Skip to main content

பிளஸ் 2 பொதுத்தேர்வில் எந்த பேனாவை பயன்படுத்த வேண்டும்?’

பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் வினாத்தாளில் கருப்பு, நீல மைபேனாக்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும்’ என அறிவுறுத்தப்பட்டு உள்ளது. பிளஸ் 2 பொதுத்தேர்வுகள் மார்ச் 5 ல் துவங்குகின்றன.
விடைத்தாள்கள் தைக்கும் பணி முடிந்துள்ளது. விடைத்தாள் பயன்ப
டுத்தும் முறை குறித்து மாணவர்களுக்கு தேர்வுத்துறை அறிவுரை வழங்கியுள்ளது. அதன் விபரம்: விடைத்தாளின் முகப்புத்தாளில் மாணவரின் கையெழுத்து மட்டுமே இட வேண்டும். மற்ற எந்த தாள்களிலும் குறியீடு, பெயர், தேர்வு எண் எழுதக் கூடாது. வினா எண்களை தவறாமல் எழுத வேண்டும்.

நீலம், கருப்பு மை பேனாவை மட்டுமே பயன்படுத்த வேண்டும். கலர் ஸ்கெட்ச், பென்சிலை தவிர்க்க வேண்டும். ஒவ்வொரு பக்கத்திலும் 20 முதல் 25 வரிகள் எழுத வேண்டும். வினாத்தாளை சேதப்படுத்துவது, கிழிப்பது போன்ற செயல்களில் ஈடுபடக்கூடாது. இவ்வாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Popular posts from this blog

அகஇ - 100% வாசித்தல் திறன் பெற்ற பள்ளிகளுக்கு ஊக்கத்தொகை - செயல்முறைகள்

அகஇ - 100% வாசித்தல் திறன் பெற்ற பள்ளிகளுக்கு ஊக்கத்தொகை - இயக்குனர் செயல்முறைகள்

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய யோகா

               சிபிஎஸ்இ பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் 40 முதல் 45 நிமிடங்கள் கட்டாய யோகா பயிற்சி அளிக்