Skip to main content

2014-ம் ஆண்டிற்கான சிறந்த விஞ்ஞானி : ராதாகிருஷ்ணன் முதலிடம்


2014-ம் ஆண்டிற்கான உலகி்ன் சிறந்த 10 விஞ்ஞானிகள் பட்டியலில் இந்திய விஞ்ஞானி ராதாகிருஷ்ணனுக்கு முதலிடம் கிடைத்துள்ளது. லண்டனில் இருந்து வெளிவரும் நேச்சர் எனப்படும் அறிவியல் இதழ் ஒவ்வொரு ஆண்டும் உலகின் முதல் 10 இடங்களை பெறும் விஞ்ஞானிகளை
பட்டியலிட்டு வருகிறது. இந்த வரிசையில் இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தை(இஸ்ரோ) சேர்ந்த விஞ்ஞானி ராதாகிருஷ்ணனுக்கு முதலிட்டத்தை அளித்துள்ளது. மேலும் இந்தியாவை சேர்ந்த ஒருவரை தேர்வு செய்திருப்பது இதுவே முதல் முறையாகும்.

கேரள மாநிலத்தில் பிறந்த இவர் எலக்ட்ரிக்கல் அண்ட் எல்க்ட்ரானி்க்ஸ் பிரிவில் இன்ஜினியரிங் பட்டம் பெற்றார். பெங்களூருவில் எம்.பி.ஏ., பட்டமும், காரக்பூர் ஐ.ஐ.டி.,யில் பி.எச்.டி பட்டமும் பெற்றுள்ளார். இதன் பின்னர் 1973ம் ஆண்டு இஸ்ரோவல் பணிக்கு சேர்ந்தார். 
படிப்படியாக முன்னேறிய இவர் கடந்த 2009-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 31-ம் தேதி இஸ்ரோவின் தலைமை பொறுப்பை ஏற்றார். இவரது பதவிக்காலத்தில் தான் நிலவிற்கு சந்திராயன் விண்கலத்தை அனுப்பி நிலவில்நீர் இருப்பதை கண்டறிந்து உலகத்தை இந்தியாவி்ன் மீது பதிய வைத்தார் . 
மேலும் ஆசிய கண்டத்தில் உள்ள நாடுகளிலேயே முதன் முறையாக செவ்வாய்கிரகத்திற்கு மங்கல்யான் என்ற பெயரில் விண்கலத்தை அனுப்பிய நாடு இந்தியா என்ற பெருமையை நாட்டிற்கு பெற்று தந்தார். இதன் பி்ன்னர் பேஸ் புக்கில் இஸ்ரோவிற்கான வாசகர்கள் அதிகரித்தது என்பது குறிப்பிடத்தக்கது. 
இது மட்டுமல்லாது இவரது பதவிக்காலத்தி்ல் தான் ரஷ்யாவிடமிருந்து பெறப்பட்ட ராக்கெட் செலுத்த பயன்படும் கிரையோஜெனிக் தொழில் நுட்பத்தை சிறு சிறு மாற்றத்தை ஏற்படுத்தி அதன் திறனை மேம்படுத்தியது, மற்றும் சமீபத்தில் ஆளில்லா விண்கலத்தை அனுப்பி வைத்த மார்க் -3 ராக்கெட் தொழில் நுட்பம் போன்றவை குறிப்பிடத்தக்க அம்சமாகும். 
இளைஞர்களின் ஆர்வத்தை தூண்டி வரும் இவர் விஞ்ஞானத்தில் ஈடுபட வரும்படி இளைஞி மற்றும் இளைஞர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார். ஆராய்ச்சி பரிவில் ஆண், பெண் பேதம் கிடையாது என்று கூறி வரும் இவரின் கருத்தை அங்கீகரிக்கும் இஸ்ரோவில் பெண் விஞ்ஞானிகள் 20 சதவீதம் பேர் பணி புரிந்து வருகின்றனர்
நேரிடையாகவும், மறைமுகமாகவும் பல்வேறு துறைகளுக்கு இஸ்ரோ மூலம் உதவி புரிந்துள்ள இவர் வரும் 31-ம் தேதி தலைவர் பதவியில் இருந்து ஒய்வு பெற உள்ளார். 

Popular posts from this blog

ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம்

கருவூலம் மற்றும் கணக்குத்துறை முதன்மைச் செயலர் தகவல் வரும் நவம்பர் முதல் அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம் பெறுவதற்கான ஆணை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என கருவூலத்துறை முதன்மைச் செயலரும், ஆணையருமான தென்காசி சு. ஜவஹர் தெரிவித்தார்.தமிழ்நாடு கருவூலக் கணக்குத் துறை சார்பில், திண்டுக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனித வள மேலாண்மைத் திட்டத்தின் மூலம் பணம் பெற்று வழங்கும் அலுவலர்களுக்கான பயிற்சிக் கூட்டம் திங்கள்கிழமை தொடங்கியது. 6 நாள்கள் நடைபெறும் இப்பயிற்சி முகாமிற்கு திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் டி.ஜி. வினய் தலைமை வகித்தார். முகாமை கருவூல கணக்குத்துறை முதன்மைச் செயலர் மற்றும் ஆணையர் ஜவஹர்தொடக்கி வைத்துப் பேசியது: கடந்த 1964-ஆம் ஆண்டு முதல் தனித்துறையாகச் செயல்பட்டு வரும் கருவூலத்துறைக்கு தமிழகம் முழுவதும் 294 அலுவலகங்களும், தில்லியில் ஒரு அலுவலகமும் உள்ளன. அரசு ஊழியர்களுக்கான ஊதியம், நலத்திட்ட உதவித் தொகை, நிவாரணத் தொகை உள்ளிட்ட பல்வேறு பணிகளை கருவூலத் துறை மேற்கொண்டு வருகிறது. தமிழகம் முழுவதும் 9 லட்சம் அரசு ஊழியர்களின் பணிப் பதிவேடு...

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய யோகா

               சிபிஎஸ்இ பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் 40 முதல் 45 நிமிடங்கள் கட்டாய யோகா பயிற்சி அளிக்

அரசு துறைகள் மீது புகாரா? இனி ஆதார் எண் தேவை

 'அரசுத் துறைகள் குறித்து, ஆன்லைனில் புகார்களை பதிவு செய்வோர், இனி, ஆதார் எண்ணைக் குறிப்பிட வேண்டும்' என, மத்திய அரசு அறிவித்துள்ளது. நாடு முழுவதும் உள்ள அரசுத் துறைகள் மீதான புகார்கள் மற்றும் ஆலோசனைகளை,  www.pgportal.nic.in என்ற இணையதளத்தில் பதிவு