Skip to main content

பிப்., 23 ல் பி.எட்., செய்முறை தேர்வு


பி.எட்., மாணவர்களுக்கான செய்முறை தேர்வு பிப்., 23 ல் துவங்குகிறது.தமிழகத்தில் 661 கல்வியியல் கல்லுாரிகள் உள்ளன. ஒரு லட்சம் மாணவர்கள் பயில்கின்றனர். இவர்களுக்கு 2014--15 க்கான செ
ய்முறை தேர்வு பிப்., 23 ல் துவங்கி மார்ச் 13 வரை 6 கட்டங்களாக நடக்கிறது. பிப்., 23, 24 ல் திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, தேனி, புதுக்கோட்டை மாவட்டங்களிலும் பிப்., 25, 26 ல் திருச்சி, அரியலுார், பெரம்பலுார், நாகப்பட்டினம், தஞ்சை, திருவாரூர் மாவட்டங்களிலும் நடக்கிறது.மார்ச் 2, 3 ல் நெல்லை, கன்னியாகுமரி, துாத்துக்குடி, ராமநாதபுரம்,
விருதுநகர் மாவட்டங்களிலும், மார்ச் 5, 6 ல் கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களிலும் நடக்கிறது. மார்ச் 9, 10 ல் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், விழுப்புரம், கடலுார், வேலுார் மாவட்டங்களிலும், மார்ச் 12, 13 ல் சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, நாமக்கல், கரூர், திருவண்ணாமலை மாவட்டங்களிலும் நடக்கிறது. இதனை தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலை தேர்வு கட்டுப்பாளர் மணிவண்ணன் தெரிவித்துள்ளார்.

Popular posts from this blog

அகஇ - 100% வாசித்தல் திறன் பெற்ற பள்ளிகளுக்கு ஊக்கத்தொகை - செயல்முறைகள்

அகஇ - 100% வாசித்தல் திறன் பெற்ற பள்ளிகளுக்கு ஊக்கத்தொகை - இயக்குனர் செயல்முறைகள்

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய யோகா

               சிபிஎஸ்இ பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் 40 முதல் 45 நிமிடங்கள் கட்டாய யோகா பயிற்சி அளிக்