Skip to main content

பிளஸ் 2 கம்ப்யூட்டர் சயின்ஸ் தேர்வில் புதிய நடைமுறை: தேர்வுத்துறை உத்தரவு


பிளஸ் 2 கம்ப்யூட்டர் சயின்ஸ் பாடத் தேர்வில் மாற்றங்களை செய்து தேர்வுத் துறை உத்தரவிட்டுள்ளது.

இத்தேர்வில் முதல் பிரிவில் 75 ஒரு மதிப்பெண் கேள்விகள் இடம்
பெறும். கடந்த ஆண்டு வரை இதற்கான விடையை ஓ.எம்.ஆர்., தாளில், வட்டமிட்ட பகுதியை பென்சிலால் கருமைப்படுத்தினர். இந்த ஆண்டு முதல் கறுப்பு அல்லது நீல நிற பால் பாயின்ட் பேனாவால் கருமைப்படுத்த வேண்டும். முன்பு தேர்வுநேரம் முடியும் வரை ஓ.எம்.ஆர்., தாளை மாணவர் வைத்திருக்கலாம்.
இந்த ஆண்டு முதல், 75 நிமிடங்களில் ஒரு மதிப்பெண் கேள்விக்கு விடை அளித்த உடன் அறை கண்காணிப்பாளரிடம் தாளை ஒப்படைக்க வேண்டும். பின் மீதமுள்ள இரண்டு மற்றும் ஐந்து மதிப்பெண் பகுதிக்கு தொடர்ந்து விடை அளிக்கலாம். 'விடை தெரியாத ஒரு மதிப்பெண் கேள்விகளுக்கு கடைசி நேரத்தில் பதில் எழுதலாம்' என நினைக்கும் மாணவர்கள் இனி அவ்வாறு செய்ய முடியாது என்றார்.

Popular posts from this blog

மாணவர்களுக்கு 'லேப்டாப்' டிசம்பருக்குள் கிடைக்கும்

இலவச, 'லேப்டாப்' வழங்கும் திட்டத்தை, டிசம்பர் மாதத்திற்குள் முடிக்கும்படி, அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டம், 2011ல் துவக்கப்பட்டது. முதல், இரண்டு ஆண்டுகள், அரசு மற்றும் அரசு உதவி

கணக்கெடுப்பு ! : பள்ளி செல்லா மாணவர்கள்...: ஏப்., 7ம் தேதி முதல் துவக்கம்

கடலூர் மாவட்டத்தில், அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், பள்ளி செல்லா மற்றும் பள்ளியை விட்டு இடைநின்ற மாணவ, மாணவிகள் குறித்த விவரங்கள் கணக்கெடுக்கும் பணி வரும் 7ம் தேதி, துவங்குகிறது. தமிழகத்தில், ஆண்டுதோறும் அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், 6 வயது முதல் 14 வயதுக்குட்பட்ட பள்ளி செல்லா மற்றும் பள்ளியை விட்டு

10ம் வகுப்பு கணிதத்தேர்வில் போனஸ் மதிப்பெண்

பத்தாம் வகுப்பு தேர்விற்கான விடைத்தாள்கள் திருத்தும் பணி நடக்கிறது. பத்தாம் வகுப்பு கணிதத்தேர்வில், 'ஏ' பிரிவு ஒரு மதிப்பெண் வினாவிற்கான 15 வது கேள்வியில் ஆங்கில வழி வினா தவறாக கேட்கப்பட்டுள்ளதா