Skip to main content

வாயை சுற்றி கொப்புளம்; குட்டீசை தாக்கும் புது நோய்: குழந்தை நிபுணர் ஆலோசனை


வாய், கை, கால்களிலும் கொப்புளங்கள் ஏற்படும் புதுவித நோய், குழந்தைகளை தாக்கத் தொடங்கி உள்ளது. 'அது அம்மை கொப்புளங்கள் அல்ல; பயம் வேண்டாம்' என, குழந்தை நல நிபுணர் குமுதா தெரி
வித்துள்ளார்.

தமிழகத்தில், கடந்த, மூன்று மாதங்களாக, டெங்கு காய்ச்சல், பன்றி காய்ச்சல் என, மக்களை பாடாய் படுத்தி வருகிறது.இப்போது, வைரஸ் பாதிப்பு காரணமாக, குழந்தைகளுக்கு, எச்.எப்.எம்.டி., (ஹேண்ட், புட் அண்ட் மவுத் டிசிஸ்) எனப்படும், வாய், கை, கால்களில் சிறு சிறு கொப்புளத்தை ஏற்படுத்தும் பாதிப்பு வருகிறது.தமிழகத்தில், இரண்டு ஆண்டுகளுக்கு முன், குழந்தைகளுக்கு இதுபோன்ற பாதிப்பு இருந்தது. தற்போது, மீண்டும் இதன் தாக்கம் தென்படுகிறது.

சென்னை, வேளச்சேரி, திருவான்மியூர் பகுதியில் சில குழந்தைகளுக்கு, இந்த பாதிப்பு வந்து, மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு சென்றுள்ளனர்.
சென்னை, எழும்பூர் அரசு மருத்துவமனை, குழந்தைகள் சிகிச்சை நிபுணர் குமுதா கூறியதாவது:'காக்ஸ்சாக்கி - ஏ' எனும் வைரஸ் தாக்கத்தால் இந்தநோய் வருகிறது. ஒன்று முதல் ஆறு வயது வரையிலான குழந்தைகளுக்கு, பலவீனம் காரணமாக வரும்.வாயைச் சுற்றி கொப்புளம் வரும்; வாயிலும் புண் வரும். கை, கால்களிலும் இதுபோன்ற பாதிப்பு வரும். சின்னம்மை கொப்புளம் போல தெரியும்; ஆனால், இது அம்மை அல்ல; பயம் வேண்டாம்; லேசான காய்ச்சலும் இருக்கும்.இரண்டு ஆண்டுகளுக்கு முன், சென்னையில் சில குழந்தைகளை பாதித்தது. தற்போது, மீண்டும் தென்படுகிறது.

கடந்த வாரம், பெற்றோர் பயந்து போய் குழந்தையுடன் ஓடி வந்தனர். 'ஒன்றும் இல்லை; பயம் வேண்டாம்' என, அனுப்பி வைத்தோம்.வாயில் புண், அதனால் ஏற்படும் எரிச்சல் காரணமாக உணவு சாப்பிடுவதில் சிரமம் ஏற்படும். கார உணவுகளை தவிர்க்க வேண்டும். திரவ உணவுகள் நல்லது.பிரத்யேக தடுப்பு மருந்து ஏதும் தேவையில்லை; ஒரு வாரத்தில் அதுவே சரியாகிவிடும்.இவ்வாறு, அவர் கூறினார்.

Popular posts from this blog

மாணவர்களுக்கு 'லேப்டாப்' டிசம்பருக்குள் கிடைக்கும்

இலவச, 'லேப்டாப்' வழங்கும் திட்டத்தை, டிசம்பர் மாதத்திற்குள் முடிக்கும்படி, அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டம், 2011ல் துவக்கப்பட்டது. முதல், இரண்டு ஆண்டுகள், அரசு மற்றும் அரசு உதவி

கணக்கெடுப்பு ! : பள்ளி செல்லா மாணவர்கள்...: ஏப்., 7ம் தேதி முதல் துவக்கம்

கடலூர் மாவட்டத்தில், அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், பள்ளி செல்லா மற்றும் பள்ளியை விட்டு இடைநின்ற மாணவ, மாணவிகள் குறித்த விவரங்கள் கணக்கெடுக்கும் பணி வரும் 7ம் தேதி, துவங்குகிறது. தமிழகத்தில், ஆண்டுதோறும் அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், 6 வயது முதல் 14 வயதுக்குட்பட்ட பள்ளி செல்லா மற்றும் பள்ளியை விட்டு

10ம் வகுப்பு கணிதத்தேர்வில் போனஸ் மதிப்பெண்

பத்தாம் வகுப்பு தேர்விற்கான விடைத்தாள்கள் திருத்தும் பணி நடக்கிறது. பத்தாம் வகுப்பு கணிதத்தேர்வில், 'ஏ' பிரிவு ஒரு மதிப்பெண் வினாவிற்கான 15 வது கேள்வியில் ஆங்கில வழி வினா தவறாக கேட்கப்பட்டுள்ளதா