Skip to main content

அண்ணா பல்கலை.யில் இலவச 6 மாத கால குளிர்சாதனப் பெட்டி தொழில் நுட்ப பயிற்சி

அண்ணா பல்கலைக்கழகத்தில் 6 மாத கால குளிரூட்டி, குளிர்சாதனப் பெட்டி தொழில்நுட்பப் பயிற்சிக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. பல்கலைக்கழகத்தின் தொழில்முனைவோர் மேம்பாட்டு மையமும், சென்னை தெற்கு ரோட்டரி சங்கமும் இணைந்து பொருளாதாரத்தில்
பின்தங்கிய பிரிவினருக்காக வழங்கும் இந்த இலவசப் பயிற்சியில் சேர குறைந்தபட்சம் 8-ஆம் வகுப்பு படித்திருக்க வேண்டும்.


இதுகுறித்து பல்கலைக்கழகம் வெளியிட்ட செய்தி:

குடும்பப் பொருளாதாரச் சூழல் காரணமாக படிப்பை பாதியில் நிறுத்திய மாணவர்களுக்கு, தொழில்நுட்ப கல்வித் தகுதி ஒன்றை வழங்கும் நோக்கத்தில் இந்தப் பயிற்சி அளிக்கப்படுகிறது.

இதில் சேர விரும்புபவர்கள் குறைந்தபட்சம் 8-ஆம் வகுப்பு படித்திருக்க வேண்டும். பயிற்சியில் மொத்தம் 50 பேர் சேர்த்துக்கொள்ளப்படுவர்.

பயிற்சி வகுப்பு 2015 ஜனவரி 3-ஆவது வாரத்தில் தொடங்கி 2015 ஜூன் மாதம் ரை நடத்தப்படும். திங்கள் முதல் வெள்ளிக்கிழமை வரை மாலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை வகுப்புகள் நடைபெறும்.

இதுதொடர்பான மேலும் விவரங்களுக்கு சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் சி.பி.டி.இ. வளாகத்தில் அமைந்துள்ள தொழில்முனைவோர் மேம்பாட்டு மையத்தை தொடர்பு கொள்ளலாம். தொலைபேசி எண்: 044 - 22358601.

Popular posts from this blog

அகஇ - 100% வாசித்தல் திறன் பெற்ற பள்ளிகளுக்கு ஊக்கத்தொகை - செயல்முறைகள்

அகஇ - 100% வாசித்தல் திறன் பெற்ற பள்ளிகளுக்கு ஊக்கத்தொகை - இயக்குனர் செயல்முறைகள்

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய யோகா

               சிபிஎஸ்இ பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் 40 முதல் 45 நிமிடங்கள் கட்டாய யோகா பயிற்சி அளிக்