Skip to main content

PG TRB- ஆசிரியர் தேர்வு வாரியம் அதிரடி!


தமிழகத்தில், வரும் ஜன., 10ம் தேதி முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கான போட்டித்தேர்வு நடக்கவுள்ளது. இத்தேர்வுகளில், முறைகேடுகளை தவிர்க்கும் நோக்கில், முதன் முறையாக,புகைப்படத்துடன் கூடிய ஓம்.எம்.ஆர்., சீட் தேர்வர்களுக்கு வழங்க ஆசிரியர் தேர்வு வாரியம் திட்டமிட்டுள்ளது.

அரசு மேல்நிலைப்பள்ளிகளில், காலியாக உள்ள முதுகலை பட்டதாரி
ஆசிரியர்கள் பணியிடங்களுக்கான போட்டித்தேர்வுகள் ஜன., 10ம் தேதி மாநிலம் முழுவதும் நடக்கிறது. இத்தேர்வில், பங்கேற்க, ஒரு லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர்.இத்தேர்வுகளுக்கு, தேர்வு மையங்கள் பார்வையிடல், முதன்மை கண்காணிப்பாளர்கள், கண்காணிப்பாளர்கள், அறை கண்காணிப்பாளர்கள், பறக்கும்படை உறுப்பினர்கள் நியமிக்கும் பணி அனைத்து மாவட்டங்களிலும் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.தேர்வில், முறைகேடுகளை தவிர்க்க, ஆசிரியர் தேர்வு வாரியம் கெடுபிடியை அதிகரித்துள்ளது. சமீபத்தில் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு இதுகுறித்த ஆய்வுக்கூட்டம் சென்னையில் நடந்தது.

கோவை மாவட்டத்தில், முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கான போட்டித்தேர்வுக்கு 18 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. சுமார் 7500 தேர்வர்கள் தேர்வு எழுதவுள்ளனர். பார்வையற்றவர்கள், பார்வை குறைபாடுள்ளவர்களுக்கு, பயிற்சி பெற்ற துணை எழுத்தர்கள் தேர்வுசெய்யப்பட்டுள்ளனர்.தேர்வு பணியில் ஈடுபடவுள்ள, அலுவலர்களின் உறவினர்கள் தேர்வு எழுதவுள்ளனரா என்பதை, ஆய்வு செய்து, குறிப்பிட்ட அலுவலர்களுக்கு, தேர்வு பணியிலிருந்து விலக்கு அளிக்கவும் ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவுறுத்தியுள்ளது.

முதன்மை கல்வி அதிகாரி ஞானகவுரி கூறுகையில், ''ஆசிரியர்கள் தேர்வில் எவ்வகையிலும் முறைகேடுகள் நடைபெறாமல் இருக்க, ஆசிரியர் தேர்வு வாரியம், முனைப்புடன் உள்ளது. மாணவர்களுக்கான பொதுத்தேர்வுகளில், அரசு தேர்வுத்துறை அறிமுகப்படுத்தியது போன்று, முதுகலை பட்டதாரி ஆசிரியர் தேர்வில், புகைப்படம், தேர்வர் பெயர் மற்றும் பதிவெண்கள் அச்சிடப்பட்டு வழங்கப்படவுள்ளது.''ஓரிரு நாட்களில், ஓம்.எம்.ஆர்., ஷீட் மாவட்டங்களுக்கு வினியோகிக்கப்படவுள்ளது. ஓம்.எம்.ஆர்., ஷீட்டில் அச்சடிக்கப்பட்டுள்ள தேர்வர்களின் விபரங்கள் சரிபார்க்கப்பட்டு, உடனடியாக சரிசெய்யப்படவுள்ளது,'' என்றார்.

மொபைல்போன் கொண்டு வர தடை : தேர்வு மையங்களுக்கு, பேஜர், கால்குலேட்டர், தொழில்நுட்பத்துடன் கூடிய கைகடிகாரம் கொண்டு வர தடைவிதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, மொபைல்போன் தேர்வு அறைக்குள் கொண்டு செல்ல அனுமதி இல்லை. தேர்வர்கள் கொண்டுவரும், மதிப்புமிக்க பொருட்களுக்கு தேர்வர்களே முழு பொறுப்பு எனவும், எவ்வகையிலும் தேர்வு அதிகாரிகள், அலுவலர்கள் பொறுப்பேற்கமாட்டார்கள் என கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Popular posts from this blog

ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம்

கருவூலம் மற்றும் கணக்குத்துறை முதன்மைச் செயலர் தகவல் வரும் நவம்பர் முதல் அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம் பெறுவதற்கான ஆணை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என கருவூலத்துறை முதன்மைச் செயலரும், ஆணையருமான தென்காசி சு. ஜவஹர் தெரிவித்தார்.தமிழ்நாடு கருவூலக் கணக்குத் துறை சார்பில், திண்டுக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனித வள மேலாண்மைத் திட்டத்தின் மூலம் பணம் பெற்று வழங்கும் அலுவலர்களுக்கான பயிற்சிக் கூட்டம் திங்கள்கிழமை தொடங்கியது. 6 நாள்கள் நடைபெறும் இப்பயிற்சி முகாமிற்கு திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் டி.ஜி. வினய் தலைமை வகித்தார். முகாமை கருவூல கணக்குத்துறை முதன்மைச் செயலர் மற்றும் ஆணையர் ஜவஹர்தொடக்கி வைத்துப் பேசியது: கடந்த 1964-ஆம் ஆண்டு முதல் தனித்துறையாகச் செயல்பட்டு வரும் கருவூலத்துறைக்கு தமிழகம் முழுவதும் 294 அலுவலகங்களும், தில்லியில் ஒரு அலுவலகமும் உள்ளன. அரசு ஊழியர்களுக்கான ஊதியம், நலத்திட்ட உதவித் தொகை, நிவாரணத் தொகை உள்ளிட்ட பல்வேறு பணிகளை கருவூலத் துறை மேற்கொண்டு வருகிறது. தமிழகம் முழுவதும் 9 லட்சம் அரசு ஊழியர்களின் பணிப் பதிவேடு...

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய யோகா

               சிபிஎஸ்இ பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் 40 முதல் 45 நிமிடங்கள் கட்டாய யோகா பயிற்சி அளிக்

அரசு துறைகள் மீது புகாரா? இனி ஆதார் எண் தேவை

 'அரசுத் துறைகள் குறித்து, ஆன்லைனில் புகார்களை பதிவு செய்வோர், இனி, ஆதார் எண்ணைக் குறிப்பிட வேண்டும்' என, மத்திய அரசு அறிவித்துள்ளது. நாடு முழுவதும் உள்ள அரசுத் துறைகள் மீதான புகார்கள் மற்றும் ஆலோசனைகளை,  www.pgportal.nic.in என்ற இணையதளத்தில் பதிவு