Skip to main content

'மொழிப்பாட விடைத்தாள்களில் முதல் 2 பக்கங்களை எழுதக் கூடாது'


வரும் மார்ச், 5ம் தேதியில் இருந்து, பிளஸ் 2 தேர்வும், மார்ச், 19ம் தேதியில் இருந்து, பத்தாம் வகுப்பு தேர்வும் நடக்கிறது. இதையொட்டி, மாணவ, மாணவியரும், ஆசிரியர்களும் கடைபிடிக்க வேண்டிய செயல்
பாடுகள் குறித்து, தேர்வுத்துறை, அவ்வப்போது சுற்றறிக்கை அனுப்புகிறது.

அதன்படி சமீபத்திய சுற்றறிக்கை:பத்தாம் வகுப்பு தமிழ் முதல்தாள், ஆங்கிலம் முதல் தாள் தேர்வுகளின்போது, முதல் இரண்டு பக்கங்களை பயன்படுத்தாமல் தவிர்க்க வேண்டும். விடைத்தாளின் எந்தவொரு பகுதியிலும், தேர்வு எண்ணையோ, பெயரையோ கண்டிப்பாக எழுதக்கூடாது. தேர்வின்போது, 'ரப் வொர்க்' செய்வதற்கு, விடைத்தாளின்

அடிப்பகுதியை மட்டுமே பயன்படுத்த வேண்டும். விடைத்தாளின் வலது பக்க ஓர பகுதியை பயன்படுத்தக் கூடாது. ஏனெனில், வலது ஓரப் பகுதி, மதிப்பெண் குறிப்பிட ஒதுக்கப்பட்டுள்ளது. விடைகளை எழுதி, அவற்றை கோடிட்டு, அடிக்க நேர்ந்தால், 'மேற்படி விடை என்னால் அடிக்கப்பட்டது' என்ற குறிப்புரையை எழுத வேண்டும். பயன்படுத்தாத பக்கங்களை கோடிட்டு அடித்து, 'பயன்படுத்தப்படாத பக்கம் என்னால் அடிக்கப்பட்டது' என, குறிப்பிட வேண்டும். இவ்வாறு, சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Popular posts from this blog

Fast way math - Polynomial Factorization tricks ( SSLC Mathematics ) type 2

Fast way math - Polynomial Factorization tricks ( SSLC Mathematics ) type 2

மாணவர்களுக்கு 'லேப்டாப்' டிசம்பருக்குள் கிடைக்கும்

இலவச, 'லேப்டாப்' வழங்கும் திட்டத்தை, டிசம்பர் மாதத்திற்குள் முடிக்கும்படி, அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டம், 2011ல் துவக்கப்பட்டது. முதல், இரண்டு ஆண்டுகள், அரசு மற்றும் அரசு உதவி