Skip to main content

படித்த, படிக்காத இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு மற்றும் வேலைவாய்ப்பு பயிற்சி முகாம்


படித்த, படிக்காத இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு மற்றும் வேலைவாய்ப்பு பயிற்சி முகாம் ஊரக வாழ்வாதார திட்டம் மற்றும் புதுவாழ்வு திட்டம் சார்பில்
நடத்தப்படுகிறது.
இதன்படி டிச.,27ல் சாத்தூர், டிச.,29ல் நரிக்குடி, ஜன.,10ல் விருதுநகர், ஜன.,24ல் ராஜபாளையம் ஒன்றியங்களில் நடத்தப்படும் இம்முகாமில், ஓட்டுனர், கம்ப்யூட்டர், ஜே.சி.பி., பொக்லைன், தையல், ஐ.டி.ஐ., தீ விபத்து பாதுகாப்பு, அழகுகலை, 
மொபைல்போன் சர்வீஸ் உள்ளிட்ட 20க்கு மேற்பட்ட பயிற்சி வகுப்புகளும், ஆயத்த ஆடை நிறுவனம், சிஎன்சி, எல் அண்ட் டி உட்பட பல்வேறு நிறுவனங்களில் நேரடி வேலை வாய்ப்பும் பெற்றுத் தரப்படுகிறது.
பயிற்சிக்கான செலவுகள் அனைத்தும் மேற்குறிப்பிட்ட இரண்டு துறைகளும் ஏற்றுக்கொள்ளும். ஒன்றியங்களில் நடைபெறும் இம்முகாமில் கலந்துகொண்டு பயன்பெற வேண்டும் என, கலெக்டர் ஹரிஹரன் தெரிவித்துள்ளார்.

Popular posts from this blog

அகஇ - 100% வாசித்தல் திறன் பெற்ற பள்ளிகளுக்கு ஊக்கத்தொகை - செயல்முறைகள்

அகஇ - 100% வாசித்தல் திறன் பெற்ற பள்ளிகளுக்கு ஊக்கத்தொகை - இயக்குனர் செயல்முறைகள்

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய யோகா

               சிபிஎஸ்இ பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் 40 முதல் 45 நிமிடங்கள் கட்டாய யோகா பயிற்சி அளிக்