Skip to main content

படிப்பறிவு இல்லாமல் 28 கோடிப் பேர்: ஆளுநர் கவலை


இந்தியாவில் 28 கோடிக்கும் அதிகமானோர் படிப்பறிவு இல்லாமல் இருப்பது வருத்தமளிப்பதாக உள்ளது என்று ஆளுநர் ரோசய்யா கூறினார். கல்வி- சமூக ஆராய்ச்சி நிறுவனத்தின் சார்பில் சென்னையில் ஞாயிற்றுக்கிழமை
நடைபெற்ற நிகழ்ச்சியில் ஏழை மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை, மாற்றுத்திறனாளிகளுக்கு நலத் திட்ட உதவிகள் வழங்கி ஆளுநர் ரோசய்யா பேசியது:

இந்தியா பல நிலைகளில் முன்னேற்றம் கண்டுவரும் நிலையில், கல்வியில் பின் தங்கியிருப்பது வருத்தமளிப்பதாக உள்ளது. கடந்த 2011-ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி, நாட்டில் 74 சதவீதம் பேர் மட்டுமே கல்வி அறிவு பெற்றுள்ளனர். சுமார் 28.7 கோடி பேர் படிப்பறிவு இல்லாமல் உள்ளனர். இதில், பெண்கள் அதிகம். மாணவர்கள், மாற்றுத்திறனாளிகள், பெண்கள், கிராமப்புற மக்களின் முன்னேற்றத்திற்குப் பங்காற்ற தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள், தனியார் அமைப்புகள் முன்வரவேண்டும். இந்த விஷயத்தில் பல்வேறு தனியார் நிறுவனங்கள் அரசுடன் இணைந்து செயல்பட முன்வந்திருப்பது பாராட்டுதலுக்குரியது என்றார். நிகழ்ச்சியில், யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் நிறுவனத்தின் தலைவரும், நிர்வாக இயக்குநருமான மிலித்ந் காரத், போர் வாகனங்கள் ஆராய்ச்சி, மேம்பாட்டு அமைப்பின் இயக்குநர் பி.சிவக்குமார், நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் சி.நரசிம்மன், வளரும் அறிவியல் இதழின் ஆசிரியர் சிவக்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Popular posts from this blog

அகஇ - 100% வாசித்தல் திறன் பெற்ற பள்ளிகளுக்கு ஊக்கத்தொகை - செயல்முறைகள்

அகஇ - 100% வாசித்தல் திறன் பெற்ற பள்ளிகளுக்கு ஊக்கத்தொகை - இயக்குனர் செயல்முறைகள்

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய யோகா

               சிபிஎஸ்இ பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் 40 முதல் 45 நிமிடங்கள் கட்டாய யோகா பயிற்சி அளிக்