Skip to main content

ஜாக்கோட்டா': பின்னணியில் ஆளும் கட்சி?


'ஜாக்டா' மற்றும் ஜாக்டோ' ஆசிரியர் சங்கக் கூட்டுக் குழுவுக்குப் போட்டியாக உருவாகியுள்ள, 'ஜாக்கோட்டா' என்ற குழுவினர் முதல்வரை சந்தித்துப் பேசியுள்ளனர். இதனால், ஆசிரியர் சங்கங்களை உடைக்க முயற்சி
நடக்கிறது என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

கடந்த, 2003க்குப் பின், ஆசிரியர்களின், 15 சங்கங்கள் இணைந்து 'ஜாக்டா' மற்றும்  28 சங்கங்கள் இணைந்து, 'ஜாக்டோ' ஆசிரியர் சங்க கூட்டு நடவடிக்கை குழு ஏற்படுத்தப்பட்டது. இக்குழுவினர், கோரிக்கைளை வலியுறுத்தி, தொடர் போராட்டம் அறிவித்துள்ளனர். இந்நிலையில்,  ஆசிரியர் சங்கங்களை உடைக்க, ஆளுங்கட்சி சார்பில் முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது என கூறப்படுகிறது. நேற்று, மூன்றாவது போட்டி அமைப்பாக, 'ஜாக்கோட்டா' என்ற அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. இதன் சார்பில், அகில இந்திய ஆசிரியர்கள் பேரவை பொதுச் செயலர் ஜார்ஜ் தலைமையிலான குழுவினர், முதல்வரை நேற்று சந்தித்தனர். 'ஜாக்கோட்டா'வின் மனுவில், அ.தி.மு.க., பொதுச் செயலர் ஜெயலலிதாவின் புகைப்படம் இடம் பெற்றிருந்தது.


இதுகுறித்து, 'ஜாக்கோட்டா' குழு தலைவர் ஜார்ஜ் கூறியதாவது: நாங்கள்,  போட்டியாகவோ, ஆளுங்கட்சி அமைப்பாகவோ இல்லை. தேர்வு நேரத்தில்,' போராட்டம் நடத்துவது சரியானதல்ல. அதனால், நாங்கள், 'ஜாக்கோட்டா'வை உருவாக்கியுள்ளோம். முதல்வர், கல்வி அமைச்சர் மற்றும் பிற்படுத்தப்பட்டோர் துறை அமைச்சரை சந்தித்தோம். 'ஆசிரியர்களின் கோரிக்கைகள் விரைவில் தீர்க்கப்படும்' என, அவர்கள் உறுதி அளித்துள்ளனர். இவ்வாறு, அவர் கூறினார்.

Popular posts from this blog

அகஇ - 100% வாசித்தல் திறன் பெற்ற பள்ளிகளுக்கு ஊக்கத்தொகை - செயல்முறைகள்

அகஇ - 100% வாசித்தல் திறன் பெற்ற பள்ளிகளுக்கு ஊக்கத்தொகை - இயக்குனர் செயல்முறைகள்

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய யோகா

               சிபிஎஸ்இ பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் 40 முதல் 45 நிமிடங்கள் கட்டாய யோகா பயிற்சி அளிக்