Skip to main content

சத்துணவு ஊழியர் சம்பள முரண்பாடு தமிழக அரசுக்கு ஐகோர்ட் நோட்டீஸ்


   ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை தாலுகா கடம்பூரை சேர்ந்த சண்முகசுந்தரம், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு:

       சத்துணவு அமைப்பாளர்களுக்கு பதவி உயர்வு அளிக்க வெளியிடப் பட்ட அரசாணையில் உள்ள முரண்பாடுகளை களைய 28.2.2011ல் ஒரு கமிட்டி ஏற்படுத்தப்பட்டது.ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை
. இதன் காரணமாக பி.காம். படித்த நான், குழந்தைகள் வளர்ச்சித் திட்ட அலுவலகத்தில் மாதம் ரூ.10 ஆயிரம் சம்பளத்தில் அலுவலக உதவியாளராக பணியாற்றி வருகிறேன்.

      ஆனால், என்னுடன் பணியில் சேர்ந்த பெண் சத்துணவு அமைப்பாளர்கள் பலர் ரூ.20 ஆயிரம் சம்பளத்துடன் 2ம் நிலை கண்காணிப்பாளர்களாக பணியாற்றுகின்றனர். எனவே, சம்பள முரண்பாட்டை போக்க அமைக்கப்பட்ட கமிட்டி முடிவை விரைவில் வெளியிட உத்தரவிட வேண்டும். இவ்வாறு கூறப்பட்டிருந்தது. மனுவை விசாரித்த நீதிபதி டி.ராஜா, மனு குறித்து சமூக நலத்துறை முதன்மை செயலாளருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார்.

Popular posts from this blog

அகஇ - 100% வாசித்தல் திறன் பெற்ற பள்ளிகளுக்கு ஊக்கத்தொகை - செயல்முறைகள்

அகஇ - 100% வாசித்தல் திறன் பெற்ற பள்ளிகளுக்கு ஊக்கத்தொகை - இயக்குனர் செயல்முறைகள்

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய யோகா

               சிபிஎஸ்இ பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் 40 முதல் 45 நிமிடங்கள் கட்டாய யோகா பயிற்சி அளிக்