Skip to main content

JEE பிரதான தேர்வு: டிச.18-க்குள் விண்ணப்பிக்கலாம்


என்.ஐ.டி., ஐ.ஐ.டி. உள்ளிட்ட மத்திய அரசு நிதியுதவியுடன் இயங்கும் தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்களில் சேருவதற்கு 2015-ஆம் ஆண்டுக்கான ஒருங்கிணைந்த நுழைவுத் தேர்வு (ஜே.இ.இ. பிரதானத் தேர்வு) எழுத
விரும்புவோர், இணையம் மூலம் அடுத்த மாதம் (டிசம்பர்) 18-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

என்.ஐ.டி., ஐ.ஐ.ஐ.டி., ஐ.ஐ.எஸ்சி., ஐ.ஐ.டி. ஆகிய மத்திய அரசு நிதியுதவியின் கீழ் இயங்கும் தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்களில் சேர்வதற்கு அகில இந்திய அளவில் ஒருங்கிணைந்த நுழைவுத் தேர்வு நடத்தப்படுகிறது. இந்தத் தேர்வை மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சி.பி.எஸ்.இ.) நடத்துகிறது.

இந்த நுழைவுத் தேர்வு முதலில் ஜே.இ.இ. பிரதானத் தேர்வு (மெயின்), பின்னர் ஜே.இ.இ. இரண்டாம் நிலை தேர்வு(அட்வான்ஸ்டு) என இரு விதமாக நடத்தப்படும்.

இதில் ஜே.இ.இ. பிரதானத் தேர்வில் தகுதி பெறுபவர்கள் என்.ஐ.டி., ஐ.ஐ.டி. போன்ற மத்திய கல்வி நிறுவனங்களில் படிப்புகளில் சேர முடியும்.

ஜே.இ.இ. பிரதானத் தேர்வில் தகுதி பெற்று, அடுத்ததாக நடத்தப்படும் ஜே.இ.இ. இரண்டாம் நிலைத் தேர்விலும் தகுதி பெறுபவர்கள் ஐ.ஐ.எஸ்சி., ஐ.ஐ.டி., கல்வி நிறுவனங்களில் சேர முடியும்.

இப்போது 2015-ஆம் ஆண்டுக்கான ஜே.இ.இ. பிரதானத் தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு www.jeemain.nic.in என்ற இணைய தளம் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.

பிளஸ்-2 தேர்ச்சி பெற்றவர்களும், 2015-ஆம் ஆண்டில் பிளஸ்-2 தேர்வு எழுத உள்ளவர்களும் இந்த நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்.

கடந்த 7-ம் தேதி முதல் விண்ணப்பிக்க அனுமதிக்கப்பட்டுள்ளது. அடுத்த மாதம் 18-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.

தேர்வு அறை அனுமதிச் சீட்டை 2015 மார்ச் 1-ஆம் தேதி முதல் விண்ணப்பதாரர்கள் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

இதற்கான எழுத்துத் தேர்வு 4-4-2015 அன்று நடத்தப்படுகிறது. ஆன்-லைன் தேர்வு 10-4-2015, 11-4-2015 ஆகிய தேதிகளில் நடத்தப்பட உள்ளது.

தேர்வு முடிவு 27-4-2015 அன்று வெளியிடப்படும். பின்னர் ஜே.இ.இ. மதிப்பெண், விண்ணப்பதாரரின் பிளஸ்-2 மதிப்பெண் ஆகியவற்றின் அடிப்படையில் தரவரிசைப் பட்டியல் தயாரிக்கப்பட்டு 7-7-2015 அன்று வெளியிடப்படும். இதனடிப்படையிலேயே கல்வி நிறுவனங்களில், மாணவர்கள் சேர முடியும்.

ஜே.இ.இ. இரண்டாம் நிலைத் தேர்வு 24-5-2015 அன்று நடத்தப்பட உள்ளது. ஜே.இ.இ. பிரதானத் தேர்வு தகுதிப் பட்டியலில் முதல் 1.50 லட்சம் பேர் மட்டுமே இந்த இரண்டாம் நிலைத் தேர்வை எழுத அனுமதிக்கப்படுவர். இந்த ஜே.இ.இ. தேர்வை ஒருவர் 3 முறை மட்டுமே எழுத முடியும்.

Popular posts from this blog

அகஇ - 100% வாசித்தல் திறன் பெற்ற பள்ளிகளுக்கு ஊக்கத்தொகை - செயல்முறைகள்

அகஇ - 100% வாசித்தல் திறன் பெற்ற பள்ளிகளுக்கு ஊக்கத்தொகை - இயக்குனர் செயல்முறைகள்

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய யோகா

               சிபிஎஸ்இ பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் 40 முதல் 45 நிமிடங்கள் கட்டாய யோகா பயிற்சி அளிக்