Skip to main content

வேலைவாய்ப்பு அலுவலக பதிவுமூப்பு முறை நீக்கம்: சிறப்பாசிரியர் நியமனத்துக்கு தேர்வு

வேலைவாய்ப்பு அலுவலக பதிவுமூப்பு முறை நீக்கம்: சிறப்பாசிரியர் நியமனத்துக்கு இனி போட்டித்தேர்வு
தையல், ஓவியம், உடற்கல்வி உள் ளிட்ட சிறப்பாசிரியர்கள் இனிமேல் போட்டித்தேர்வு மூலம் தேர்வுசெய் யப்படுவார்கள். இதுவரை நடைமுறையில் இருந்துவந்த பதிவுமூப்பு முறையை ரத்துசெய்து அரசு
உத்தரவிட்டுள்ளது.

இதுதொடர்பாக தமிழக அரசின் பள்ளிக்கல்வித்துறை முதன்மைச் செயலாளர் டி.சபீதா வெளியிட்டுள்ள அரசு உத்தரவில் கூறியிருப்பதாவது:-

சீனியாரிட்டி இல்லை

உடற்கல்வி, ஓவியம், தையல், இசை ஆகிய சிறப்பாசிரியர்கள் நிய மனத்துக்கு இதுவரை கடைப்பிடிக் கப்பட்டுவந்த வேலைவாய்ப்பு அலுவலக பதிவுமூப்பு முறை (சீனியாரிட்டி) நீக்கப்பட்டு அதற்குப் பதிலாக போட்டித்தேர்வு நடத்தப்படும்.

எழுத்துத் தேர்வுக்கு 95 மதிப் பெண்ணும், நேர்முகத்தேர்வுக்கு 5 மதிப்பெண்ணும் (மொத்தம் 100 மார்க்) ஒதுக்கப்படும். எழுத்துத் தேர்வில் வெற்றிபெறுவோரில் ஒரு காலியிடத்துக்கு 5 பேர் என்ற விகிதாச்சார அடிப்படையில் நேர் முகத்தேர்வுக்கு அனுமதிக்கப் படுவர்.

கொள்குறிவகையிலான (அப்ஜெக்டிவ்) எழுத்துத்தேர்வில் மொத்தம் 190 கேள்விகள் கேட்கப்படும். தேர்வு நேரம் 3 மணி நேரம். ஒரு கேள்விக்கு அரை மதிப்பெண். எழுத்துத்தேர்வுக்கான அறிவிப்பை வெளியிட்டு தேர்வு நடத்துவது ஆசிரியர்தேர்வு வாரியத்தின் பணி ஆகும்.

மதிப்பெண் முறை

5 மதிப்பெண் கொண்ட நேர்முகத்தேர்வுக்கு கீழ்க்காணும் முறையில் மதிப்பெண் வழங்கப்படும்.

1. கூடுதல் கல்வித்தகுதி - அரை மதிப்பெண்.

2. தனியார் பள்ளியில் பணி அனுபவம் - அரை மதிப்பெண்.

3. அரசு பள்ளியில் பணி அனுபவம் - ஒரு மதிப்பெண்.

4. இதர செயல்பாடுகள் (என்சிசி, என்எஸ்எஸ், ஃபைன் ஆர்ட்ஸ்) - ஒன்றரை மதிப்பெண்.

5. ஆளுமை மற்றும் தோற்றம் - ஒன்றரை மதிப்பெண்.

எழுத்துத்தேர்வு மதிப்பெண், நேர்முகத்தேர்வு மதிப்பெண் அடிப்படையில் ரேங்க் பட்டியல் தயாரிக்கப்பட்டு இடஒதுக்கீட்டு விதிமுறைகளின்படி சிறப்பாசிரி யர்கள் தேர்வுசெய்யப்படு வார்கள்.

இவ்வாறு அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

Popular posts from this blog

மாணவர்களுக்கு 'லேப்டாப்' டிசம்பருக்குள் கிடைக்கும்

இலவச, 'லேப்டாப்' வழங்கும் திட்டத்தை, டிசம்பர் மாதத்திற்குள் முடிக்கும்படி, அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டம், 2011ல் துவக்கப்பட்டது. முதல், இரண்டு ஆண்டுகள், அரசு மற்றும் அரசு உதவி

கணக்கெடுப்பு ! : பள்ளி செல்லா மாணவர்கள்...: ஏப்., 7ம் தேதி முதல் துவக்கம்

கடலூர் மாவட்டத்தில், அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், பள்ளி செல்லா மற்றும் பள்ளியை விட்டு இடைநின்ற மாணவ, மாணவிகள் குறித்த விவரங்கள் கணக்கெடுக்கும் பணி வரும் 7ம் தேதி, துவங்குகிறது. தமிழகத்தில், ஆண்டுதோறும் அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், 6 வயது முதல் 14 வயதுக்குட்பட்ட பள்ளி செல்லா மற்றும் பள்ளியை விட்டு

10ம் வகுப்பு கணிதத்தேர்வில் போனஸ் மதிப்பெண்

பத்தாம் வகுப்பு தேர்விற்கான விடைத்தாள்கள் திருத்தும் பணி நடக்கிறது. பத்தாம் வகுப்பு கணிதத்தேர்வில், 'ஏ' பிரிவு ஒரு மதிப்பெண் வினாவிற்கான 15 வது கேள்வியில் ஆங்கில வழி வினா தவறாக கேட்கப்பட்டுள்ளதா