Skip to main content

அக்னி - 2 ஏவுகணை சோதனை வெற்றி

பாலாசூர்:அணு ஆயுதங்களை சுமந்து சென்று இலக்கை தாக்க கூடிய, அக்னி - 2 ஏவுகணை சோதனை, நேற்று வெற்றிகரமாக நடந்தது.

ஒடிசா மாநிலம் பாலாசூரில், நடமாடும் ஏவுதளத்தில் இருந்து, அக்னி - 2 ஏவுகணை சோதனை வெற்றிகரமாக நேற்று நடத்தப்பட்டது. இதுகுறித்து, ராணுவ அமைச்சக வட்டாரங்கள் கூறியதாவது:அக்னி ஏவுகணைகள்,
தொழில்நுட்ப ரீதியாக மேம்படுத்தப்பட்டு, அவ்வப்போது சோதித்து பார்க்கப்படுகின்றன. இதன்படி, அக்னி - 2 ஏவுகணை, கடந்தாண்டு ஏப்ரலில் சோதித்து பார்க்கப்பட்டது.தற்போது, இதில் சில நவீன தொழில்நுட்ப வசதிகள் சேர்க்கப்பட்டு மேம்படுத்தப் பட்டுள்ளன. குறிப்பாக, ஏவுகணையை துல்லியமாக இலக்கை நோக்கி செலுத்தக் கூடிய வகையிலான தொழில்நுட்ப வசதி புகுத்தப்பட்டுள்ளது.

மேலும், அதிநவீன ரேடார்கள் மூலம் இயக்கும் வகையில், இந்த ஏவுகணையின் தொழில்நுட்பம் வடிவமைக்கப்பட்டுள்ளது.ராணுவமும், பாதுகாப்பு மற்றும் ஆராய்ச்சி மேம்பாட்டு துறையும் சேர்ந்து இந்த ஏவுகணையை உருவாக்கிஉள்ளன. இந்த ஏவுகணை, 2,000 கி.மீ., துாரம் வரை சென்று தாக்க கூடியது; 1,000 கிலோ எடையுள்ள வெடி பொருட்களை சுமந்து செல்லும் திறன் உடையது.இவ்வாறு, ராணுவ அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்தன.

Popular posts from this blog

மாணவர்களுக்கு 'லேப்டாப்' டிசம்பருக்குள் கிடைக்கும்

இலவச, 'லேப்டாப்' வழங்கும் திட்டத்தை, டிசம்பர் மாதத்திற்குள் முடிக்கும்படி, அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டம், 2011ல் துவக்கப்பட்டது. முதல், இரண்டு ஆண்டுகள், அரசு மற்றும் அரசு உதவி

கணக்கெடுப்பு ! : பள்ளி செல்லா மாணவர்கள்...: ஏப்., 7ம் தேதி முதல் துவக்கம்

கடலூர் மாவட்டத்தில், அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், பள்ளி செல்லா மற்றும் பள்ளியை விட்டு இடைநின்ற மாணவ, மாணவிகள் குறித்த விவரங்கள் கணக்கெடுக்கும் பணி வரும் 7ம் தேதி, துவங்குகிறது. தமிழகத்தில், ஆண்டுதோறும் அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், 6 வயது முதல் 14 வயதுக்குட்பட்ட பள்ளி செல்லா மற்றும் பள்ளியை விட்டு

10ம் வகுப்பு கணிதத்தேர்வில் போனஸ் மதிப்பெண்

பத்தாம் வகுப்பு தேர்விற்கான விடைத்தாள்கள் திருத்தும் பணி நடக்கிறது. பத்தாம் வகுப்பு கணிதத்தேர்வில், 'ஏ' பிரிவு ஒரு மதிப்பெண் வினாவிற்கான 15 வது கேள்வியில் ஆங்கில வழி வினா தவறாக கேட்கப்பட்டுள்ளதா