Skip to main content

பிளஸ் 2 மாணவர்களுக்கு பிப்ரவரி முதல் வாரம் செய்முறைத் தேர்வு: கல்வித் துறை திட்டம்


பிளஸ்2 மாணவர்களுக்கான செய்முறைத் தேர்வு பிப்ரவரி 7ம் தேதி தொடங்க தேர்வுத்துறை திட்டமிட்டுள்ளது. தமிழகத்தில் பிளஸ் 2  தேர்வு எழுத உள்ள மாணவர்களின் பட்டியல்கள் தேர்வுத்துறைக்கு வந்து சேர்ந்துள்ளது. தற்போது
அவற்றை சரிபார்க்கும் பணியில் தேர்வுத்துறை  தீவிரமாக ஈடுபட்டுள்ளது.
இதையடுத்து நேற்று நாமினல் ரோல் பட்டியல் அனைத்து பள்ளிகளுக்கும் அனுப்பி வைக்கப்பட்டது. அவற்றை சரிபார்க்கும்  வகையில் அனைத்து மாவட்டங்களிலும் இன்று கூட்டம் நடக்கிறது. ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒரு மையம் அமைக்கப்பட்டுள்ளது. தேர்வுத்துறை  அனுப்பிய பிரின்ட் அவுட்டுகளை அந்தந்த பள்ளி ஆசிரியர்கள் நேரில் அந்த மையங்களுக்கு எடுத்து வர வேண்டும். திருத்தம் இருந்தால் அதே  மையத்தில் திருத்தி இன்றே கொடுக்க வேண்டும் என்று தேர்வுத்துறை அறிவித்துள்ளது.  இந்த ஆண்டு கால அவகாசம் ஏதும் கொடுக்காமல் ஒரே  நாளில் திருத்தம் செய்து கொடுக்க வேண்டும் என்று தேர்வுத் துறை தெரிவித்துள்ளது.

இந்த பணிகளை விரைவாக முடித்த பிறகு பிப்ரவரி 7ம் தேதியில் இருந்து பிளஸ் 2 செய்முறைத் தேர்வுகளை நடத்த தேர்வுத் துறை  திட்டமிட்டுள்ளது. மேலும், தொழில் கல்வி பாடங்களில் இடம் பெற்றுள்ள தட்டச்சு பாடத்துக்கான எழுத்து தேர்வுடன் செய்முறைத் தேர்வும் நடப்பது  வழக்கம். ஆனால், இந்த ஆண்டு அதில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. பிளஸ் 2 அறிவியல் பாடங்களுக்கான செய்முறைத் தேர்வுகள் நடக்கும் போதே,  தட்டச்சு பாடத்துக்கான செய்முறைகளையும் முடிக்க வேண்டும் என்று தேர்வுத்துறை உத்தரவிட்டுள்ளது. பத்தாம் வகுப்புக்கான நாமினல் ரோல்  ஜனவரி 2ம் தேதி முதல் 6ம் தேதிக்குள் ஆன்லைன் மூலம் தேர்வுத்துறைக்கு அனுப்ப வேண்டும் என்றும் தேர்வுத் துறை உத்தரவிட்டுள்ளது.

Popular posts from this blog

மாணவர்களுக்கு 'லேப்டாப்' டிசம்பருக்குள் கிடைக்கும்

இலவச, 'லேப்டாப்' வழங்கும் திட்டத்தை, டிசம்பர் மாதத்திற்குள் முடிக்கும்படி, அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டம், 2011ல் துவக்கப்பட்டது. முதல், இரண்டு ஆண்டுகள், அரசு மற்றும் அரசு உதவி

கணக்கெடுப்பு ! : பள்ளி செல்லா மாணவர்கள்...: ஏப்., 7ம் தேதி முதல் துவக்கம்

கடலூர் மாவட்டத்தில், அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், பள்ளி செல்லா மற்றும் பள்ளியை விட்டு இடைநின்ற மாணவ, மாணவிகள் குறித்த விவரங்கள் கணக்கெடுக்கும் பணி வரும் 7ம் தேதி, துவங்குகிறது. தமிழகத்தில், ஆண்டுதோறும் அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், 6 வயது முதல் 14 வயதுக்குட்பட்ட பள்ளி செல்லா மற்றும் பள்ளியை விட்டு

10ம் வகுப்பு கணிதத்தேர்வில் போனஸ் மதிப்பெண்

பத்தாம் வகுப்பு தேர்விற்கான விடைத்தாள்கள் திருத்தும் பணி நடக்கிறது. பத்தாம் வகுப்பு கணிதத்தேர்வில், 'ஏ' பிரிவு ஒரு மதிப்பெண் வினாவிற்கான 15 வது கேள்வியில் ஆங்கில வழி வினா தவறாக கேட்கப்பட்டுள்ளதா