Skip to main content

மாணவ, மாணவியருக்கு உளவியல் நிபுணர்கள் தனித்தனியே அவசியம்

ஆலோசனை மையத்தில் மாணவ, மாணவியருக்கு உளவியல் நிபுணர்கள் தனித்தனியே அவசியம்
தமிழகம் முழுவதும் பள்ளி மாணவர்களுக்காக தொடங்கப்பட்டுள்ள உளவியல் ஆலோசனை மையத்தில், மாணவ, மாணவியருக்கு தனித்தனியே ஆண், பெண் என 2 உளவியல் நிபுணர்களை நியமிக்க வேண்டும் என்
ற கோரிக்கை எழுந்துள்ளது. பள்ளி மாணவர்களின் மனஅழுத்தம், உளவியல் ரீதியான பிரச்னைகளுக்கு தீர்வு காணும் வகையில், தமிழகம் முழுவதும் அரசு சார்பில் ‘நடமாடும் உளவியல் ஆலோசனை மையங்கள்‘ தொடங்கப்பட்டு, கடந்த 2 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது.


3 அல்லது 4 மாவட்டங்களை ஒரு மண்டலமாக பிரித்து, 10 மண்டலங்கள் வீதம் அமைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு மண்டலத்திற்கும், தலா ஒரு உளவியல் நிபுணர்கள் வீதம் மொத்தம், 10 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். 

இதில், 3 பெண் மற்றும் 7 ஆண் வீதம் உளவியல் நிபுணர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அதன்படி சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய 3 மாவட்டங்களை ஒருங்கிணைத்து, ஒரு மண்டலமாக பிரித்து, மாணவ, மாணவிகளுக்கு உளவியல் ஆலோசனை வழங்கப்பட்டு வருகிறது. ஆனால், இதில் தேர்வில் தேர்ச்சி பெறுவது எப்படி? என்பது குறித்து மட்டுமே, 80 சதவீத ஆலோசனைகள் வழங்கப்படுகிறது. பாலியல் வன்கொடுமை பாதுகாப்பு, உடல் ரீதியான மாற்றங்கள் போன்ற பல்வேறு பிரச்னைகளுக்கு தீர்வு காண உளவியல் நிபுணர்கள் அமர்த்தப்பட்டாலும், இதுபற்றி ஆலோசனைகள் மாணவர்களுக்கு சரிவர வழங்கப்படுவதில்லை. காரணம், ஆண் உளவியல் நிபுணர்கள் பணியமர்த்தப்பட்டுள்ள மண்டலங்களில் மாணவிகளும், பெண் உளவியல் நிபுணர்கள் உள்ள மண்டலங்களில் மாணவர்களும், தங்கள் பாலியல் ரீதியான குழப்பங்களுக்கு விளக்கங்களை வெளிப்படையாக கேட்கவும், தெரிந்துகொள்ளவும் முடியாத நிலை உள்ளது. 

இதனால், இத்திட்டத்தை முழுமையாக செயல்படுத்த முடியவில்லை என பெற்றோர், ஆசிரியர்கள் குற்றம்சாட்டி உள்ளனர். இதுகுறித்து அரசு பள்ளி ஆசிரியர் ஒருவர் கூறுகையில், ‘வளர் இளம் பருவத்தில் உள்ள மாணவர்கள் பாலியல் மற்றும் உடல் ரீதியான பல்வேறு பிரச்னைகளை எதிர்கொள்கின்றனர். இதுபற்றி பெற்றோரிடமோ, ஆசிரியர்களிடமோ சொல்ல தயங்குகின்றனர். இதற்கு உளவியல் நிபுணர்களின் ஆலோசனை மிகுந்த பயனுள்ளதாக இருக்கும். ஆனால், பிளஸ் 1, பிளஸ் 2 படிக்கும் மாணவர்கள் இதுபோன்ற சந்தேகங்களை, பெண் உளவியல் நிபுணரிடம் கேட்டறிந்துகொள்ள தயக்கம் காண்பிக்கின்றனர். 

மாணவிகளுக்கும் இதே நிலை தான் உள்ளது. இதனால், இத்திட்டத்தை முழுமையாக செயல்படுத்த முடியாத நிலை உள்ளது. எனவே, ஒவ்வொரு மண்டலத்துக்கும், ஆண் மற்றும் பெண் என 2 உளவியல் நிபுணர்களை நியமித்து மாணவ, மாணவிகளுக்கு தனித்தனியே ஆலோசனை வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்,’ என்றார்.

Popular posts from this blog

மாணவர்களுக்கு 'லேப்டாப்' டிசம்பருக்குள் கிடைக்கும்

இலவச, 'லேப்டாப்' வழங்கும் திட்டத்தை, டிசம்பர் மாதத்திற்குள் முடிக்கும்படி, அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டம், 2011ல் துவக்கப்பட்டது. முதல், இரண்டு ஆண்டுகள், அரசு மற்றும் அரசு உதவி

கணக்கெடுப்பு ! : பள்ளி செல்லா மாணவர்கள்...: ஏப்., 7ம் தேதி முதல் துவக்கம்

கடலூர் மாவட்டத்தில், அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், பள்ளி செல்லா மற்றும் பள்ளியை விட்டு இடைநின்ற மாணவ, மாணவிகள் குறித்த விவரங்கள் கணக்கெடுக்கும் பணி வரும் 7ம் தேதி, துவங்குகிறது. தமிழகத்தில், ஆண்டுதோறும் அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், 6 வயது முதல் 14 வயதுக்குட்பட்ட பள்ளி செல்லா மற்றும் பள்ளியை விட்டு

10ம் வகுப்பு கணிதத்தேர்வில் போனஸ் மதிப்பெண்

பத்தாம் வகுப்பு தேர்விற்கான விடைத்தாள்கள் திருத்தும் பணி நடக்கிறது. பத்தாம் வகுப்பு கணிதத்தேர்வில், 'ஏ' பிரிவு ஒரு மதிப்பெண் வினாவிற்கான 15 வது கேள்வியில் ஆங்கில வழி வினா தவறாக கேட்கப்பட்டுள்ளதா