Skip to main content

அண்ணாமலைப் பல்கலைக்கழக தொலைதூரக்கல்வி மையத்தில் விண்ணப்பிக்க டிச.1 கடைசி தேதி



சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக தொலைதூரக்கல்வி மையத்தில் மொத்தம் சுமார் 3 லட்சம் பேர் பயிலுகின்றனர். இந்த கல்வி ஆண்டில் மாணவ, மாணவியர்கள் சேர்ந்து பயில விண்ணப்பிக்க டிச.1-ம் தேதி கடைசி நாளாகும்
என அறிவிக்கப்பட்டுள்ளது.

மொத்தம் 259 படிப்புகள்: அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் சேவையை கருதி 1979-ல் தொலைதூரக்கல்வி இயக்ககம் தொடங்கப்பட்டது. அண்ணாமலைப் பல்கலை. தொலைதூரக்கல்வி மையத்தில் புதுதில்லி தொலைதூரக்கல்வி கவுன்சில் (Distance Education Council, New Delhi) அனுமதி பெற்ற மொத்தம் 259 படிப்புகள் நடத்தப்படுகின்றன. மருத்துவம் படிப்புகள் 12-ம், மருந்தியல் படிப்புகள் 2-ம். வேளாண் படிப்புகள்- 9-ம், பொறியியல் படிப்புகள் 53-ம் மற்றும் கலை, அறிவியல், தமிழ், இசை உள்ளிட்ட துறைகளைச் சார்ந்த பல்வேறு இளங்கலை, முதுகலை, டிப்ளமா, முதுநிலை டிப்ளமா படிப்புகள் நடத்தப்படுகின்றன.

3லட்சம் பேர் பயிலுகின்றனர்: தொலைதூரக்கல்வி மையத்தில் சுமார் 3 லட்சத்து 1940 பேர் பயின்று வருகின்றனர். கடந்த ஆண்டு மட்டும் மொத்தம் 1 லட்சத்து 35 ஆயிரத்து 95 பேர் அனுமதி சேர்க்கை செய்துள்ளனர். இந்த ஆண்டு சுமார் 1.50 லட்சம் அனுமதி சேர்க்கை செய்வார்கள் என எதிபார்க்கப்படுகிறது.

கல்வி உதவித்தொகை: தொலைதூரக்கல்வி மையத்தில் தொழில்படிப்பு பயிலும் எஸ்சி., எஸ்டி மாணவர்களுக்கும், பார்வையற்றோர் மற்றும் மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கும் தமிழகஅரசால் வழங்கப்படும் கல்வி உதவித்தொகை பெற்றுத்தரப்படுகிறது. இந்த கல்வி ஆண்டில் மாணவர்கள் சேருவதற்கான விண்ணப்பிக்கும் தேசி டிச.1-ம் தேதி கடைசி நாளாகும் என அண்ணாமலைப் பல்கலைக்கழக தொலைதூரக்கல்வி இயக்கக இயக்குநர் முனைவர் ஆர்.எம்.சந்திரசேகரன் தெரிவித்தார்.

Popular posts from this blog

அகஇ - 100% வாசித்தல் திறன் பெற்ற பள்ளிகளுக்கு ஊக்கத்தொகை - செயல்முறைகள்

அகஇ - 100% வாசித்தல் திறன் பெற்ற பள்ளிகளுக்கு ஊக்கத்தொகை - இயக்குனர் செயல்முறைகள்

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய யோகா

               சிபிஎஸ்இ பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் 40 முதல் 45 நிமிடங்கள் கட்டாய யோகா பயிற்சி அளிக்