Skip to main content

கரூரை சேர்ந்த என்ஜினீயரிங் மாணவர் 5 பதக்கம் வென்று சாதனை

உலக அளவிலான போட்டிகளில் கரூரை சேர்ந்த என்ஜினீயரிங் மாணவர் 5 பதக்கம் வென்று சாதனை
உலக அளவிலான போட்டிகளில் கரூர் மாவட் டத்தை சேர்ந்த என்ஜி
னீயரிங் மாணவர் 5 பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.

உலக அளவிலான போட்டி

உலக அளவிலான சிலம்பம், மான்கொம்பு, வால்வீச்சு, சுருள்வால், கத்திவீச்சு ஆகிய போட்டிகள் மலேசியாவில் உள்ள ஜோகாரில் நடந்தது. இப்போட்டியில் இந்தியா முழுவதிலும் இருந்து 60 மாணவ-மாணவிகள் பங்கேற்றனர். தமிழக அளவில் 40 மாணவர்கள் கலந்து கொண்டுள்ளனர்.


கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரத்தை சேர்ந்த தங்கதுரை மகன் ராஜா (வயது 19). இவர் கோவை தனியார் என்ஜினீயர் கல்லூரியில் மெக்கானிக் பிரிவில் படித்து வருகிறார். இவர் 19 வயதிற்குட்பட்ட பிரிவுகளில் நடந்த வால்வீச்சு போட்டியில் முதலிடம் பிடித்து தங்க பதக்கத்தை பெற்றார். அதேபோல் மான்கொம்பு போட்டியிலும் தங்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.

வாழ்த்து

சிலம்பாட்டத்தில் இரண்டாமிடம் பெற்று வெள்ளி பதக்கத்தை தட்டி சென்றார். மேலும், சுருள்வால்வீச்சு, மற்றும் கத்திவீச்சு ஆகிய போட்டிகளில் 3-ம் இடம் பெற்று வெண்கலப்பதக்கத்தை வென்றார். உலக அளவிலான போட்டியில் கலந்து கொண்டு ஐந்து பதக்கத்தை வென்று இந்தியாவிற்கும், தமிழகத்திற்கும் பெருமை சேர்த்துள்ளார். போட்டியில் கலந்து கொண்டு நேற்று மாலை கிருஷ்ணராயபுரம் திரும்பிய மாணவன் ராஜாவிற்கு பஸ் நிலையத்தில் இருந்து தாரைதப்பட்டை முழங்க பொதுமக்கள் திரளான வரவேற்பு அளித்தனர். ஐந்து பதக்கத்தை வென்ற மாணவன் ராஜாவிற்கு தம்பிதுரை எம்.பி., அமைச்சர் வி.செந்தில் பாலாஜி, காமராஜ், எம்.எல்.ஏ. கிருஷ்ணராயபுரம் ஒன்றிய குழு தலைவர் முத்துசாமி, நகர செயலாளர் தங்கதுரை மற்றும் பொது மக்கள் வாழ்த்து தெரிவித் தனர். 

Popular posts from this blog

அகஇ - 100% வாசித்தல் திறன் பெற்ற பள்ளிகளுக்கு ஊக்கத்தொகை - செயல்முறைகள்

அகஇ - 100% வாசித்தல் திறன் பெற்ற பள்ளிகளுக்கு ஊக்கத்தொகை - இயக்குனர் செயல்முறைகள்

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய யோகா

               சிபிஎஸ்இ பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் 40 முதல் 45 நிமிடங்கள் கட்டாய யோகா பயிற்சி அளிக்