Skip to main content

முடங்கிய முடிவுகள் ஒவ்வொன்றாக வெளியீடு : டி.என்.பி.எஸ்.சி., திடீர் சுறுசுறுப்பு


            கடந்த, 2011, 12, 13ம் ஆண்டுகளில் போட்டித் தேர்வு நடந்து, இறுதி முடிவு வெளிவராமல் முடங்கிக் கிடந்த பல தேர்வுகளின் முடிவை, ஒன்றன் பின் ஒன்றாக, தற்போது, டி.என்.பி.எஸ்.சி., (அரசுப் பணியாளர் தேர்வாணையம்) வெளியிட்டு வருகிறது. டி.என்.பி.எஸ்.சி., கடந்த காலங்களில், நடத்திய பல்வேறு தேர்வுகளின் முடிவை வெளியிடாமல், அப்படியே கிடப்பில் போட்டு
இருந்தது. வழக்குகள் உள்ளிட்ட, பல பிரச்னைகள் காரணமாக, இறுதி முடிவுகளை வெளியிடுவதில், ஆண்டுக்கணக்கில் இழுபறி ஏற்பட்டு வந்ததாகக் கூறப்படுகிறது.
          இந்நிலையில், டி.என்.பி.எஸ்.சி.,யின் தற்போதைய தலைவர், பாலசுப்ரமணியன், முடங்கிக் கிடந்த பல தேர்வுகளின் இறுதி முடிவை, ஒன்றன் பின் ஒன்றாக வெளியிட்டு வருகிறார்.
             சமீபத்தில், குரூப் 2 முதல்நிலை தேர்வு முடிவை, டி.என்.பி.எஸ்.சி., வெளியிட்டதுடன், முதன்மை தேர்வு தேதி குறித்த அறிவிப்பையும், சமீபத்தில் வெளியிட்டது. இதைத் தொடர்ந்து, 2011 முதல், 2013 வரை நடந்த மூன்று தேர்வுகளின் இறுதி முடிவை, நேற்று வெளியிட்டது.
கடந்த, 2011, பிப்ரவரி 21, மார்ச் 6 ஆகிய தேதிகளில், 86 வனச்சரகர் பணியிடங்களை நிரப்ப, எழுத்து தேர்வை நடத்தியது. பின், 2012, ஆகஸ்ட், 22, 23ம் தேதிகளில், நேர்முகத் தேர்வு நடந்தது. இரண்டு ஆண்டுகளுக்குப் பின், நேற்று, இறுதி பட்டியலை, www.tnpsc.gov.in என்ற இணையதளத்தில் வெளியிட்டது. கடந்த ஆண்டு, மீன்வளத் துறையில், சார்நிலை ஆய்வாளர் பதவி யில், 24 இடங்களை நிரப்ப எழுத்து தேர்வு நடந்தது. கடந்த, 4ம் தேதி நேர்முகத் தேர்வு முடிந்த நிலையில், இதன் முடிவையும், டி.என்.பி.எஸ்.சி., நேற்று வெளியிட்டது.
இதேபோல், சென்னையில் உள்ள, 'டேட்டா சென்டரில்' (அரசு தகவல் தொகுப்பு மையம்) 25, கம்ப்யூட்டர் ஆபரேட்டர் பணியிடங்களை நிரப்ப, 2013ல் எழுத்து தேர்வும், கடந்த ஆகஸ்டில், நேர்முகத் தேர்வும் நடந்தது. இதன் இறுதி முடிவும், நேற்று வெளியானது.
இதுகுறித்து, தேர்வாணைய உறுப்பினர் ஒருவர் கூறியதாவது: பல ஆண்டுகளாக, பல மாதங்களாக முடங்கியிருந்த பல தேர்வுப் பணிகளை, விரைந்து வெளியிட வேண்டும் என, தலைவர் உத்தரவிட்டுள்ளார். அதன் காரணமாகவே, பழைய தேர்வுகளின் முடிவுகள் வந்து கொண்டிருக்கின்றன. தேர்வுப் பணிகள், நீண்ட நாட்கள் முடங்காதபடி, உடனுக்குடன், முடிவை வெளியிட, தற்போது, பணியாளர்கள் முடுக்கி விடப்பட்டுள்ளனர். இவ்வாறு, அந்த உறுப்பினர் தெரிவித்தார். முடங்கியிருந்த பல தேர்வு களின் முடிவை, அடுத்தடுத்து தேர்வாணையம் வெளியிட்டு வருவது, தேர்வர் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Popular posts from this blog

ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம்

கருவூலம் மற்றும் கணக்குத்துறை முதன்மைச் செயலர் தகவல் வரும் நவம்பர் முதல் அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம் பெறுவதற்கான ஆணை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என கருவூலத்துறை முதன்மைச் செயலரும், ஆணையருமான தென்காசி சு. ஜவஹர் தெரிவித்தார்.தமிழ்நாடு கருவூலக் கணக்குத் துறை சார்பில், திண்டுக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனித வள மேலாண்மைத் திட்டத்தின் மூலம் பணம் பெற்று வழங்கும் அலுவலர்களுக்கான பயிற்சிக் கூட்டம் திங்கள்கிழமை தொடங்கியது. 6 நாள்கள் நடைபெறும் இப்பயிற்சி முகாமிற்கு திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் டி.ஜி. வினய் தலைமை வகித்தார். முகாமை கருவூல கணக்குத்துறை முதன்மைச் செயலர் மற்றும் ஆணையர் ஜவஹர்தொடக்கி வைத்துப் பேசியது: கடந்த 1964-ஆம் ஆண்டு முதல் தனித்துறையாகச் செயல்பட்டு வரும் கருவூலத்துறைக்கு தமிழகம் முழுவதும் 294 அலுவலகங்களும், தில்லியில் ஒரு அலுவலகமும் உள்ளன. அரசு ஊழியர்களுக்கான ஊதியம், நலத்திட்ட உதவித் தொகை, நிவாரணத் தொகை உள்ளிட்ட பல்வேறு பணிகளை கருவூலத் துறை மேற்கொண்டு வருகிறது. தமிழகம் முழுவதும் 9 லட்சம் அரசு ஊழியர்களின் பணிப் பதிவேடு...

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய யோகா

               சிபிஎஸ்இ பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் 40 முதல் 45 நிமிடங்கள் கட்டாய யோகா பயிற்சி அளிக்

அரசு துறைகள் மீது புகாரா? இனி ஆதார் எண் தேவை

 'அரசுத் துறைகள் குறித்து, ஆன்லைனில் புகார்களை பதிவு செய்வோர், இனி, ஆதார் எண்ணைக் குறிப்பிட வேண்டும்' என, மத்திய அரசு அறிவித்துள்ளது. நாடு முழுவதும் உள்ள அரசுத் துறைகள் மீதான புகார்கள் மற்றும் ஆலோசனைகளை,  www.pgportal.nic.in என்ற இணையதளத்தில் பதிவு