுவுடன், நேரடியாகவோ, தபால்
மூலமோ, தகவல் கமிஷனுக்கு விண்ணப்பித்து, 10 ரூபாய் கட்டணமும் செலுத்த வேண்டும். இந்த கட்டணத்தை வங்கிகள் மூலமாகவும், கிரெடிட், டெபிட் கார்டுகள் மூலமும் செலுத்தலாம். மத்திய அரசின் அங்கீகாரம் பெற்ற, ரொக்கமில்லாத பணப்பட்டுவாடா அட்டையாக விளங்கும், ரூபே அட்டைகள் மூலம் இணையதளம் வழியாகவும், தகவல்களுக்கான கட்டணத்தை செலுத்த முடியும். இணையதளம் வழியாக, தகவல் பெற விரும்புபவர்கள், www.rtionline.gov.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கும் போது, அதற்கான தொகையை, ரூபே அட்டைகள் மூலம் செலுத்தலாம்.

Popular posts from this blog

Fast way math - Polynomial Factorization tricks ( SSLC Mathematics ) type 2

Fast way math - Polynomial Factorization tricks ( SSLC Mathematics ) type 2

மாணவர்களுக்கு 'லேப்டாப்' டிசம்பருக்குள் கிடைக்கும்

இலவச, 'லேப்டாப்' வழங்கும் திட்டத்தை, டிசம்பர் மாதத்திற்குள் முடிக்கும்படி, அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டம், 2011ல் துவக்கப்பட்டது. முதல், இரண்டு ஆண்டுகள், அரசு மற்றும் அரசு உதவி