Skip to main content

அடுத்த கல்வியாண்டு முதல் கேரளாவில் டிஜிட்டல் புத்தகங்கள்


கேரள பள்ளிகளில், 'டிஜிட்டல்' பாடபுத்தகங்கள், அடுத்த கல்வியாண்டு முதல் அறிமுகப்படுத்தப்பட உள்ளன. நாட்டிலேயே முதல் முறையாக, பள்ளிப் பாடங்கள் அனைத்தும், மல்டிமீடியா பாடங்களாக மாற்றப்பட்டு, காட்சிகள் மற்றும் ஒலிகள் மூலம் பாடங்கள் கற்றுக் கொடுக்கப்பட உள்ளன.

கேரளாவில், காங்கிரசை சேர்ந்த, உம்மன் சாண்டி முதல்வராக உள்ளார்
. பள்ளிப் பாடங்களை, டி.சி.டி., எனப்படும், 'டிஜிட்டல் கொலாபொரேடிவ் டெக்ஸ்ட்புக்' என்ற முறையில், அறிமுகம் செய்ய, முயற்சிகள் மேற்கொள்ளப்படுகிறது. பாட திட்டத்தின் படி, ஒவ்வொரு வகுப்பிற்குமான பாடங்கள், டிஜிட்டல் பைல்களாக மாற்றப்பட்டு, அதனுடன் பிற ஒளி, ஒலி சேர்க்கைகள் மேற்கொள்ளப்பட்டு, அதன் மூலம் மாணவர்கள் கற்றுக் கொள்ளுமாறு செய்யப்படும்.

'டேப்ளட்' எனப்படும், சிறிய அளவிலான கம்ப்யூட்டர், 'இ-ரீடர்' எனப்படும், டிஜிட்டல் மயமாக்கப்பட்ட புத்தகங்களில் தொகுப்பு கருவி போன்றவற்றை பயன்படுத்தி, மாணவர்கள் பாடங்களை படிக்கலாம்.அடுத்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட உள்ள இந்த புதிய கல்வித் திட்டத்திற்காக, டேப்ளட் பிசி, இ-ரீடர் போன்றவை ஏராளமாக வாங்கப்பட உள்ளன. முதற்கட்டமாக, இந்த திட்டத்திற்கு, 50 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.இந்த புதிய திட்டத்தின் கீழ், 37 லட்சம் மாணவர்களுக்கும், இரண்டு லட்சம் ஆசிரியர்களுக்கும் பயிற்சி அளிக்கப்பட உள்ளது.

Popular posts from this blog

மாணவர்களுக்கு 'லேப்டாப்' டிசம்பருக்குள் கிடைக்கும்

இலவச, 'லேப்டாப்' வழங்கும் திட்டத்தை, டிசம்பர் மாதத்திற்குள் முடிக்கும்படி, அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டம், 2011ல் துவக்கப்பட்டது. முதல், இரண்டு ஆண்டுகள், அரசு மற்றும் அரசு உதவி

கணக்கெடுப்பு ! : பள்ளி செல்லா மாணவர்கள்...: ஏப்., 7ம் தேதி முதல் துவக்கம்

கடலூர் மாவட்டத்தில், அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், பள்ளி செல்லா மற்றும் பள்ளியை விட்டு இடைநின்ற மாணவ, மாணவிகள் குறித்த விவரங்கள் கணக்கெடுக்கும் பணி வரும் 7ம் தேதி, துவங்குகிறது. தமிழகத்தில், ஆண்டுதோறும் அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், 6 வயது முதல் 14 வயதுக்குட்பட்ட பள்ளி செல்லா மற்றும் பள்ளியை விட்டு

10ம் வகுப்பு கணிதத்தேர்வில் போனஸ் மதிப்பெண்

பத்தாம் வகுப்பு தேர்விற்கான விடைத்தாள்கள் திருத்தும் பணி நடக்கிறது. பத்தாம் வகுப்பு கணிதத்தேர்வில், 'ஏ' பிரிவு ஒரு மதிப்பெண் வினாவிற்கான 15 வது கேள்வியில் ஆங்கில வழி வினா தவறாக கேட்கப்பட்டுள்ளதா