Skip to main content

காரைக்​கு​டி​யில் பிப்.​ 13 இல் புத்​த​கத் திரு​விழா தொடக்​கம்


சிவ​கங்கை மாவட்​டம் காரைக்​கு​டி​யில் மாநில அள​வி​லான புத்​த​கத் திரு​விழா கம்​பன் மணி​மண்​ட​பத்​தில் வரும் வெள்​ளிக்​கி​ழமை ​(பிப்.​ 13) தொடங்கி 22-ஆம் தேதி வரை நடை​பெ​று​கி​றது.​
இது​கு​றித்து காரைக்​கு​டிப் புத்​த​கத் திரு​விழா குழுத் தலை​வர் பேரா
​சி​ரி​யர் அய்க்​கண் செவ்​வாய்க்​கி​ழமை செய்​தி​யா​ளர்​க​ளி​டம் கூறி​ய​தா​வது:​ 13-ஆவது ஆண்டு புத்​த​கத் திரு விழா வரும் 13-ஆம் தேதி தொடங்கி 22-ஆம் தேதி வரை நடை​பெ​ற​வுள்​ளது.​ ஆண்​டு​தோ​றும் 40 ஆயி​ரம் மக்​கள் இந்​தப் புத்​த​கத் திரு​வி​ழாவை காண வரு​கை​தந்து புத்​த​கங்​க​ளைக் குறைந்த விலை​யில் வாங்​கிப் பய​ன​டை​கின்​ற​னர்.​
சென்னை,​​ கோவை,​​ மதுரை,​​ சேலம்,​​ திருச்சி உள்​ளிட்ட பல்​வேறு நக​ரங்​களி​லி​ருந்து முன்​னணி பதிப்​ப​கத்​தார் பங்​கேற்​கின்​ற​னர்.​ சுமார் 50 அரங்​கு​கள் வரை அமைக்​கப்​ப​டு​கின்​றன.​ தின​மும் மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரை​யும்,​​ சனி மற்​றும் ஞாயிற்​றுக்​கி​ழ​மை​க​ளில் காலை 11 மணி முதல் இரவு 9 மணி வரை​யும் புத்​த​கங்​களை பார்​வை​யி​ட​லாம்.​
தின​மும் காலை​யில் பள்ளி,​​ கல்​லூரி மாண​வர்​க​ளது படைப்​பாற்​றல்,​​ இலக்​கி​யப்​போட்​டி​கள் நடத்​தப்​ப​டும்.​ பொது​மக்​க​ளுக்கு விநாடி-​வினா போட்​டி​கள் நடத்​தப்​ப​டும்.​
 போட்​டி​க​ளில் வெல்​வோ​ருக்கு புத்​த​கங்​களை பரி​சாக வழங்​கு​கி​றோம்.​ கடந்த ஆண்டு இது​போன்று சுமார் ரூ.​ 60 ஆயி​ரம் மதிப்​புள்ள புத்​த​கங்​கள் பரி​சாக வழங்​கப்​பட்​டது.​ மேலும் மாலை நேரங்​க​ளில் 2 பள்​ளி​க​ளைச்​சேர்ந்த மாணவ,​​ மாண​வி​க​ளின் கலை​நி​கழ்ச்​சி​க​ளும் நடை​பெ​றும்.​
துவக்க விழா​வில்,​​ குன்​றக்​குடி பொன்​னம்​பல அடி​க​ளார் ஆசி​யுரை வழங்​கு​கி​றார்.​ இலக்​கி​யப் பேச்​சா​ளர் நாஞ்​சில் சம்​பத் தொடக்​கி​வைத்​துப் பேசு​கி​றார்.​ விழா​விற்​கான ஏற்​பா​டு​களை காரைக்​குடி புத்​த​கத்​தி​ரு​விழா குழு​வி​னர் செய்து வரு​கின்​ற​னர் என்​றார்.​

Popular posts from this blog

ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம்

கருவூலம் மற்றும் கணக்குத்துறை முதன்மைச் செயலர் தகவல் வரும் நவம்பர் முதல் அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம் பெறுவதற்கான ஆணை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என கருவூலத்துறை முதன்மைச் செயலரும், ஆணையருமான தென்காசி சு. ஜவஹர் தெரிவித்தார்.தமிழ்நாடு கருவூலக் கணக்குத் துறை சார்பில், திண்டுக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனித வள மேலாண்மைத் திட்டத்தின் மூலம் பணம் பெற்று வழங்கும் அலுவலர்களுக்கான பயிற்சிக் கூட்டம் திங்கள்கிழமை தொடங்கியது. 6 நாள்கள் நடைபெறும் இப்பயிற்சி முகாமிற்கு திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் டி.ஜி. வினய் தலைமை வகித்தார். முகாமை கருவூல கணக்குத்துறை முதன்மைச் செயலர் மற்றும் ஆணையர் ஜவஹர்தொடக்கி வைத்துப் பேசியது: கடந்த 1964-ஆம் ஆண்டு முதல் தனித்துறையாகச் செயல்பட்டு வரும் கருவூலத்துறைக்கு தமிழகம் முழுவதும் 294 அலுவலகங்களும், தில்லியில் ஒரு அலுவலகமும் உள்ளன. அரசு ஊழியர்களுக்கான ஊதியம், நலத்திட்ட உதவித் தொகை, நிவாரணத் தொகை உள்ளிட்ட பல்வேறு பணிகளை கருவூலத் துறை மேற்கொண்டு வருகிறது. தமிழகம் முழுவதும் 9 லட்சம் அரசு ஊழியர்களின் பணிப் பதிவேடு...

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய யோகா

               சிபிஎஸ்இ பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் 40 முதல் 45 நிமிடங்கள் கட்டாய யோகா பயிற்சி அளிக்

அரசு துறைகள் மீது புகாரா? இனி ஆதார் எண் தேவை

 'அரசுத் துறைகள் குறித்து, ஆன்லைனில் புகார்களை பதிவு செய்வோர், இனி, ஆதார் எண்ணைக் குறிப்பிட வேண்டும்' என, மத்திய அரசு அறிவித்துள்ளது. நாடு முழுவதும் உள்ள அரசுத் துறைகள் மீதான புகார்கள் மற்றும் ஆலோசனைகளை,  www.pgportal.nic.in என்ற இணையதளத்தில் பதிவு