Skip to main content

உங்கள் பிள்ளைகளை பாதுகாக்க/ கண்காணிக்க ஒரு இலவச ஆப்ஸ்


 உங்கள் பிள்ளைகளை பாதுகாக்க/ கண்காணிக்க ஒரு இலவச ஆப்ஸ்
இது தான் இந்த வார ஹாட் டாபிக். பிள்ளைகளை வெளியே அனுப்பிவிட்டு வீட்டில் மடியில் நெருப்பு கட்டி கொண்டுதான் பெரும்பாலான பெற்றோர்கள் இருக்கிறார்கள். அவர்களின் கவலையை போக்க பி ஸேஃப் என்னும்
புது வகை ஆப்பை ஆன்ட்ராயிட் / ஆப்பிள் பிளாட்பாரத்தில் இலவசமாக
தரவிறக்கம் செய்து கொள்ளலாம். உங்கள் பிள்ளைகளின்
மொபைல் ஃபோனில் இதை இன்ஸ்டால் செய்து விட்டால் – கொஞ்சம் கவலை இல்லாமல் இருக்கலாம்.

இதன் மூலம் உங்களின் பிள்ளைகளை நீங்கள் துல்லியமாக கண்காணிக்க
முடியும். அவர்கள் எங்கு இருக்கின்றனர் எங்கு செல்கின்றனர் – ஏதாவது ஒரு இடத்தில் அதிக நேரம் நடமாட்டம் இல்லாமல் இருக்கிறார்களா என்று வீட்டின் கணனியில் நீங்கள்அவர்கள் இருக்கும் ஊர் – தெரு – கதவிலக்கம்
முதற்க்கொண்டு பார்க்க முடியும்.

அது போக இந்த ஆப்ஸை இன்ஸ்டால் செய்திருக்கும் பிள்ளைகள் தங்களுக்கு ஏதாவாது விபரீதம்ஏற்படுகிறது என உணர்ந்தால் இதில் உள்ள கார்டியன்
அலர்ட் – “Guardian Alert” என்ற பொத்தானை அழுத்தினால் உங்களுக்கு அவர்கள்
ஆபத்தில் உள்ளார்கள் என இலவசமாக தகவல் வரும்.இந்த அலெர்ட் வசதி பெற்றோர் அல்லது பல நண்பர்களுக்கு கூட ஒரே நேரத்தில் தெரிவிக்க
இயலும். சில சமயம் நீங்கள் ஒரு இடத்தில் மாட்டிகொண்டீர்கள் அல்லது அங்கிருந்து யாரும் சந்தேகபடாமல் தப்பிக்கவும் இதில் இன்னொரு வசதி உண்டு அது தான் ஃபேக் கால் – “Fake Call” – மொபைலை நோண்டுவது போல் இந்த பட்டனை அழுத்தினால் உங்க ஃபோனுக்கு சிக்னல் இல்லைனா கூட கால் வரும் – உடனே நீங்களும் உங்களுக்கு கால் வந்திருக்கிறது – எக்ஸ்கியூஸ் மீன்னு எஸ் ஆகிடலாம் – இது பிள்ளைகள் மற்றும்
தனியே வேலைக்கு செல்லும் பெண்கள், இரவில் பணிபுரியும் பெண்களுக்கு மிகப்பெரிய வரப்பிசாதாமக அமையும்.

உடனே தயக்கம் என்ன – மொபைல் இல்லாத வளர்ந்த பிள்ளைகளே இல்லை என்னும் இந்த காலத்தில் இந்த வசதியை இலவசமாய் செய்து கொடுங்கள்
உங்களின் பிள்ளைகளின் கவலையை அடியோடு மற்ந்து விடுங்கள்.

இதன் மூலம் உங்கள் பிள்ளைகளின் ந்டவடிக்கையை கூட
நீங்கள் கண்கானிக்க முடியும். இது பல மாணவ / மாணைகளின் தவறான பாதைக்கு செல்வதை தடுக்க முடியும். என்ன மகிழ்ச்சி தானே பெற்றோர்களே!?

Apple Patrons FREE Download Link - https://itunes.apple.com/in/

Android Achubichus FREE Download Link - https://
play.google.com/store/apps/details?
id=com.bipper.app.bsafe&hl=en
#sanjana chayya


Popular posts from this blog

அரசு துறைகள் மீது புகாரா? இனி ஆதார் எண் தேவை

 'அரசுத் துறைகள் குறித்து, ஆன்லைனில் புகார்களை பதிவு செய்வோர், இனி, ஆதார் எண்ணைக் குறிப்பிட வேண்டும்' என, மத்திய அரசு அறிவித்துள்ளது. நாடு முழுவதும் உள்ள அரசுத் துறைகள் மீதான புகார்கள் மற்றும் ஆலோசனைகளை,  www.pgportal.nic.in என்ற இணையதளத்தில் பதிவு

ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம்

கருவூலம் மற்றும் கணக்குத்துறை முதன்மைச் செயலர் தகவல் வரும் நவம்பர் முதல் அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம் பெறுவதற்கான ஆணை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என கருவூலத்துறை முதன்மைச் செயலரும், ஆணையருமான தென்காசி சு. ஜவஹர் தெரிவித்தார்.தமிழ்நாடு கருவூலக் கணக்குத் துறை சார்பில், திண்டுக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனித வள மேலாண்மைத் திட்டத்தின் மூலம் பணம் பெற்று வழங்கும் அலுவலர்களுக்கான பயிற்சிக் கூட்டம் திங்கள்கிழமை தொடங்கியது. 6 நாள்கள் நடைபெறும் இப்பயிற்சி முகாமிற்கு திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் டி.ஜி. வினய் தலைமை வகித்தார். முகாமை கருவூல கணக்குத்துறை முதன்மைச் செயலர் மற்றும் ஆணையர் ஜவஹர்தொடக்கி வைத்துப் பேசியது: கடந்த 1964-ஆம் ஆண்டு முதல் தனித்துறையாகச் செயல்பட்டு வரும் கருவூலத்துறைக்கு தமிழகம் முழுவதும் 294 அலுவலகங்களும், தில்லியில் ஒரு அலுவலகமும் உள்ளன. அரசு ஊழியர்களுக்கான ஊதியம், நலத்திட்ட உதவித் தொகை, நிவாரணத் தொகை உள்ளிட்ட பல்வேறு பணிகளை கருவூலத் துறை மேற்கொண்டு வருகிறது. தமிழகம் முழுவதும் 9 லட்சம் அரசு ஊழியர்களின் பணிப் பதிவேடு...

ஆசிரியர் இல்லாமல் நாம் இல்லை!-முனைவர் மா.தச.பூர்ணாச்சாரி,வழக்கறிஞர், மதுரை.94432 66674.

ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் பள்ளிப்பருவம் முக்கியமானது. முதன் முதலாக தாய் தந்தையுடன் சென்று, புத்தாடை அணிந்து, ஆசிரியரை வணங்கி, புத்தரிசி அல்லது நெல்லில் எழுத்தை எழுதத் துவங்கிய நாளை மறக்க இயலாது.வெளி உலகைப் புரிந்து கொள்ளவும், தாய் தந்தையரால் தர முடியாத கல்வி மற்றும் பயிற்சியினை கல்வி மூலமாக ஆசிரியரால்