Skip to main content

பள்ளிகளில் கழிப்பறை கட்ட ஒதுக்கீடு செய்த நிதி குறித்து அறிக்கை அனுப்பவேண்டும்

பள்ளிகளில் கழிப்பறை கட்ட ஒதுக்கீடு செய்த நிதி குறித்து அறிக்கை அனுப்பவேண்டும் தமிழக அரசுக்கு, தேசிய மனித உரிமை ஆணையம் நோட்டீசு
         
பள்ளிக் கூடங்களில் கழிப்பறை கட்ட ஒதுக்கீடு செய்த நிதி குறித்த அறிக்கையை அனுப்ப வேண்டும் என்று தமிழக அரசுக்கு, தேசி
ய மனித உரிமை ஆணையம் நோட்டீசு அனுப்பி உள்ளது.

‘தி கேட்டலிஸ்ட் டிரஸ்டு’ என்ற தனியார் தொண்டு நிறுவனம் தேசிய மனித உரிமை ஆணையத்துக்கு ஒரு புகார் அனுப்பி இருந்தது. அதில் கூறப்பட்டு இருந்ததாவது:–

பெண் குழந்தைகள் பாதிப்பு
மத்திய அரசு கல்வியின் மீது மேல்வரி(செஸ்) என்று வசூலிக்கும் தொகை ஒவ்வொரு ஆண்டும் பள்ளிகளில் கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை மேம்படுத்த மாநிலங்களுக்கு வழங்கப்படுகிறது.


இந்தத் தொகை ஒவ்வொரு ஆண்டும் சரியான முறையில் செலவழிக்கப்படாமல் பள்ளிகளில் எந்தவிதமான அடிப்படை வசதிகளும் மேம்படுத்தாத நிலை தொடர்ந்து வருகிறது. இதனால் பள்ளிகளில் சரியான கழிப்பறை வசதிகள் இல்லாத நிலையில் பெண் குழந்தைகள் மிகவும் அதிகமான பாதிப்புக்கு உள்ளாகின்றனர்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.

பரிசீலனைக்கு ஏற்பு
இந்தப் புகாரை தேசிய மனித உரிமை ஆணையம் பரிசீலனைக்கு ஏற்றுக் கொண்டது.

மேலும் இந்த புகார் தொடர்பாக விளக்கம் கேட்டு மாநில தலைமைச் செயலாளர் கே.ஞானதேசிகனுக்கு நோட்டீசும் அனுப்பி உள்ளது. அதில் கூறப்பட்டு இருப்பதாவது:–

மாநில அரசின் கடமை
அரசியல் அமைப்பு சட்டம் பிரிவு 21ஏ வழங்கும் அடிப்படை உரிமையின்படி பள்ளிகளில் பயிலும் மாணவ மாணவிகள் அனைவரும் கல்வி கற்கும் இடங்களில் தேவையான அடிப்படை வசதிகளைப் பெறவேண்டும்.
இந்த அடிப்படை உரிமையை மாணவ மாணவியருக்கு அளிக்க வேண்டியது மாநில அரசின் கடமை. மத்திய அரசு விதிக்கும் கல்வி மீதான மேல்வரியில் இருந்து ஒதுக்கீடு செய்யப்படும் நிதியானது அதற்கான நோக்கத்துக்காக சரியான முறையில் பயன்படுத்தப்படுகிறதா? என்பதை உறுதி செய்ய வேண்டியது மாநில அரசின் கடமையாகும்.

4 வாரத்துக்குள் பதில் அளியுங்கள்
எனவே மத்திய அரசு தமிழக அரசுக்கு கல்வி மீதான மேல்வரி மூலமாக ஒதுக்கியுள்ள தொகையில் பயன்படுத்தப்படாமல் நிலுவையில் உள்ள தொகை குறித்த விவரம் மற்றும் இந்த நிதி மாநில அரசு எந்த நோக்கத்துக்குப் பயன்படுத்தி வருகிறது போன்ற விவரங்களை 4 வாரங்களுக்குள் தேசிய மனித உரிமை ஆணையத்துக்கு தலைமை செயலாளர் அறிக்கை அனுப்ப வேண்டும்.
இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

Popular posts from this blog

மாணவர்களுக்கு 'லேப்டாப்' டிசம்பருக்குள் கிடைக்கும்

இலவச, 'லேப்டாப்' வழங்கும் திட்டத்தை, டிசம்பர் மாதத்திற்குள் முடிக்கும்படி, அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டம், 2011ல் துவக்கப்பட்டது. முதல், இரண்டு ஆண்டுகள், அரசு மற்றும் அரசு உதவி

கணக்கெடுப்பு ! : பள்ளி செல்லா மாணவர்கள்...: ஏப்., 7ம் தேதி முதல் துவக்கம்

கடலூர் மாவட்டத்தில், அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், பள்ளி செல்லா மற்றும் பள்ளியை விட்டு இடைநின்ற மாணவ, மாணவிகள் குறித்த விவரங்கள் கணக்கெடுக்கும் பணி வரும் 7ம் தேதி, துவங்குகிறது. தமிழகத்தில், ஆண்டுதோறும் அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், 6 வயது முதல் 14 வயதுக்குட்பட்ட பள்ளி செல்லா மற்றும் பள்ளியை விட்டு

10ம் வகுப்பு கணிதத்தேர்வில் போனஸ் மதிப்பெண்

பத்தாம் வகுப்பு தேர்விற்கான விடைத்தாள்கள் திருத்தும் பணி நடக்கிறது. பத்தாம் வகுப்பு கணிதத்தேர்வில், 'ஏ' பிரிவு ஒரு மதிப்பெண் வினாவிற்கான 15 வது கேள்வியில் ஆங்கில வழி வினா தவறாக கேட்கப்பட்டுள்ளதா