Skip to main content

சான்றிதழ்களை பாதுகாக்க 'டிஜிட்டல் லாக்கர்' அறிமுகம்


பொதுமக்களின் முக்கிய சான்றிதழ்கள், 'டிஜிட்டல்' முறையில் இருந்தால், அதை பாதுகாப்பாக வைக்க, 'டிஜிலாக்கர்' என்ற இணைய வசதியை, மத்திய அரசு அறிமுகம் செய்துள்ளது. கல்விச் சான்றிதழ்கள், வங்கி டிபாசிட் சான்றிதழ்கள் போன்ற சான்றிதழ்களை, வீடுகளில் பாதுகாப்பாக
, தாள்களாக பத்திரமாக வைத்திருப்போம்.
அது போல, அந்த சான்றிதழ்களை, டிஜிட்டல் முறையில் பாதுகாப்பாக வைக்கும் புதிய முறை அறிமுகம் இப்போது செய்யப்பட்டுள்ளது. இதற்காக, ஒரு இணையதளத்தை மத்திய அரசு அறிமுகம் செய்துள்ளது. http:/digitallocker.gov.in/ என்ற இணையதளத்திற்கு சென்று, ஆதார் எண் மற்றும் பிற தகவல்களை பதிவு செய்து, 'பீட்டா வெர்சன்' எனப்படும், டிஜிட்டல் முறையில் வைத்திருக்கும் சான்றிதழ்களை, இந்த லாக்கரில் எத்தனை ஆண்டுகள் வேண்டுமானாலும் பத்திரமாக வைத்திருக்கலாம். தற்போது இந்த வசதி, ஒவ்வொரு தனிநபர்களுக்கும், 10 எம்.பி., அளவுக்குத் தான் அனுமதிக்கப்பட்டுள்ளது. யார் இந்த சான்றிதழ்களை, இந்த டிஜிட்டல் லாக்கரில் வைக்கிறாரோ, அவர் தான் அதை எடுக்க முடியும். அதற்காக ரகசிய பாஸ்வேர்டு, குறியீடு எண்கள் போன்ற பாதுகாப்பு அம்சங்கள் உள்ளன. மகாராஷ்டிரா போன்ற சில மாநிலங்கள், தங்களுக்கு என தனியாக, டிஜிட்டல் லாக்கர் வசதியை கொண்டுள்ளன. இதில், சாதாரண தாள் வடிவில் உள்ள சான்றிதழ்களை, பாதுகாக்க முடியாது. பீட்டா வெர்சன் என்ற, கம்ப்யூட்டர் நகல் வடிவில் உள்ள சான்றிதழ்களை மட்டுமே பாதுகாப்பாக வைக்க முடியும்.

Popular posts from this blog

மாணவர்களுக்கு 'லேப்டாப்' டிசம்பருக்குள் கிடைக்கும்

இலவச, 'லேப்டாப்' வழங்கும் திட்டத்தை, டிசம்பர் மாதத்திற்குள் முடிக்கும்படி, அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டம், 2011ல் துவக்கப்பட்டது. முதல், இரண்டு ஆண்டுகள், அரசு மற்றும் அரசு உதவி

கணக்கெடுப்பு ! : பள்ளி செல்லா மாணவர்கள்...: ஏப்., 7ம் தேதி முதல் துவக்கம்

கடலூர் மாவட்டத்தில், அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், பள்ளி செல்லா மற்றும் பள்ளியை விட்டு இடைநின்ற மாணவ, மாணவிகள் குறித்த விவரங்கள் கணக்கெடுக்கும் பணி வரும் 7ம் தேதி, துவங்குகிறது. தமிழகத்தில், ஆண்டுதோறும் அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், 6 வயது முதல் 14 வயதுக்குட்பட்ட பள்ளி செல்லா மற்றும் பள்ளியை விட்டு

10ம் வகுப்பு கணிதத்தேர்வில் போனஸ் மதிப்பெண்

பத்தாம் வகுப்பு தேர்விற்கான விடைத்தாள்கள் திருத்தும் பணி நடக்கிறது. பத்தாம் வகுப்பு கணிதத்தேர்வில், 'ஏ' பிரிவு ஒரு மதிப்பெண் வினாவிற்கான 15 வது கேள்வியில் ஆங்கில வழி வினா தவறாக கேட்கப்பட்டுள்ளதா