Skip to main content

மாணவர்களுக்கு வாகன வசதி: கல்வித்துறை ஏற்பாடு


சென்னை:மலை, வனம், எளிதில் செல்ல முடியாத பகுதி களில் உள்ள பள்ளிகளில், கட்டாய கல்வி சட்டத்தின் கீழ் சேர்ந்துள்ள, 12,295 மாணவர்களுக்கு, பள்ளி கல்வித்துறை வாகன வசதியை ஏற்
படுத்தி உள்ளது.ஏழை மாணவர்களுக்கு, தனியார் பள்ளிகளில், 25 சதவீதம் இட ஒதுக்கீடு செய்வதை வலியுறுத்தி, இலவச, கட்டாய கல்வி உரிமை சட்டம் அமல்படுத்தப்பட்டது.
இச்சட்டத்தின் கீழ், மலை, வனம் மற்றும் எளிதில், பாதுகாப்பாக செல்ல முடியாத பகுதிகளில் உள்ள பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு, வாகன வசதி மற்றும் பாதுகாவலர் நியமிக்க வேண்டும். இதையடுத்து, 18 மாவட்டங்களில், மாணவர்களுக்கு வாகன வசதி, பாதுகாப்பு தேவையான பகுதிகள், பள்ளிகள் தேர்வு செய்யப்பட்டுஉள்ளன. இப்பள்ளிகளில், தொடக்க கல்வியில், 9,510; அதற்கு மேல், 2,785 என, 12,295 பேருக்கு, வேன், ஜீப், ஆட்டோ மற்றும் பாதுகாவலர் வசதி, வரும், 2015 - 16ம் கல்வியாண்டிற்கு செய்யப்பட உள்ளது. இதுகுறித்த, பள்ளி கல்வித் துறை செயலர் அறிவிப்பு, அரசிதழில் வெளியிடப்பட்டு உள்ளது.

Popular posts from this blog

அகஇ - 100% வாசித்தல் திறன் பெற்ற பள்ளிகளுக்கு ஊக்கத்தொகை - செயல்முறைகள்

அகஇ - 100% வாசித்தல் திறன் பெற்ற பள்ளிகளுக்கு ஊக்கத்தொகை - இயக்குனர் செயல்முறைகள்

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய யோகா

               சிபிஎஸ்இ பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் 40 முதல் 45 நிமிடங்கள் கட்டாய யோகா பயிற்சி அளிக்