Skip to main content

அடுத்த கல்வியாண்டில் 10ம் வகுப்புக்கு முப்பருவ கல்வி: பொதுத்தேர்வு முறையில் மாற்றம் வர வாய்ப்பு?


வரும், 2015 - 16ம் கல்வியாண்டில், எஸ்.எஸ்.எல்.சி., எனப்படும் 10ம் வகுப்பு மாணவர்களுக்கு, முப்பருவ கல்வி முறையை அமல்படுத்த, மதிப்பீடு மற்றும் செயல்முறை ஆராய்ச்சித்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டுள்ளனர்
. இந்த திட்டம் அமலுக்கு வந்தால், பொதுத்தேர்வு முறையில் மாற்றம் உட்பட பல பிரச்னைகள் ஏற்பட வாய்ப்புள்ளதாக கூறி, கல்வி அதிகாரிகள் கலக்கத்தில் உள்ளனர்.

கிரேடு முறை:

கடந்த, 2012 - 13ம் கல்வி ஆண்டில், ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை, முப்பருவ கல்வி முறை நடைமுறைக்கு வந்தது. இத்திட்டப்படி, சமச்சீர் கல்வித்திட்ட பாடத்தை மூன்றாக பிரித்து, ஒவ்வொரு பாடத்திட்டத்திற்கும், அக மற்றும் புற மதிப்பீட்டில், மாணவரின் தேர்ச்சி கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டது. அக மதிப்பெண்படி, மாணவரின் தனித்திறனுக்கு, 40 மதிப்பெண், புற மதிப்பீடான எழுத்துத்தேர்வுக்கு, 60 மதிப்பெண்ணும் வழங்கப்படும். மொத்த மதிப்பெண்ணை கணக்கில் எடுத்து, மாணவர்களுக்கு, 'கிரேடு' முறை பின்பற்றப்படுகிறது. முப்பருவ திட்டம் அமலுக்கு வரும் போது படிப்படியாக, 2013 - 14ம் கல்வி ஆண்டில், ஒன்பதாம் வகுப்பு மற்றும், 2014 - 15ம் கல்வி ஆண்டில், எஸ்.எஸ்.எல்.சி.,க்கு நீட்டிப்பு செய்யப்படும் என, அறிவிக்கப்பட்டது. ஆனால், நடப்பு கல்வி ஆண்டில், எஸ்.எஸ்.எல்.சி.,க்கு முப்பருவ கல்வி அமல்படுத்த முடியாத நிலை ஏற்பட்டது. முக்கிய காரணமாக, பொதுத்தேர்வு முறையை மாற்றியமைக்க வேண்டிய கட்டாயம், கல்வித்துறைக்கு ஏற்பட்டது. மேலும், மாநில கல்விக்குள் வராத புதிய பாடத்திட்டத்தில், எஸ்.எஸ்.எல்.சி., மாணவர்கள், பொதுத்தேர்வு முறை அமலில் உள்ளதால், உடனடியாக மாற்றுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால், நடப்பு கல்வி ஆண்டில், எஸ்.எஸ்.எல்.சி., மாணவருக்கு, பழைய பாடத்திட்டத்தின் படியே, தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணி கழகம் சார்பில், புத்தகங்கள் சப்ளை செய்யப்பட்டு, பழைய முறையிலான பொதுத்தேர்வும் நடத்தப்படும்.

ஆய்வு:

இந்நிலையில், வரும், 2015 - 16ம் கல்வியாண்டில், எஸ்.எஸ்.எல்.சி., மாணவருக்கு, முப்பருவ கல்வி முறையை அமல்படுத்த அரசு முடிவு செய்துள்ளது. அதற்காக, திட்டம், வளர்ச்சி, சிறப்பு முயற்சியில் இயங்கும் மதிப்பீடு மற்றும் செயல்முறை ஆராய்ச்சி துறை அதிகாரிகள், தங்களது ஆய்வு பணியை மேற்கொண்டுள்ளனர்.

மதிப்பீடு செய்வதில் சிக்கல்

தமிழக அரசின், மதிப்பீடு மற்றும் செயல்முறை ஆராய்ச்சித் துறை அதிகாரிகள், வரும் கல்வியாண்டில், முப்பருவ கல்வி முறையை அமல்படுத்த, ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். முப்பருவ கல்வித் திட்டத்தில், பாடத்திட்டத்தை மூன்றாக பிரித்து, தேர்வு நடத்தப்பட்டு, மதிப்பீடு செய்யப்படுகிறது. அந்த முறையை, பொதுத்தேர்வு திட்டத்தில் உள்ள, எஸ்.எஸ்.எல்.சி.,க்கு கொண்டு வந்தால், மாணவர்களை மதிப்பீடு செய்வதில் சிக்கல் ஏற்படும். மேலும், மூன்று தேர்வுகளையும் சேர்த்து, பொதுத்தேர்வு நடத்துவது போல் நடத்தி, முடிவு வெளியிட வேண்டும். இலவச கட்டாயக்கல்வி உரிமைச் சட்டத்தின் படி, ஒன்பதாம் வகுப்பு வரை, 'ஆல் பாஸ்' திட்டம் அமலில் இருப்பதால், முக்கிய படிப்பான எஸ்.எஸ்.எல்.சி., படிப்பை, பொதுத்தேர்வாக நடத்தினால் தான், மாணவரை சரியான மதிப்பீடு செய்ய முடியும். இல்லையென்றால், மாணவரின் கல்வித்தகுதி முறையில் மாற்றம் கொண்டு வர வேண்டும்

Popular posts from this blog

ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம்

கருவூலம் மற்றும் கணக்குத்துறை முதன்மைச் செயலர் தகவல் வரும் நவம்பர் முதல் அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம் பெறுவதற்கான ஆணை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என கருவூலத்துறை முதன்மைச் செயலரும், ஆணையருமான தென்காசி சு. ஜவஹர் தெரிவித்தார்.தமிழ்நாடு கருவூலக் கணக்குத் துறை சார்பில், திண்டுக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனித வள மேலாண்மைத் திட்டத்தின் மூலம் பணம் பெற்று வழங்கும் அலுவலர்களுக்கான பயிற்சிக் கூட்டம் திங்கள்கிழமை தொடங்கியது. 6 நாள்கள் நடைபெறும் இப்பயிற்சி முகாமிற்கு திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் டி.ஜி. வினய் தலைமை வகித்தார். முகாமை கருவூல கணக்குத்துறை முதன்மைச் செயலர் மற்றும் ஆணையர் ஜவஹர்தொடக்கி வைத்துப் பேசியது: கடந்த 1964-ஆம் ஆண்டு முதல் தனித்துறையாகச் செயல்பட்டு வரும் கருவூலத்துறைக்கு தமிழகம் முழுவதும் 294 அலுவலகங்களும், தில்லியில் ஒரு அலுவலகமும் உள்ளன. அரசு ஊழியர்களுக்கான ஊதியம், நலத்திட்ட உதவித் தொகை, நிவாரணத் தொகை உள்ளிட்ட பல்வேறு பணிகளை கருவூலத் துறை மேற்கொண்டு வருகிறது. தமிழகம் முழுவதும் 9 லட்சம் அரசு ஊழியர்களின் பணிப் பதிவேடு...

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய யோகா

               சிபிஎஸ்இ பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் 40 முதல் 45 நிமிடங்கள் கட்டாய யோகா பயிற்சி அளிக்

அரசு துறைகள் மீது புகாரா? இனி ஆதார் எண் தேவை

 'அரசுத் துறைகள் குறித்து, ஆன்லைனில் புகார்களை பதிவு செய்வோர், இனி, ஆதார் எண்ணைக் குறிப்பிட வேண்டும்' என, மத்திய அரசு அறிவித்துள்ளது. நாடு முழுவதும் உள்ள அரசுத் துறைகள் மீதான புகார்கள் மற்றும் ஆலோசனைகளை,  www.pgportal.nic.in என்ற இணையதளத்தில் பதிவு