Skip to main content

சட்டப்பேரவைக் கூட்டம் இன்று தொடங்குகிறது


தமிழக சட்டப் பேரவை கூட்டத் தொடர், ஆளுநர் கே.ரோசய்யா உரையுடன் செவ்வாய்க்கிழமை  (பிப். 17) தொடங்குகிறது. கூட்டத் தொடரை எத்தனை நாள்களுக்கு நடத்துவது என்பது குறித்து பேரவை அலுவல் ஆ
ய்வுக் குழுவும் கூடி விவாதிக்கிறது.
இந்த ஆண்டின் முதல் கூட்டம் என்பதால், தமிழக சட்டப் பேரவையில் ஆளுநர் கே.ரோசய்யா செவ்வாய்க்கிழமை காலை 11.15 மணிக்கு உரையாற்றுகிறார். இதற்காக பேரவை மண்டபம், லாபி உள்ளிட்டவற்றைச் சுத்தப்படுத்தும் பணிகள் கடந்த சில நாள்களாக நடைபெற்றன. ஆளுநர் உரையாற்றிய பிறகு, பேரவை புதன்கிழமைக்கு ஒத்திவைக்கப்படும்.
இதைத் தொடர்ந்து, பேரவை கூட்டத் தொடரை எத்தனை நாள்களுக்கு நடத்துவது என்பது குறித்து விவாதிக்க, அலுவல் ஆய்வு குழுக் கூட்டம் செவ்வாய்க்கிழமை பிற்பகல் நடைபெறுகிறது. இந்தக் குழுவில் அனைத்து கட்சிகளைச் சேர்ந்த எம்.எல்.ஏ.க்கள் உறுப்பினர்களாக உள்ளனர். கூட்டத் தொடர் மூன்று அல்லது நான்கு நாள்களுக்கு நடத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நாள்களில் பேரவையில் முன்மொழியப்படும் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது விவாதம் நடத்தப்படும். இந்த விவாதத்தில் எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த உறுப்பினர்கள் உள்பட பலரும் பேசுகின்றனர். இந்த விவாதங்களுக்கு பேரவை கூட்டத் தொடரின் கடைசி நாளில் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பதிலளிப்பார்.
முக்கிய பிரச்னைகள் குறித்து விவாதம்: சட்டப் பேரவை கூட்டத் தொடரில் பல முக்கிய பிரச்னைகள் குறித்து எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பன்றிக் காய்ச்சல், ராணிப்பேட்டை தொழிலாளர் இறப்பு சம்பவம், போக்குவரத்துத் தொழிலாளர் ஊதிய உயர்வு விவகாரம் உள்பட பல்வேறு முக்கிய பிரச்னைகளை எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த உறுப்பினர்கள் எழுப்புவர் எனத் தெரிகிறது. நான்கு நாள்கள் வரை நடைபெறும் இந்தக் கூட்டத் தொடரில் பல முக்கியப் பிரச்னைகள் எழுப்பப்படுவதுடன், அதற்கு ஆளும் தரப்பிலும் உரிய பதில்கள் அளிக்கப்படும். ஸ்ரீரங்கம் இடைத் தேர்தல் முடிவுகளும் பேரவை விவாதங்களில் முக்கிய இடம் பிடிக்கும் எனத் தெரிகிறது.

Popular posts from this blog

மாணவர்களுக்கு 'லேப்டாப்' டிசம்பருக்குள் கிடைக்கும்

இலவச, 'லேப்டாப்' வழங்கும் திட்டத்தை, டிசம்பர் மாதத்திற்குள் முடிக்கும்படி, அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டம், 2011ல் துவக்கப்பட்டது. முதல், இரண்டு ஆண்டுகள், அரசு மற்றும் அரசு உதவி

கணக்கெடுப்பு ! : பள்ளி செல்லா மாணவர்கள்...: ஏப்., 7ம் தேதி முதல் துவக்கம்

கடலூர் மாவட்டத்தில், அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், பள்ளி செல்லா மற்றும் பள்ளியை விட்டு இடைநின்ற மாணவ, மாணவிகள் குறித்த விவரங்கள் கணக்கெடுக்கும் பணி வரும் 7ம் தேதி, துவங்குகிறது. தமிழகத்தில், ஆண்டுதோறும் அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், 6 வயது முதல் 14 வயதுக்குட்பட்ட பள்ளி செல்லா மற்றும் பள்ளியை விட்டு

10ம் வகுப்பு கணிதத்தேர்வில் போனஸ் மதிப்பெண்

பத்தாம் வகுப்பு தேர்விற்கான விடைத்தாள்கள் திருத்தும் பணி நடக்கிறது. பத்தாம் வகுப்பு கணிதத்தேர்வில், 'ஏ' பிரிவு ஒரு மதிப்பெண் வினாவிற்கான 15 வது கேள்வியில் ஆங்கில வழி வினா தவறாக கேட்கப்பட்டுள்ளதா