Skip to main content

TRB: காற்றில் பறந்த மனுக்கள்: கள்ளர் பள்ளி ஆசிரியர்கள் விரக்தி-Dinamalar News

ஆசிரியர் தேர்வு வாரிய அறிவிப்பின்படிகள்ளர் பள்ளிகளில் பணிபுரிய விருப்ப மனுக்கள் அளித்த ஆசிரியர்களுக்கு, பணியிடங்கள் மறைக்கப்பட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது.
ஆசிரியர் தேர்வு வாரியம் (டி.ஆர்.பி.,) 6.8.2014ல் வெளியிட்ட அறிவிப்பில், 'மதுரை, திண்டுக்கல், தேனி மாவட்டங்களில் உள்ள கள்ளர் சீரமைப்புத் துறை
துவக்க பள்ளிகளில் 64 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன.இவற்றை நிரப்ப 2013ம் ஆண்டு ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சிபெற்ற பிரமலைக் கள்ளர் வகுப்பை சேர்ந்த தேர்ச்சியாளர்கள் மட்டும் விருப்ப மனுக்கள் அளிக்கலாம்," என தெரிவிக்கப்பட்டது.இதன்படி மூன்று மாவட்டங்களிலும் 2013ல் தேர்ச்சி பெற்றவர்களுக்கு ஆக.,11 மற்றும் 12ம் தேதிகளில் சான்றிதழ் சரிபார்க்கப்பட்டு விருப்ப மனுக்களை டி.ஆர்.பி., பெற்றது.

சமீபத்தில்நடந்த பொதுமாறுதல் கவுன்சிலிங்கில், விருப்ப மனுக்கள் அளித்தவர்களுக்கு ஒதுக்கீடு செய்யாமல், தொலைவில் உள்ள மாவட்டங்களில்அரசு தொடக்க பள்ளிகளில் பணியிடம் ஒதுக்கப்பட்டுள்ளன. இதற்கான உத்தரவை பெற்ற 40க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் இதுவரை அந்த பணியிடங்களில் சேரவில்லை.பாதிக்கப்பட்ட ஆசிரியர்கள் கூறுகையில், "டி.ஆர்.பி., அறிவிப்பின்படி விருப்ப மனுக்கள் அளித்தோம். கவுன்சிலிங்கில் தொலைதுார மாவட்டங்களில் பணி ஒதுக்கி அலைக்கழிக்கின்றனர்.

இது 'டிரான்ஸ்பர்' பெயரில் வேறு 'எதையோ' எதிர்பார்ப்பதாக தெரிகிறது.கல்வி அதிகாரிகள் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்றனர்.

Popular posts from this blog

மாணவர்களுக்கு 'லேப்டாப்' டிசம்பருக்குள் கிடைக்கும்

இலவச, 'லேப்டாப்' வழங்கும் திட்டத்தை, டிசம்பர் மாதத்திற்குள் முடிக்கும்படி, அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டம், 2011ல் துவக்கப்பட்டது. முதல், இரண்டு ஆண்டுகள், அரசு மற்றும் அரசு உதவி

கணக்கெடுப்பு ! : பள்ளி செல்லா மாணவர்கள்...: ஏப்., 7ம் தேதி முதல் துவக்கம்

கடலூர் மாவட்டத்தில், அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், பள்ளி செல்லா மற்றும் பள்ளியை விட்டு இடைநின்ற மாணவ, மாணவிகள் குறித்த விவரங்கள் கணக்கெடுக்கும் பணி வரும் 7ம் தேதி, துவங்குகிறது. தமிழகத்தில், ஆண்டுதோறும் அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், 6 வயது முதல் 14 வயதுக்குட்பட்ட பள்ளி செல்லா மற்றும் பள்ளியை விட்டு

10ம் வகுப்பு கணிதத்தேர்வில் போனஸ் மதிப்பெண்

பத்தாம் வகுப்பு தேர்விற்கான விடைத்தாள்கள் திருத்தும் பணி நடக்கிறது. பத்தாம் வகுப்பு கணிதத்தேர்வில், 'ஏ' பிரிவு ஒரு மதிப்பெண் வினாவிற்கான 15 வது கேள்வியில் ஆங்கில வழி வினா தவறாக கேட்கப்பட்டுள்ளதா