Skip to main content

கோவையில் எரிசக்தி விழிப்புணர்வு கண்காட்சி

தமிழ்நாடு எரிசக்தி மேம்பாட்டு முகமை சார்பில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி விழிப்புணர்வு கண்காட்சி கோவையில், இன்று தொடங்கி 16–ந்தேதி வரை நடக்கிறது
தமிழ்நாடு எரிசக்தி மேம்பாட்டு முகமை சார்பில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி விழிப்புணர்வு கண்காட்சி கோவையில் இன்று தொடங்கி 16–ந்தேதி
வரை நடக்கிறது.

தமிழக அரசு அறிவிப்பு
இதுகுறித்து தமிழக அரசு நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:–
புதுப்பிக்கத்தக்க எரிசக்தியை மேம்படுத்துவதில் தமிழ்நாடு அரசின் சீரிய வழிகாட்டுதலின் படி தமிழ்நாடு எரிசக்தி மேம்பாட்டு முகமை சிறப்பாக செயல்பட்டு வருகிறது. புதுப்பிக்கத்தக்க எரிசக்தியில் தமிழ்நாட்டின் பங்கு நாட்டின் மொத்த நிறுவுதிறனில் 32 சதவீதமும் நாட்டின் காற்று சக்தி நிறுவு திறனில் தமிழ்நாடு முதன்மை மாநிலமாகவும் உள்ளது.
தமிழ்நாட்டினை சூரிய சக்தியில் முதன்மை மாநிலமாக மாற்றும் உயரிய நோக்கத்தோடும், சூரிய சக்தியை மக்கள் இயக்கமாக மாற்றும் நோக்கோடும் ஜெயலலிதா தமிழ்நாடு சூரிய சக்தி கொள்கை 2012 ஐ தொடங்கி வைத்துள்ளார்.

தொழில்நுட்ப கருத்தரங்கு
மேலும், இந்த நோக்கத்தை விரிவுபடுத்தும் வகையில், தமிழ்நாடு அரசின் விஷன் 2023–ல் புதுப்பிக்கத்தக்க எரிசக்தியில் 15,000 MW குறியீடு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இக்குறியீட்டினை விரைவில் அடையும் விதமாக தமிழ்நாடு எரிசக்தி மேம்பாட்டு முகமை பல்வேறு திட்டங்களான முதலமைச்சரின் சூரிய மேற்கூரைத் திட்டம் முதலமைச்சரின் சூரிய ஒளியுடன் கூடிய பசுமை வீடுகள் திட்டம், தெரு விளக்குகளை சூரிய சக்தி மூலம் மின்னூட்டுதல் போன்ற திட்டங்களை செயல்படுத்தி வருகின்றது.
தமிழ்நாடு எரிசக்தி மேம்பாட்டு முகமையும், கோயம்புத்தூர் மாவட்ட சிறு தொழில்கள் சங்கம் இணைந்து ‘ரெனர்ஜி 2015 மற்றும் எலெக்ட்ரோடெக் 2015 ’ (RENERGY 2015 ELEKTROTEC 2015) தொழில்நுட்ப கருத்தரங்கினை நடத்துகிறது. இக்கருத்தரங்கு கோவை கொடிசியா வளாகத்தில் இன்று(வெள்ளிக்கிழமை) காலை 10 மணிக்கு தொடங்கி வைக்கப்படுகிறது.

கோவை கொடிசியா வளாகம்
தமிழ்நாடு எரிசக்தி மேம்பாட்டு முகமையின் சார்பில் அமைக்கப்படும் கண்காட்சி 12,500 சதுர அடி பரப்பளவில் அமைகிறது. இக்கண்காட்சியில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தியை மக்கள் அறிந்து கொள்ளும் வகையிலும் விழிப்புணர்வு பெறும் வகையிலும் தனியார் முன்னணி நிறுவனங்களான சன் எடிசன் எனர்ஜி இந்தியா, ஸ்வலெக்ட் எனர்ஜி சிஸ்டம்ஸ், போகோஸ் இந்தியா, ஸ்ரீநந்திஸ், சுகம் பவர் சிஸ்டம்ஸ் போன்ற நிறுவனங்கள் கண்காட்சியில் பங்கேற்கின்றன.

இக்கண்காட்சி கோவை கொடிசியா வளாகத்தில் இன்று முதல் 16–ந்தேதி வரை நடைபெறுகிறது. பொதுமக்கள் பெருவாரியாக கலந்து கொண்டு பயனடையுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Popular posts from this blog

Fast way math - Polynomial Factorization tricks ( SSLC Mathematics ) type 2

Fast way math - Polynomial Factorization tricks ( SSLC Mathematics ) type 2

மாணவர்களுக்கு 'லேப்டாப்' டிசம்பருக்குள் கிடைக்கும்

இலவச, 'லேப்டாப்' வழங்கும் திட்டத்தை, டிசம்பர் மாதத்திற்குள் முடிக்கும்படி, அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டம், 2011ல் துவக்கப்பட்டது. முதல், இரண்டு ஆண்டுகள், அரசு மற்றும் அரசு உதவி