Skip to main content

தேசிய திறனாய்வு தேர்வுக்கு நாளை முதல் விண்ணப்பம்

ஊரக பகுதி மாணவர்களுக்கான தேசிய திறனாய்வு தேர்வுக்கு நாளை முதல் விண்ணப்பம்
ஊரக பகுதி மாணவர்களுக்கான தேசிய திறனாய்வு தேர்வுக்கு நாளை முதல் ஆன்லைனில் விண்ணப்பம் விநியோகம் செய்யப்படுகிறது.அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் படிக்கின்ற 8ம் வகுப்பு மாணவர்கள் மேல்படிப்பு
படிக்க வசதியாக மத்திய அரசு சார்பில் ரூ.1500 கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது. டிசம்பர் மாதத்தில் இந்த தேர்வு நடத்தப்படுவது வழக்கம்.
7ம் வகுப்பு ஆண்டு இறுதி தேர்வில் 55 சதவீத மதிப்பெண் பெற்றவர்கள் இந்த தேர்வை எழுதலாம். எஸ்சி/எஸ்டி பிரிவினர் 50 சதவீத மதிப்பெண் பெற்றிருந்தால் போதும். பெற்றோரின் ஆண்டு வருமானம் ரூ.1 லட்சத்திற்கும் குறைவாக உள்ள மாணவ மாணவியர் இந்த தேர்வில் விண்ணப்பித்து கலந்துகொள்ளலாம். 

இதற்கான விண்ணப்பங்களை நாளை முதல் ஆன்லைனில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.இணையதள முகவரி   லீttஜீ://ஷ்ஷ்ஷ்.tஸீபீரீமீ.வீஸீ  ஆகும். பள்ளியில் இருந்தே பதிவிறக்கம் செய்த விண்ணப்பங்களை மாணவர்களுக்கு வழங்கி அவற்றை பூர்த்தி செய்து ஆகஸ்ட் 22ம் தேதிக்குள்,  பெற்று பெயர் பட்டியல் தயாரிக்கும் பணிகளை ஆகஸ்ட் 28க்குள் முடிக்க தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. 28ம் தேதிக்கு பிறகு விண்ணப்பங்கள் பெறக்கூடாது என்று அரசு தேர்வுகள் இயக்குநர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

Popular posts from this blog

அகஇ - 100% வாசித்தல் திறன் பெற்ற பள்ளிகளுக்கு ஊக்கத்தொகை - செயல்முறைகள்

அகஇ - 100% வாசித்தல் திறன் பெற்ற பள்ளிகளுக்கு ஊக்கத்தொகை - இயக்குனர் செயல்முறைகள்

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய யோகா

               சிபிஎஸ்இ பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் 40 முதல் 45 நிமிடங்கள் கட்டாய யோகா பயிற்சி அளிக்