Skip to main content

வேலை வேண்டுமா?: 417 உதவி வேளாண் அதிகாரி காலியிடங்கள்


தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் 417 உதவி வேளாண் அலுவலர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்தப் பணியிடங்களுக்கு ஆன்லைன் மூலமாக 27.02.2015க்குள் விண்ணப்பிக்
க வேண்டும்.

வயது:

பொதுப் பிரிவினருக்கு 01.07.2015 அன்று 18-லிருந்து 30 வயதுக்குள் இருக்க வேண்டும். எஸ்.சி., எஸ்.டி., எம்.பி.சி., டி.சி., பி.சி., பி.சி.முஸ்லிம், விதவைகள் ஆகிய பிரிவினர் 01.07.2015 அன்று 18 வயது பூர்த்தியானவர்களாக இருக்க வேண்டும். உச்சபட்ச வயது வரம்பு இவர்களுக்கு இல்லை.

கல்வி:

மேல்நிலைப் பள்ளிப் படிப்பை முடித்திருக்க வேண்டும். இத்துடன் தமிழக அரசால் அங்கீகரிக்கப்பட்ட வேளாண் கல்வி நிறுவனத்தில் இரண்டு ஆண்டு வேளாண் துறை பட்டயப் படிப்பையும் முடித்திருக்க வேண்டும். தமிழ் மொழியில் போதிய அறிவு பெற்றவராயும் இருக்க வேண்டும்.

தேர்ந்தெடுக்கப்படும் முறை: உரிய தகுதி கொண்ட விண்ணப்பதாரர்கள் எழுத்துத்தேர்வு, நேர்காணல் ஆகியவற்றின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். எழுத்துத் தேர்வு சென்னை, மதுரை, கோயம்புத்தூர், திருச்சி, திருநெல்வேலி, சேலம் ஆகிய நகரங்களில் நடத்தப்படும்.

கட்டணம்:

தேர்வுக் கட்டணம் ரூ.100, விண்ணப்பக் கட்டணம் ரூ.50. ஆக மொத்தம் ரூ.150. தேர்வுக் கட்டண விலக்குக்குத் தகுதி படைத்தோர் விண்ணப்பக் கட்டணம் மட்டும் செலுத்தினால் போதும்.

டி.என்.பி.எஸ்.சி.யில் ஐந்தாண்டுகளுக்கான நிரந்தரப் பதிவு எண் கொண்டோர் விண்ணப்பக் கட்டணம் செலுத்தத் தேவையில்லை.

கட்டணத்தை ஆன்லைன் பேங்க் மூலமாகவோ, ஆன்லைனில் பெறப்பட்ட அஞ்சலக, வங்கி செலான் மூலமாகவோ செலுத்தலாம்.

விண்ணப்பிக்கும் முறை:

உரிய தகுதி கொண்ட விண்ணப்பதாரர் www.tnpscexams.net என்ற இணையதளத்தில் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கு முன்னதாக, உங்களது பாஸ்போர்ட் புகைப்படம், கையெழுத்து ஆகியவற்றை ஸ்கேன் செய்து வைத்துக்கொள்ளுங்கள். விண்ணப்பத்தைப் பூர்த்திசெய்யும்போது தேவைப்படும் இடத்தில் இவற்றைப் பதிவேற்றம் செய்ய வேண்டும்.

செயல்படும் நிலையிலுள்ள மின்னஞ்சல் முகவரியையும், கைப்பேசி எண்ணையும் விண்ணப்பத்தில் குறிப்பிட வேண்டும். ஏனெனில் விண்ணப்பத்தைப் பதிவேற்றிய பின்னர் விண்ணப்ப எண், கடவுச் சொல் (Password) ஆகியவை மின்னஞ்சலுக்கும் கைப்பேசிக்கும் அனுப்பப்படும். இதைப் பத்திரப்படுத்தினால் தான் தேர்வுக்கூட நுழைவுச் சீட்டைப் பதிவிறக்கம் செய்ய முடியும்.

நினைவில் கொள்ள வேண்டிய நாள்கள்:

விண்ணப்பிக்கக் கடைசி நாள்: 27.02.2015

அஞ்சலகம், வங்கி மூலம் கட்டணம் செலுத்த கடைசி நாள்: 02.03.2015

எழுத்துத் தேர்வு நடைபெறும்நாள்: 18.04.2015

Popular posts from this blog

அகஇ - 100% வாசித்தல் திறன் பெற்ற பள்ளிகளுக்கு ஊக்கத்தொகை - செயல்முறைகள்

அகஇ - 100% வாசித்தல் திறன் பெற்ற பள்ளிகளுக்கு ஊக்கத்தொகை - இயக்குனர் செயல்முறைகள்

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய யோகா

               சிபிஎஸ்இ பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் 40 முதல் 45 நிமிடங்கள் கட்டாய யோகா பயிற்சி அளிக்