Skip to main content

வேர்ட் டிப்ஸ்...

வித்தியாசமான டெக்ஸ்ட் தேர்வு: வேர்ட் டாகுமெண்ட்டில் வேலை செய்கையில், டெக்ஸ்ட் தேர்வு செய்வது மிக எளிதான ஒன்றுதான். வரிசையாக வரிகள் என்றாலோ, அல்லது விட்டு விட்டு வரிகள் என்றாலோ, அவற்றைத் தேர்வு செய்துவிடலாம். ஆனால், நெட்டுவாக்கில் வரிகளில் சில எழுத்துக்களை மட்டும் தேர்வு செய்திட வேண்டும் என்றால் என்ன செய்வது?
எடுத்துக் காட்டாக, வரிசையான வரிகளில், பத்தாவது எழுத்து முதல்,
பதினைந்தாவது எழுத்துவரை, அனைத்து வரிகளிலும் மற்றவற்றை விட்டுவிட்டு, தேர்வு செய்திட வேண்டும் எனில் என்ன செய்வது? வேர்ட் இதனை மிக எளிதாக மேற்கொள்ள கீ போர்ட் மற்றும் மவுஸ் பயன்படுத்தும் வழிகளை வேர்ட் நமக்குத் தருகிறது. இதற்குக் கீழ்க்காணும் வழிகளைப் பின்பற்றவும்.
1. எந்த டெக்ஸ்ட் பகுதியைக் காப்பி செய்திட வேண்டுமோ, அதன் மேல் இடது மூலைக்கு, கர்சரைக் கொண்டு செல்லவும். 
2. அடுத்து, கண்ட்ரோல் + ஷிப்ட்+ எப்8 (Ctrl+Shift+F8) அழுத்தவும். 
3. அடுத்து, கர்சர் கண்ட்ரோல் கீகளை, நீங்கள் காப்பி செய்திட விரும்பும் டெக்ஸ்ட் முழுமையும் தேர்ந்தெடுக்கவும்.
நீங்கள் மவுஸ் கொண்டு இதனைத் தேர்ந்தெடுக்க விரும்பினால், ஆல்ட் கீயை அழுத்திக் கொண்டு, டெக்ஸ்ட் பகுதியைத் தேர்ந்தெடுக்கவும். விரும்பிய டெக்ஸ்ட் தேர்ந்தெடுக்கப் பட்டவுடன், நீங்கள் விரும்பிய செயல்பாட்டினை மேற்கொள்ளலாம். டெல் (Del) கீ அழுத்தினால், அந்த டெக்ஸ்ட் பகுதி முழுவதும் அழிக்கப்படும்.

ஹெடர் அல்லது புட்டர் நீக்க: வேர்ட் டாகுமெண்ட்டில் ஹெடர் மற்றும் புட்டர்களை அமைத்து, அதில், பக்கங்களில் தொடர்ந்து மேலாகவும், கீழாகவும் வரவேண்டிய டெக்ஸ்ட் அமைப்போம். இவை டாகுமெண்ட்டின் ஒவ்வொரு பக்கத்திலும் கிடைக்கும். ஆனால், அவ்வாறு அமைத்த பின்னர், சிலர் இவற்றை நீக்க விரும்புவார்கள். சிலர் தங்களுக்குக் கிடைத்திருக்கும் டாகுமெண்ட்டில் உள்ள ஹெடர் மற்றும் புட்டர்களை நீக்க விரும்புவார்கள். இவர்கள் செயல்பட வேண்டிய வழிகள் கீழே தரப்படுகின்றன.
1. முதலில், எந்த ஹெடரை நீக்க விரும்புகிறீர்களோ, அதில் கர்சரைக் கொண்டு சென்று வைக்கவும். 
2. நீங்கள் Normal அல்லது Outline பயன்படுத்தினால், View மெனுவிலிருந்து Header and Footer என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். Print Layout வியூவாக இருந்தால், ஹெடர் அல்லது புட்டர் இடத்தில் டபுள் கிளிக் செய்தால் போதுமானது. 
3. நீங்கள் புட்டரை அழிக்க விரும்பினால், Header and Footer டயலாக் பாக்ஸில் Switch ஐகானில் கிளிக் செய்திடவும். 
4. அடுத்து ஹெடர் அல்லது புட்டரின் டெக்ஸ்ட்டைத் தேர்ந்தெடுக்கவும். 
5. அடுத்து Del அல்லது கண்ட்ரோல் + எக்ஸ் கீயை அழுத்தவும். 
6. அடுத்து ஓகே என்பதில் கிளிக் செய்திடவும்.

ஹைலைட்டிங் வண்ணம் மாற்ற: வேர்டில் டாகுமெண்ட் உருவாக்குகையில், அதனைப் படிப்பவர்களின் கவனத்தைத் திருப்ப, டெக்ஸ்ட்டின் குறிப்பிட்ட பகுதிகளை ஹைலைட்டிங் செய்கிறோம். எப்படி ஹைலைட்டர் பேனாவினை நாம் செயல்படுத்துகிறோமோ, அதே போல ஹைலைட்டிங் டூல் செயல்படுகிறது. மாறா நிலையில், ஹைலைட்டிங் டூல் மஞ்சள் வண்ணத்தினைத் தருகிறது. ஆனால், இந்த வண்ணத்தினை நீங்கள் விரும்பும் வண்ணத்திற்கு மாற்றலாம். கலர் பிரிண்டர் வைத்து, டாக்குமெண்ட்டினை அச்சிடுபவர்களுக்கு இது அவசியம் தேவை. வண்ணத்தினை கீழ்க் கொடுத்துள்ள வழிகளின்படி மாற்றலாம். 
முதலில் ரிப்பனில் ஹோம் டேப்பினைக் கிளிக் செய்திடவும். இங்கு Font குரூப்பில் கிடைக்கும் ஹைலைட் டூல் (Highlight tool) கொண்டிருக்கும் கீழ் நோக்கிய அம்புக் குறியின் மீது கிளிக் செய்திடவும். உடன், பதினைந்து வண்ணங்கள் கொண்ட கட்டம் உங்களுக்குக் கிடைக்கும். இதில் உங்களுக்குப் பிடித்தமான வண்ணத்தினைத் தேர்ந்தெடுத்து அமைக்கலாம். புதியதாகத் தேர்ந்தெடுக்கப்படுவதனால், ஏற்கனவே அமைக்கப்பட்ட டெக்ஸ்ட் ஹைலைட்டிங் வண்ணம் மாறாது. புதியதாக ஏற்படுத்தப்படும் ஹைலைட்டிங் வண்ணம் மட்டும், புதியதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட வண்ணத்தில் அமையும்.
சரி, உங்களுக்கு ஒரு டாகுமெண்ட் கிடைக்கிறது. அதில் பல இடங்களில், டெக்ஸ்ட் பலவகைகளில் ஹைலைட் செய்யப்பட்டுள்ளது. இது உங்களுக்குப் பிடிக்கவில்லை. இதனை நீங்கள் விருப்பப்படும் ஒரு வண்ணத்திற்கு மாற்றத் திட்டமிடுகிறீர்கள். இதனை எப்படி மேற்கொள்வது எனப் பார்க்கலாம். இதற்கு வேர்ட் புரோகிராம் தரும் find and replace என்ற வசதியினைப் பயன்படுத்தலாம். 
1. முதலில் ஹைலைட் டூல் கிளிக் செய்து, நீங்கள் அமைக்க விரும்பும் வண்ணத்தைத் தேர்ந்தெடுங்கள். 
2. அடுத்து கண்ட்ரோல் + எச் (Ctrl+ H) கீகளை அழுத்தி Find and Replace டயலாக் பாக்ஸில் Replace டேப் தேர்ந்தெடுக்கப்பட்ட நிலையில் பெறவும். 
3. Find What என்ற பாக்ஸில், கர்சர் நிற்கட்டும். இனி, Format | Highlight என அழுத்தவும். Format பட்டனை, நீங்கள் More பட்டன் அழுத்திப் பெற வேண்டும்.
4. அடுத்து Replace With பாக்ஸில், மீண்டும் Format | Highlight அழுத்தவும். 
5. அடுத்து Replace All என்பதனை அழுத்தவும். டாகுமெண்ட்டில் உள்ள, ஏற்கனவே ஹைலைட் செய்யப்பட்ட வண்ணம் அனைத்தும், ஸ்டெப் 1ல் நீங்கள் தேர்ந்தெடுத்த வண்ணத்திற்கு மாறி இருக்கும்.

வேர்டில் விண்டோ பிரித்தலும் சேர்த்தலும்: வேர்ட் புரோகிராம், விண்டோ ஒன்றைப் பிரித்து, ஒரே டாகுமெண்ட்டின் இரண்டு பகுதிகளில் செயல்பட வழி தருகிறது. அதே போல, இரண்டு பகுதிகளில் காணப்படும் வேர்ட் டாகுமெண்ட்டினை, இரு வேறு வியூக்களில் காணலாம். விண்டோவினைப் பிரிக்க, விண்டோ மெனுவில் Split என்பதைத் தேர்ந்தெடுக்கவும். 
வேர்ட் 2007 பயன்படுத்துபவர்கள், ரிப்பனில் வியூ தேர்ந்தெடுக்கவும். இதில் ஸ்ப்ளிட் என்பதில் கிளிக் செய்தால், விண்டோ இரண்டாகப் பிரிக்கப்படும். அப்போது, வேர்ட் திரையில், படுக்கைக் கோடு ஒன்றை அமைக்கும். மவுஸ் கொண்டு இதனை மேல், கீழாக நகர்த்தலாம். மவுஸ் பட்டனை எங்கு விட்டுவிடுகிறோமோ, அதே இடத்தில், விண்டோ பிரிக்கும் கோடும் அமர்ந்து கொள்ளும். விண்டோவினைப் பிரித்ததை ரத்து செய்திட வேண்டும் என்றால், எஸ்கேப் கீயை அழுத்தலாம். ஆனால், இதனை மவுஸ் பட்டனை, பிரிக்கும் கோட்டில் வைத்துச் செயல்படுத்தும் முன் மேற்கொள்ள வேண்டும். இல்லையேல், கீழே குறிப்பிட்டுள்ளபடி செயல்பட வேண்டும். இதற்கு இரண்டு வழிகள் உள்ளன. ஏதேனும் ஒன்றைப் பின்பற்றலாம்.
விண்டோ மெனுவிலிருந்து Remove Split என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். அடுத்து, பிரிக்கும் கோட்டில், மவுஸ் கர்சரை வைத்து, டபுள் கிளிக் செய்திடவும்.
பிரித்த விண்டோவினை ஒன்றாக மாற்றுகையில், டெக்ஸ்ட்டில், கர்சர் எந்த விண்டோவில் இருந்ததோ, அந்த விண்டோவின் பண்புகள், டாகுமெண்ட்டுக்குத் தரப்படும். எடுத்துக் காட்டாக, கோட்டுக்கு மேலாக இருந்த பகுதி நார்மல் (Normal) வியூவிலும், கீழாக இருந்த பகுதி பிரிண்ட் லே அவுட் (Print Layout) வியூவிலும் இருந்து, கர்சர் கோட்டுக்குக் கீழாக இருந்த பகுதியில் வைக்கப்பட்டு, பிரிக்கப்பட்ட விண்டோ ஒன்றாக மாற்றி அமைக்கப்பட்டால், கிடைக்கும் விண்டோ, பிரிண்ட் லே அவுட் வியூவில் இருக்கும். கோட்டுக்கு மேலாக இருந்தால், நார்மல் வியூவில் இருக்கும்.

குறிப்பிட்ட பக்கம் செல்ல: வேர்ட் டாகுமெண்ட் ஒன்றில், குறிப்பிட்ட பக்கம் ஒன்றுக்குச் செல்ல விரும்புகிறீர்கள். அதன் பக்க எண் உங்களுக்குத் தெரியும். அந்தப் பக்கத்திற்குச் செல்ல, முதலில் எப்5 கீயினை அழுத்துங்கள். இப்போது Find and Replace டயலாக் பாக்ஸ் காட்டப்படும். இதில் டேப் ஏற்கனவே தேர்ந்தெடுக்கப்பட்டு இருக்கும். இங்கு Go To What என்பதில் பல ஆப்ஷன்கள் கொடுக்கப்பட்டிருக்கும். அதில் முதலாவதாக Page என்ற ஆப்ஷன் தேர்ந்தெடுக்கப்பட்டு இருக்கும். அருகே, Enter Page Number என்று காட்டப்பட்டு நீளமான கட்டம் ஒன்று காட்டப்படும். இதில் பக்க எண்ணை அமைத்து Next என்பதில் கிளிக் செய்தால், உடன் குறிப்பிட்ட பக்கம் திறக்கப்பட்டு காட்டப்படும்.

Popular posts from this blog

அகஇ - 100% வாசித்தல் திறன் பெற்ற பள்ளிகளுக்கு ஊக்கத்தொகை - செயல்முறைகள்

அகஇ - 100% வாசித்தல் திறன் பெற்ற பள்ளிகளுக்கு ஊக்கத்தொகை - இயக்குனர் செயல்முறைகள்

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய யோகா

               சிபிஎஸ்இ பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் 40 முதல் 45 நிமிடங்கள் கட்டாய யோகா பயிற்சி அளிக்