Skip to main content

மாற்றுத்திறனாளிகளுக்கு BSNL நிறுவனத்தில் பணி

இந்திய அரசின் தொலைத்தொடர்பு நிறுவனமான பிஎஸ்என்எல் நிறுவனத்தின் தமிழ்நாடு வட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான ஜூனியர் டெலிகாம் ஆபீசர் பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ள மாற்றுத்திறனாளிகளிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

அறிவிப்பு எண்: RET/28-79/2014/Vol.I


பணி: Junior Telecom Officers

காலியிடங்கள்: 04 (PWD (HI))

சம்பளம்: மாதம் ரூ.16,400 - 40,500 மற்றும் இதர சலுகைகள் வழங்கப்படும்.

கல்வித்தகுதி: 31.12.2014 தேதியின்படி Telecommunication, Electronics, Radio, Computer, Electrical, Information Technology, Instrumentation, INdustrial Electronics போன்ற ஏதாவதொரு துறையில் பி.இ அல்லது பி.டெக் அல்லது அதற்கு இணையான பொறியியல் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

வயதுவரம்பு: 05.09.2014 தேதியின்படி 30க்குள் இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: போட்டித் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். போட்டித் தேர்வு 3 மணி நேரம் நடைபெறும்.

தேர்வு நடைபெறும் தேதி: 23.11.2014

விண்ணப்பிக்கும் முறை: www.tamilnadu.bsnl.co.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து தெளிவாக பூர்த்தி செய்து விண்ணப்பிக்கவும். விண்ணப்பத்துடன் சமீபத்திய பாஸ்போர்ட் அளவு புகைப்படம் 4 இணைக்க வேண்டும். இதில் இரண்டு புகைப்படத்தை விண்ணப்பத்தில் அதற்கான இடங்களில் ஒட்டவும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 05.09.2014

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: The Assistant General Manager (Rect & Estt), O/o The CGM Telecom, BSNL TamilNadu Telecom Circle, Fifth Floor, New Administrative Building, No.16, Greams Road, Chennai - 600006.

மேலும் பயிற்சி நடைபெறும் தேதி, தேர்வு பாடத்திட்டங்கள் போன்ற முழுமையான விவரங்கள் அறிய www,tamilnadubsnl.com என்ற இணையதளத்தை பார்க்கவும்.

Popular posts from this blog

ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம்

கருவூலம் மற்றும் கணக்குத்துறை முதன்மைச் செயலர் தகவல் வரும் நவம்பர் முதல் அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம் பெறுவதற்கான ஆணை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என கருவூலத்துறை முதன்மைச் செயலரும், ஆணையருமான தென்காசி சு. ஜவஹர் தெரிவித்தார்.தமிழ்நாடு கருவூலக் கணக்குத் துறை சார்பில், திண்டுக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனித வள மேலாண்மைத் திட்டத்தின் மூலம் பணம் பெற்று வழங்கும் அலுவலர்களுக்கான பயிற்சிக் கூட்டம் திங்கள்கிழமை தொடங்கியது. 6 நாள்கள் நடைபெறும் இப்பயிற்சி முகாமிற்கு திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் டி.ஜி. வினய் தலைமை வகித்தார். முகாமை கருவூல கணக்குத்துறை முதன்மைச் செயலர் மற்றும் ஆணையர் ஜவஹர்தொடக்கி வைத்துப் பேசியது: கடந்த 1964-ஆம் ஆண்டு முதல் தனித்துறையாகச் செயல்பட்டு வரும் கருவூலத்துறைக்கு தமிழகம் முழுவதும் 294 அலுவலகங்களும், தில்லியில் ஒரு அலுவலகமும் உள்ளன. அரசு ஊழியர்களுக்கான ஊதியம், நலத்திட்ட உதவித் தொகை, நிவாரணத் தொகை உள்ளிட்ட பல்வேறு பணிகளை கருவூலத் துறை மேற்கொண்டு வருகிறது. தமிழகம் முழுவதும் 9 லட்சம் அரசு ஊழியர்களின் பணிப் பதிவேடு...

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய யோகா

               சிபிஎஸ்இ பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் 40 முதல் 45 நிமிடங்கள் கட்டாய யோகா பயிற்சி அளிக்

அரசு துறைகள் மீது புகாரா? இனி ஆதார் எண் தேவை

 'அரசுத் துறைகள் குறித்து, ஆன்லைனில் புகார்களை பதிவு செய்வோர், இனி, ஆதார் எண்ணைக் குறிப்பிட வேண்டும்' என, மத்திய அரசு அறிவித்துள்ளது. நாடு முழுவதும் உள்ள அரசுத் துறைகள் மீதான புகார்கள் மற்றும் ஆலோசனைகளை,  www.pgportal.nic.in என்ற இணையதளத்தில் பதிவு