Skip to main content

கிராமப்புற அஞ்சல் நிலையங்களில் பிரவுசிங் சென்டர் விரைவில்

கிராமப்புற அஞ்சல் நிலையங்களில் பிரவுசிங் சென்டர்: விரைவில் வருகிறது புதிய திட்டம்:
விரைவில் வருகிறது புதிய திட்டம்தமிழகத்தில் கிராமப்புறங்களில் உள்ள அஞ்சல் நிலையங்களில் விரைவில் பிரவுசிங் சென்டர்களை தொடங்கி இணைய சேவையை வழங்கும் புதிய திட்டம்
விரைவில்செயல்படவுள்ளது.
அஞ்சல்துறை மாற்றங்கள்
சுதந்திரம் பெற்றபோது இந்தியாவில் மொத்தம் 23,344 அஞ்சல் நிலையங்கள் இருந்தன. தற்போது அந்த எண்ணிக்கை 7 மடங்கு அதிகமாகி 1.5 லட்சத்தை தாண்டியுள்ளது. கடிதம், தந்தி, மணி ஆர்டர் போன்ற சேவை களை வழங்கி வந்த அஞ்சல் நிலையங்கள் காலப்போக்கில் எண்ணற்ற மாற்றங்களை சந்தித்தன. தற்போது அஞ்சலக சேமிப்பில் ஆரம்பித்து பணப்பரிமாற்றம், அயல்நாடுகளுக்கு பொருட்களை அனுப்புவது, இ-போஸ்ட், மீடியா போஸ்ட் என 25-க்கும் அதிகமான சேவைகளை ஒரே இடத்தில் வழங்கி வருகிறது.
நவீனமயமாக்கம்
வங்கிகளைப் போல அஞ்சல் நிலையங்களையும் நவீனமயமாக்க பல கோடி ரூபாய் செலவில் ‘அஞ்சலக தகவல் தொழில்நுட்ப நவீனமயமாக்கல் 2012’ என்னும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்நிலையில் பொதுமக்களை கவரும் விதமாக முக்கிய இடங்களில் உள்ள அஞ்சல் நிலையங்களில் விரைவில் பிரவுசிங் சென்டர்கள் திறக்கப்படவுள் ளன.
இது தொடர்பாக தமிழ்நாடு வட்ட அஞ்சல் அதிகாரிகள் கூறியதாவது:
அஞ்சல் நிலையத்தில் இணையம்
இந்தியாவில் பாரம்பரியமிக்க பல துறைகள் நலிவடைந்துள்ள போதிலும், அஞ்சல் துறை காலத்துக்கு ஏற்றவாறு தன்னை மாற்றிக்கொண்டதால் தொடர்ந்து பொதுமக்களின் வரவேற்பை பெற்று வருகிறது. ஒரே இடத்தில் பல்வேறு சேவைகளைத் தரும் ஒரே அரசு நிறுவனமாக அஞ்சல் துறை உள்ளது. இந்த நிலையில் முக்கிய மற்றும் கிராமப்புற அஞ்சல் நிலையங்களில் பிரவுசிங் சென்டர்களை உருவாக்கும் திட்டம் குறித்து ஆய்வுகளை நடத்தி வருகிறோம்.
கிராமங்களுக்கு முன்னுரிமை நகரங்களில் பெரும்பாலான வர்கள் இணையத்தை பயன்படுத்துகின்றனர். ஆனால், கிராமங்களில் இணையத்தை எல்லோரும் பயன்படுத்தும் சூழல் இன்னும் உருவாகவில்லை.அப்படியே பயன்படுத்தினாலும் வேகம் குறைவாகவே உள்ளது. இந்நிலையில் கிராமப்புற மாணவர்களும் பொதுமக்களும் பயன்பெறும் வகையில் அஞ்சல் நிலையங்களில் விரைவில் இணைய 
சேவைகள் வழங்கப் படும்.
கட்டணம் மணிக்கு ரூ.30
இந்த சேவையை பயன்படுத்த அஞ்சல் நிலையங்களுக்கு வருபவர்களுக்கு அங்கு மடிக்கணினிகள் வழங்கப்படும். அதன்மூலம் இணையதளத்தை பயன்படுத்திக்கொள்ளலாம். இதற்கு ஒரு மணி நேரத்துக்கு ரூ.30 முதல் 40 வரை கட்டணமாக வசூலிக்கப்படும்.மேலும் அஞ்சலகங்களில் வழங்கப்படுகிற இணைய சேவை மற்ற இடங்களைவிட வேகமாக இருக்கும். வளர்ந்து வரும் நகரங்களில், கல்வி நிலையங்கள் அமைந்துள்ள இடத்துக்கு அருகேயுள்ள அஞ்சல் நிலையங்களிலும் இந்த திட்டம் முதலில் அமைக்கப்படும் என்றார்.இதுபற்றி சென்னை மண்டல அஞ்சல் துறை அதிகாரி மெர்வின் அலெக்சாண்டரிடம் கேட்டபோது, “கேரளம் போன்ற ஒரு சில மாநிலங்களில் அஞ்சல் நிலையங்களில் பிரவுசிங் சென்டர்கள் இயங்குகின்றன. தமிழகத்தில் வேலூர் சிஎம்சி வளாகத்தில் உள்ள அஞ்சல் நிலையத்தில் இந்த வசதியுள்ளது. இதை தமிழகம் முழுவதும் விரிவுபடுத்த ஆலோசனைகள் நடத்தப்பட்டு வருகிறது” என்றார்.

Popular posts from this blog

அகஇ - 100% வாசித்தல் திறன் பெற்ற பள்ளிகளுக்கு ஊக்கத்தொகை - செயல்முறைகள்

அகஇ - 100% வாசித்தல் திறன் பெற்ற பள்ளிகளுக்கு ஊக்கத்தொகை - இயக்குனர் செயல்முறைகள்

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய யோகா

               சிபிஎஸ்இ பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் 40 முதல் 45 நிமிடங்கள் கட்டாய யோகா பயிற்சி அளிக்