Skip to main content

குறுகிய கால கணினிப் பயிற்சி


தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மையத்தின் சார்பில் அளிக்கப்படும் குறுகிய கால கணினிப் பயிற்சி வரும் 25-ஆம் தேதி தொடங்குகிறது.
 இதுகுறித்து  தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மையத்தின்
செயல் இயக்குநர் பி.அய்யம்பெருமாள் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
மாணவர்கள், பொதுமக்கள் கணினிப் பயிற்சி பெறும் வகையில் "கணிப்பொறி அறிதல்' சான்றிதழ் பயிற்சி அளிக்கப்படுகிறது. பெரியார் அறிவியல் தொழில்நுட்ப மைய வளாகத்தில் நடைபெறும் இந்தப் பயிற்சி வகுப்பில்,
விண்டோஸ் இயக்க முறை, எம்.எஸ்.ஆபிஸ் போன்ற பயிற்சிகள் அளிக்கப்படும். இந்தப் பயிற்சி வகுப்பு வரும் 25-ஆம் தேதி தொடங்கி, 15 நாள்கள் நடைபெறும்.
மேலும் தகவல்களுக்கு 044- 24410025, 24402894, 24915250 என்ற தொலைபேசி எண்ணிற்கு தொடர்பு கொள்ளலாம்.

Popular posts from this blog

Fast way math - Polynomial Factorization tricks ( SSLC Mathematics ) type 2

Fast way math - Polynomial Factorization tricks ( SSLC Mathematics ) type 2

மாணவர்களுக்கு 'லேப்டாப்' டிசம்பருக்குள் கிடைக்கும்

இலவச, 'லேப்டாப்' வழங்கும் திட்டத்தை, டிசம்பர் மாதத்திற்குள் முடிக்கும்படி, அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டம், 2011ல் துவக்கப்பட்டது. முதல், இரண்டு ஆண்டுகள், அரசு மற்றும் அரசு உதவி