Skip to main content

5 சான்றிதழ்: கூட்டுறவு சங்கம் மூலம் விரைவில் வழங்க முடிவு

இருப்பிடம், ஜாதி, வருவாய் உட்பட 5 சான்றிதழ்: கூட்டுறவு சங்கம் மூலம் விரைவில் வழங்க முடிவு
ஆன் - லைன் மூலம் ஜாதி, வருவாய், இருப்பிடம் உட்பட, 5 சான்றிதழ்களை பெற்று தரும் பணியை, தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கம், விரைவில் துவங்க உள்ளது. இதன் மூலம் வருவாய் துறை அலுவலகத்தில்
சான்றிதழுக்காக கிராமப்புற மக்கள் அலைக்கழிக்கப்படுவது தவிர்க்கப்படும்.

அரசு முடிவு:

மாநிலம் முழுவதும், பொதுமக்கள் தாலுகா அலுவலகத்தில் விண்ணப்பித்து, ஜாதி, வருவாய், இருப்பிடம் மற்றும் விதவை சான்றிதழ், முதல் பட்டதாரி சான்றிதழ் பெறுகின்றனர். தாலுகா அலுவலகத்தில் சான்றிதழ் உடனடியாக கிடைப்பதில்லை என்பதால், கிராம மக்கள் பல நாள் நடையாய், நடக்கின்றனர் அல்லது புரோக்கர்களிடம் பணத்தை கொடுத்து ஏமாறுகின்றனர். இதை தடுக்க, கிராமபுறங்களிலுள்ள வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்கள் மூலம் முதல்கட்டமாக ஜாதி, வருவாய், இருப்பிடம் மற்றும் விதவை சான்றிதழ், முதல் பட்டதாரி சான்றிதழ் ஆகிய, ஐந்து சான்றிதழ் வழங்க அரசு முடிவு செய்துள்ளது. மாநிலம் முழுவதும், 4,200 தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கம் உள்ளது. ஐந்து சான்றிதழ்களையும் பெற்று தருவதற்காக, கடந்த சில நாட்களாக, சேலம் மாவட்ட கூட்டுறவு கடன் சங்க அலுவலர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. இதுகுறித்து கூட்டுறவு சங்க அலுவலர் ஒருவர் கூறியதாவது:

கம்ப்யூட்டர் மூலம்...:

கிராமங்களில் ஜாதி, வருவாய், இருப்பிடம் மற்றும் விதவை சான்றிதழ், முதல் பட்டதாரி சான்றிதழ் பெற விரும்பும் மக்கள், அருகிலுள்ள அதற்கான ஆவணத்துடன் கூட்டுறவு சங்கத்தில் விண்ணப்பிக்க வேண்டும். இந்த விண்ணப்பம் ஆன் - லைன் மூலம், சம்பந்தப்பட்ட வி.ஏ.ஓ.,வுக்கு அனுப்பி வைக்கப்படும். மனுக்கள் மீது வி.ஏ.ஓ.,க்கள் விசாரணை நடத்தி, அதிகாரிகள் கையெழுத்திட்ட சான்றிதழ் ஆன் - லைன் மூலமாகவே, குறிப்பிட்ட நாட்களுக்குள் சம்பந்தப்பட்ட சங்கத்துக்கு அனுப்பி வைக்கப்படும். மனுதாரர், கூட்டுறவு சங்கத்தில் சென்று சான்றிதழை பெற்று கொள்ளலாம். முதல்கட்டமாக, சேலம் மாவட்டம், சங்ககிரி தாலுகாவில், கூட்டுறவு சங்கம் மூலம் சான்றிதழ் பெற்று தரும் பணி துவங்கியுள்ளது. இதற்காக மனுதாரர், 30 ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும். இதில், 6 ரூபாய் அரசுக்கு கட்டணம் செலுத்தப்படும். மீதி தொகையை சேவை செய்து தரும் கூட்டுறவு சங்கத்துக்கு வழங்கப்படும். இதில், அனைத்து பணிகளுமே கம்ப்யூட்டர் மூலமே மேற்கொள்ளப்படும். இவ்வாறு, அவர் கூறினார்.

Popular posts from this blog

மாணவர்களுக்கு 'லேப்டாப்' டிசம்பருக்குள் கிடைக்கும்

இலவச, 'லேப்டாப்' வழங்கும் திட்டத்தை, டிசம்பர் மாதத்திற்குள் முடிக்கும்படி, அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டம், 2011ல் துவக்கப்பட்டது. முதல், இரண்டு ஆண்டுகள், அரசு மற்றும் அரசு உதவி

கணக்கெடுப்பு ! : பள்ளி செல்லா மாணவர்கள்...: ஏப்., 7ம் தேதி முதல் துவக்கம்

கடலூர் மாவட்டத்தில், அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், பள்ளி செல்லா மற்றும் பள்ளியை விட்டு இடைநின்ற மாணவ, மாணவிகள் குறித்த விவரங்கள் கணக்கெடுக்கும் பணி வரும் 7ம் தேதி, துவங்குகிறது. தமிழகத்தில், ஆண்டுதோறும் அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், 6 வயது முதல் 14 வயதுக்குட்பட்ட பள்ளி செல்லா மற்றும் பள்ளியை விட்டு

10ம் வகுப்பு கணிதத்தேர்வில் போனஸ் மதிப்பெண்

பத்தாம் வகுப்பு தேர்விற்கான விடைத்தாள்கள் திருத்தும் பணி நடக்கிறது. பத்தாம் வகுப்பு கணிதத்தேர்வில், 'ஏ' பிரிவு ஒரு மதிப்பெண் வினாவிற்கான 15 வது கேள்வியில் ஆங்கில வழி வினா தவறாக கேட்கப்பட்டுள்ளதா