Skip to main content

இனி விண்டோஸ் 7 சிஸ்டத்துடன் புதிய கம்ப்யூட்டர்களை வாங்க முடியாதா?

சென்ற நவம்பர் 1 முதல், தன் கம்ப்யூட்டர் தயாரிப்பு ஒப்பந்த நிறுவனங்களுக்கு, விண்டோஸ் 7 மற்றும் விண்டோஸ் 8 ஆப்பரேட்டிங் சிஸ்டங்களுக்கான உரிமம் வழங்குவதனை, மைக்ரோசாப்ட் நிறுத்திவிட்டது. இனி, புதிய கம்ப்யூட்டர் வாங்குபவர்களுக்கு, கம்ப்யூட்டரில் விண்டோஸ் 8.1
சிஸ்டம் மட்டுமே பதிந்து வழங்கப்படும்.
அப்படியானால், இனி விண்டோஸ் 7 சிஸ்டத்துடன் புதிய கம்ப்யூட்டர்களை வாங்க முடியாதா? என்ற கேள்வி பலரின் மனதில் எழுந்துள்ளது. இந்த அறிவிப்பின் தாக்கம் எவ்வாறு இருக்கும் என பார்க்கலாம்.
1. மைக்ரோசாப்ட் நிறுவனத்துடன், விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டம் கொண்டு கம்ப்யூட்டர்களை விற்பனை செய்திட ஒப்பந்தம் மேற்கொண்டுள்ள எச்.பி. மற்றும் டெல் போன்ற நிறுவனங்களுக்கு, மைக்ரோசாப்ட், விண்டோஸ் 7 ஹோம் பேசிக், ஹோம் பிரிமியம், அல்லது அல்டிமேட் மற்றும் விண்டோஸ் 8 உரிமங்களை வழங்காது. ஆனால், கையில் ஸ்டாக் வைத்திருக்கும் கம்ப்யூட்டர்களை, இந்தநிறுவனங்கள் விண்டோஸ் 7 / விண்டோஸ் 8 உரிமத்துடன் விற்பனை செய்து கொள்ளலாம். வர்த்தக நிறுவனங்களுக்கு, விண்டோஸ் 7 புரபஷனல் சிஸ்டத்துடன் 2015 ஆம் ஆண்டு வரை உரிமம் வழங்கப்படும். ஆனால், கடந்த சில மாதங்களாகவே, விண்டோஸ் 7 விரும்பிய வாடிக்கையாளர்கள், விண்டோஸ் 8 சிஸ்டம் கேட்டு வாங்கிப் போனார்கள். 
2. அப்படியானால், விண்டோஸ் 7 சிஸ்டத்திற்கான அப்டேட் பைல்கள் இனி மைக்ரோசாப்ட் நிறுவனத்தால் வழங்கப்பட மாட்டாதா? என்று சிலர் சந்தேகப்படலாம். உரிமம் நிறுத்தப்பட்டதற்கும் இதற்கும் தொடர்பு இல்லை. வரும் 2020 ஆம் ஆண்டு ஜனவரி வரை, விண்டோஸ் 7 சிஸ்டம் வாங்கியவர்களுக்கு, பாதுகாப்பு மற்றும் பிழைதிருத்த குறியீட்டுப் பைல்கள் நிச்சயம் வழங்கப்படும். விண்டோஸ் 7 சிஸ்டத்தைத்தான், உலகில் 52%க்கு மேற்பட்டவர்கள் பயன்படுத்தி வருகின்றனர். எனவே, இவர்களின் நலன்களைப் பாதுகாப்பது, மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் கடமை. எனவே, அப்டேட் பைல்கள் வழக்கம்போல், ஒவ்வொரு இரண்டாவது செவ்வாய் கிழமையும் வழங்கப்படும். ஏற்கனவே வழங்கப்பட்ட சர்வீஸ் பேக் 1, வரும் ஜனவரியில் காலாவதியாகிறது. தொடர்ந்து அடுத்த நிலை பைல்கள் வழங்கப்படும்.
3. விண்டோஸ் 7 புரபஷனல் எடிஷனுக்கு தற்போது உரிமம் கிடைக்கிறது என்றால், அது எவ்வளவு ஆண்டுகளுக்குத் தொடர்ந்து வழங்கப்படும்? இந்த கேள்விக்கு, மைக் ரோசாப்ட் இன்னும் பதில் தரவில்லை.சாதாரண வாடிக்கையாளர்களுக்கு, உரிமம் வழங்குவதனை நிறுத்திவிட்டு, வர்த்தக நிறுவனங்களுக்கான சிஸ்டம் உரிமங்களை மட்டும் ஏன் மைக்ரோசாப்ட் வழங்குகிறது? இதற்குக் காரணம், இந்த வர்த்தக நிறுவனங்கள், விண்டோஸ் 8 சிஸ்டத்திற்கு மாறுவதற்கு ஆர்வம் காட்டவில்லை. மேலும், விண்டோஸ் எக்ஸ்பி சிஸ்டத்தை இவர்கள் பெரும்பாலும் பயன்படுத்தி வந்தனர். அதற்கான சப்போர்ட் நிறுத்தப்பட்டவுடன், விண்டோஸ் 8 சிஸ்டத்திற்கு மாறாமல், அனைவரும் விண்டோஸ் 7 சிஸ்டத்திற்கு மாற்றிக் கொண்டனர். எனவே தான், மைக்ரோசாப்ட், இந்த நிறுவனங்களுக்கு இன்னும் உரிமங்களை வழங்குகிறது. அடுத்த ஆண்டு மத்தியில் தான், விண்டோஸ் 10 வர இருக்கிறது. அதுவரை விண்டோஸ் 7 புரபஷனல் பதிப்பிற்கு, உரிமங்கள் வழங்கப்படும்.
4. மைக்ரோசாப்ட் நிறுவனத்தைப் பொறுத்தவரை, விண்டோஸ் 8 சிஸ்டம், மிகப் பெரிய தோல்வியைத் தந்தது. இரண்டு ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையிலும், விண்டோஸ் 8 பெரிய அளவில் கம்ப்யூட்டர் பயனாளர்களைச் சென்றடையவில்லை. ஒரு கால 
கட்டத்தில், விண்டோஸ் எக்ஸ்பி விற்பனை உரிமம் நிறுத்தப்பட்ட போதிலும், அதற்கான பாதுகாப்பு அப்டேட் பைல்கள் தரப்படவே மாட்டாது என அறிவிக்கப்பட்ட போதிலும், விண்டோஸ் 8 சிஸ்டம் பயன்படுத்தியவர்களைக் காட்டிலும், விண்டோஸ் எக்ஸ்பி பயன்படுத்தியவர்களே அதிகம் இருந்தனர். இயங்கிக் கொண்டிருந்த மொத்த பெர்சனல் கம்ப்யூட்டர்களில், ஐந்தில் ஒரு பங்கு, எக்ஸ்பி சிஸ்டத்திலேயே தொடர்ந்து இயங்கி வந்தன. விண்டோஸ் 8 அறிமுகப்படுத்திய பின்னால், அதற்குப் புதிய வாடிக்கையாளர்களும் மிகக் குறைவு. வேறு சிஸ்டம் பயன்படுத்தியவர்களில் இதற்கு அப்கிரேட் செய்தவர்கள் எண்ணிக்கையும் மிகவும் குறைவு. எனவே, விண்டோஸ் 10 சிஸ்டம் இந்த இழப்புகளை ஈடு கட்டும் என மைக்ரோசாப்ட் எதிர்பார்க்கிறது.
அதிர்ஷ்டவசமாக, விண்டோஸ் இயக்கத்திற்குப் பழகியவர்களின் அனைத்து எதிர்பார்ப்புகளையும் நிறைவேற்றுவதாகவே, விண்டோஸ் 10 உள்ளது. அவற்றுடன் கூடுதல் வசதிகளையும் தருகிறது. தொடர்ந்து விண்டோஸ் 8 பயன்படுத்த நினைப்பவர்களின் எதிர்பார்ப்பினையும் நிறைவேற்றுகிறது.

Popular posts from this blog

ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம்

கருவூலம் மற்றும் கணக்குத்துறை முதன்மைச் செயலர் தகவல் வரும் நவம்பர் முதல் அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம் பெறுவதற்கான ஆணை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என கருவூலத்துறை முதன்மைச் செயலரும், ஆணையருமான தென்காசி சு. ஜவஹர் தெரிவித்தார்.தமிழ்நாடு கருவூலக் கணக்குத் துறை சார்பில், திண்டுக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனித வள மேலாண்மைத் திட்டத்தின் மூலம் பணம் பெற்று வழங்கும் அலுவலர்களுக்கான பயிற்சிக் கூட்டம் திங்கள்கிழமை தொடங்கியது. 6 நாள்கள் நடைபெறும் இப்பயிற்சி முகாமிற்கு திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் டி.ஜி. வினய் தலைமை வகித்தார். முகாமை கருவூல கணக்குத்துறை முதன்மைச் செயலர் மற்றும் ஆணையர் ஜவஹர்தொடக்கி வைத்துப் பேசியது: கடந்த 1964-ஆம் ஆண்டு முதல் தனித்துறையாகச் செயல்பட்டு வரும் கருவூலத்துறைக்கு தமிழகம் முழுவதும் 294 அலுவலகங்களும், தில்லியில் ஒரு அலுவலகமும் உள்ளன. அரசு ஊழியர்களுக்கான ஊதியம், நலத்திட்ட உதவித் தொகை, நிவாரணத் தொகை உள்ளிட்ட பல்வேறு பணிகளை கருவூலத் துறை மேற்கொண்டு வருகிறது. தமிழகம் முழுவதும் 9 லட்சம் அரசு ஊழியர்களின் பணிப் பதிவேடு...

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய யோகா

               சிபிஎஸ்இ பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் 40 முதல் 45 நிமிடங்கள் கட்டாய யோகா பயிற்சி அளிக்

அரசு துறைகள் மீது புகாரா? இனி ஆதார் எண் தேவை

 'அரசுத் துறைகள் குறித்து, ஆன்லைனில் புகார்களை பதிவு செய்வோர், இனி, ஆதார் எண்ணைக் குறிப்பிட வேண்டும்' என, மத்திய அரசு அறிவித்துள்ளது. நாடு முழுவதும் உள்ள அரசுத் துறைகள் மீதான புகார்கள் மற்றும் ஆலோசனைகளை,  www.pgportal.nic.in என்ற இணையதளத்தில் பதிவு