Skip to main content

போட்டியின் முடிவை மாற்றும் `அம்பயர் கால்’! வெடிக்கும் புதிய சர்ச்சை

உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில் டிஆர்எஸ் நடைமுறையில் புதிய சர்ச்சை வெடித்துள்ளது.
டிஆர்எஸ் என்பது நடுவரின் முடிவை மறு பரிசீலனை செய்யும் நடைமுறையாகும். அதாவது கிரிக்கெட் ஆட்டத்தில் களத்திலுள்ள
இரு நடுவர்களுக்கும், விக்கெட் விவகாரத்தில் சந்தேகம் ஏற்பட்டால், மூன்றாவது நடுவரை தொடர்பு கொண்டு கேட்கலாம்.

இந்த விவகாரத்தை மூன்றாவது நடுவர் தொலைக்காட்சியில் மீண்டும் போட்டு பார்த்து முடிவை அறிவிப்பார். இந்த டிஆர்எஸ் என்னும் முறை சமீபகாலமாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

நடுவருக்கு சந்தேகம் வந்தால் மூன்றாவது நடுவரை அணுகுவதை போல, வீரர்களுக்கு நடுவர் முடிவின் மீது சந்தேகம் இருந்தால் டிஆர்எஸ் கேட்கலாம்.

நடுவர் முடிவை மறுபரிசீலனை செய்ய கோரிக்கை விடுக்கும் அதிகாரம் அணியின் அணித்தலைவர்களுக்கு தரப்பட்டுள்ளது. ஆனால் அதற்கும் எண்ணிக்கை வரைமுறை கொடுக்கப்பட்டுள்ளது.

தற்போது புதிய பிரச்சனை என்னவென்றால் `அம்பயர் கால்’ என்ற புதிய முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அதாவது, டிஆர்எஸ் முறையில் மூன்றாவது நடுவருக்கு கோரிக்கை செல்லும் போது அதனை மீண்டும் கள நடுவர்கள் மறுபரிசீலனை செய்ய முடியும்.

ஆனால் பெரும்பாலும் நடுவர்கள் தங்கள் எடுத்த முடிவு சரிதான் என்று நடந்து கொள்கின்றனர். இதனால் தற்போது விமர்சனங்கள் எழுந்துள்ளன. இந்த சர்ச்சை வெடிக்க அடுத்தடுத்த நாட்களில் நடந்த இரு தவறுகள் காரணமாக அமைந்துவிட்டன.

கடந்த செவ்வாய்க்கிழமை நடந்த போட்டியின்போது, கிறிஸ் கெயில் 215 ஓட்டங்களை குவித்து சாதனை படைத்தார். ஆனால் அந்த போட்டியில் அவர் முதல் பந்திலேயே டக்-அவுட் ஆக வேண்டியவர். இங்குதான் டிஆர்எஸ் தவறு இழைத்தது.

கிறிஸ் கெயில் சந்தித்த முதல் பந்தை ஜிம்பாப்வேயின் தினாஷே பன்யங்காரா வீசினார். அந்த பந்து கெயில் காலில் பட்டதால் எல்பிடபிள்யூ அப்பீல் செய்யப்பட்டது.

கள நடுவர் ஸ்டீவ் டேவிஸ் அதை அவுட் இல்லை என்றார். எனவே ஜிம்பாப்வே அணி சார்பில் நடுவரின் முடிவை மறு பரிசீலனை செய்ய கோரப்பட்டது. ஆனால் மூன்றாவது நடுவர் ரன்மோரே மார்டினெஸ், இதை 'அம்பயர் கால்' முறையில் தீர்க்குமாறு கூறிவிட்டார்.

கள நடுவர் தனது முந்தைய முடிவு சரிதான் என்றார். ஆனால் டிவி ரிப்ளேயில், கிறிஸ்கெயில் எல்பிடபிள்யூ ஆனது அழகாக தெரிந்தது. அந்த ஒரு தப்பான முடிவு போட்டியின் முடிவை புரட்டி போட்டுவிட்டது.

இதேபோல, நேற்று புதன்கிழமை அயர்லாந்து- ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணிகளுக்கு நடுவே நடைபெற்ற போட்டியிலும் முக்கிய கட்டத்தில் தவறு இழைக்கப்பட்டது.

எமிரேட்ஸ் அணிக்கு எதிரான இலக்கை விரட்டும் போது அரைசதம் கடந்து சிறப்பாக ஆடிவந்த அயர்லாந்தின் கேரி வில்சன் காலில் பந்து படவே, எல்பிடபிள்யூ அப்பீல் செய்யப்பட்டது.

கள நடுவர் அவுட் தர மறுக்க, முடிவை மறுபரிசீலனை செய்ய கேட்டது, எமிரேட்ஸ் அணி. ஆனால் மூன்றாம் நடுவரோ, 'அம்பயர் கால்' முறையில் பரிசீலனை செய்ய களநடுவரை கேட்டுக் கொண்டார். ஆனால் களநடுவரோ தனது முடிவில் பிடிவாதமாக இருந்தார். கேரி வில்சன் எடுத்த 80 ஓட்டங்கள் அயர்லாந்து வெற்றிக்கு காரணமானது.

டிவி ரிப்ளேயில், கேரி வில்சனின் பின்னங்காலில் பந்து பட்டு நடு ஸ்டம்பை பதம் பார்க்க வாய்ப்பு இருந்தது அழகாக தெரிந்தது.

இது போன்ற பிரச்சனைகள் தொடர்ந்து எழுந்த வண்ணம் இருக்க அம்பயர் கால் முறையை நீக்க வேண்டும் என்றும், தொழில்நுட்ப உதவியுடனேயே டிஆர்எஸ் நடைமுறை இருக்க வேண்டும் எனவும் முன்னணி வீரர்கள் குரல் கொடுக்க தொடங்கியுள்ளனர்.

Popular posts from this blog

மாணவர்களுக்கு 'லேப்டாப்' டிசம்பருக்குள் கிடைக்கும்

இலவச, 'லேப்டாப்' வழங்கும் திட்டத்தை, டிசம்பர் மாதத்திற்குள் முடிக்கும்படி, அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டம், 2011ல் துவக்கப்பட்டது. முதல், இரண்டு ஆண்டுகள், அரசு மற்றும் அரசு உதவி

கணக்கெடுப்பு ! : பள்ளி செல்லா மாணவர்கள்...: ஏப்., 7ம் தேதி முதல் துவக்கம்

கடலூர் மாவட்டத்தில், அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், பள்ளி செல்லா மற்றும் பள்ளியை விட்டு இடைநின்ற மாணவ, மாணவிகள் குறித்த விவரங்கள் கணக்கெடுக்கும் பணி வரும் 7ம் தேதி, துவங்குகிறது. தமிழகத்தில், ஆண்டுதோறும் அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், 6 வயது முதல் 14 வயதுக்குட்பட்ட பள்ளி செல்லா மற்றும் பள்ளியை விட்டு

10ம் வகுப்பு கணிதத்தேர்வில் போனஸ் மதிப்பெண்

பத்தாம் வகுப்பு தேர்விற்கான விடைத்தாள்கள் திருத்தும் பணி நடக்கிறது. பத்தாம் வகுப்பு கணிதத்தேர்வில், 'ஏ' பிரிவு ஒரு மதிப்பெண் வினாவிற்கான 15 வது கேள்வியில் ஆங்கில வழி வினா தவறாக கேட்கப்பட்டுள்ளதா