Skip to main content

சிவில் சர்வீஸ் தேர்வில் ஆங்கில மதிப்பெண் சேர்க்கப்படாது.



சிவில் சர்வீஸ் தேர்வில் கடந்த 2011ல் சிசாட் எனப்படும் திறனறி தேர்வுபாடத்திட்டம் சேர்க்கப்பட்டது. இதில் ஆங்கில மொழி புரியும் திறனை சோதிப்பதற்கான கேள்விகள் கடினமாக இருப்பதால், மாநில மொழிகளில் படித்த மாணவர்கள் தேர்ச்சி பெறுவது கடினமாக உள்ளதாக குற்றம் சாட்டப்பட்டது. இப்பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும் என சிவில் சர்வீஸ்
தேர்வு எழுதும் மாணவர்கள் டெல்லியில் போராட்டம் நடத்தினர்.
இப்பிரச்னைக்கு தீர்வு காண, சிவில் சர்வீஸ் முதல்நிலை தேர்வில் 2ம் தாளில் உள்ள ஆங்கில மொழி திறனறி கேள்விகளுக்கான மதிப்பெண்கள்,தேர்வு எழுதுவோரின் மொத்த மதிப்பெண்ணில் (கிரேடு அல்லது மெரிட்) சேர்க்கப்படாது என மக்களவையில் அமைச்சர் ஜித்தேந்தர் சிங் அறிவித்தார்.

இந்நிலையில் மத்திய அரசு நேற்று வெளியிட்ட அறிவிப்பு: சிவில் சர்வீஸ் முதல் நிலை தேர்வின் முதல் தாள் மற்றும் 2ம் தாளில் பெறப்படும் மதிப்பெண்களில், ஆங்கில மொழிக்கான மதிப்பெண்களை கழித்தபின், மொத்த மதிப்பெண் (கிரேடு) கணக்கிடப்படும். ஆங்கில மொழிக்கான கேள்விகள் 10ம் வகுப்பு அளவிலேயே இருக்கும். அதற்கான மதிப்பெண்கள் கணக்கிடப்படாது என்பதால், அதற்கு தேர்வு எழுதுபவர்கள் பதில் அளிக்கத் தேவையில்லை. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Popular posts from this blog

மாணவர்களுக்கு 'லேப்டாப்' டிசம்பருக்குள் கிடைக்கும்

இலவச, 'லேப்டாப்' வழங்கும் திட்டத்தை, டிசம்பர் மாதத்திற்குள் முடிக்கும்படி, அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டம், 2011ல் துவக்கப்பட்டது. முதல், இரண்டு ஆண்டுகள், அரசு மற்றும் அரசு உதவி

கணக்கெடுப்பு ! : பள்ளி செல்லா மாணவர்கள்...: ஏப்., 7ம் தேதி முதல் துவக்கம்

கடலூர் மாவட்டத்தில், அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், பள்ளி செல்லா மற்றும் பள்ளியை விட்டு இடைநின்ற மாணவ, மாணவிகள் குறித்த விவரங்கள் கணக்கெடுக்கும் பணி வரும் 7ம் தேதி, துவங்குகிறது. தமிழகத்தில், ஆண்டுதோறும் அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், 6 வயது முதல் 14 வயதுக்குட்பட்ட பள்ளி செல்லா மற்றும் பள்ளியை விட்டு

10ம் வகுப்பு கணிதத்தேர்வில் போனஸ் மதிப்பெண்

பத்தாம் வகுப்பு தேர்விற்கான விடைத்தாள்கள் திருத்தும் பணி நடக்கிறது. பத்தாம் வகுப்பு கணிதத்தேர்வில், 'ஏ' பிரிவு ஒரு மதிப்பெண் வினாவிற்கான 15 வது கேள்வியில் ஆங்கில வழி வினா தவறாக கேட்கப்பட்டுள்ளதா