Skip to main content

நாளை சப்- இன்ஸ்பெக்டர் தேர்வுக்கான இலவச வழிகாட்டி முகாம்


சப்-இன்ஸ்பெக்டர் மற்றும் காவலர் தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பு திங்கள்கிழமை (பிப். 16) ராமநாதபுரத்தில் தொடங்குகிறது.
தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியத்தால் 23.5.2015ஆம் தேதி
சப்-இன்ஸ்பெக்டர் தேர்வும் மறுநாள் 24ஆம் தேதி காவலர்களுக்கான தேர்வும் நடைபெறுகிறது. இத்தேர்வுகளுக்கான இலவச வழிகாட்டி முகாம் திங்கள்கிழமை ராமநாதபுரம் வலம்புரி மகாலில் காலை 10 மணிக்கு தொடங்கி மதியம் 1 மணி வரை நடைபெறுகிறது.
இம்முகாமினை சென்னை போகஸ் ஐ.ஏ.எஸ். அகாதெமி நிறுவனத்தின் ஒருங்கிணைப்பாளர் மு. சிபிகுமரன் நடத்தவுள்ளார். இதில் பட்டப்படிப்பு முடித்த 20 வயது முதல் 33 வயது வரையுள்ளவர்கள் கலந்து கொள்ளலாம். அனுமதி இலவசம். இம்முகாமில் மாதிரி தேர்வுகளும் நடத்தப்படும். இதற்கான ஏற்பாடுகளை ராமநாதபுரம் ஸ்பெக்டிரம் அகாதெமியின் இயக்குநர் ஏ. செந்தில்குமார் செய்துள்ளார். இலவச வழிகாட்டி முகாமில் கலந்து கொள்ள 9787248947 மற்றும் 9159991214 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம் என்று அவர் தெரிவித்துள்ளார்.

Popular posts from this blog

அகஇ - 100% வாசித்தல் திறன் பெற்ற பள்ளிகளுக்கு ஊக்கத்தொகை - செயல்முறைகள்

அகஇ - 100% வாசித்தல் திறன் பெற்ற பள்ளிகளுக்கு ஊக்கத்தொகை - இயக்குனர் செயல்முறைகள்

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய யோகா

               சிபிஎஸ்இ பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் 40 முதல் 45 நிமிடங்கள் கட்டாய யோகா பயிற்சி அளிக்