Skip to main content

பொறியியல் கல்லூரி உதவிபேராசிரியர் பணிக்கான விண்ணப்பம் வினியோகம்


அரசு பொறியியல் கல்லூரி உதவிபேராசிரியர் பணிக்கான போட்டி தேர்வு விண்ணப்பங்கள் நாளை முதல் திண்டுக்கல் முதன்மை கல்வி அலுவலகத்தில் வினியோகிக்கப்பட உள்ளது.

 அரசு பொறியியல் கல்லூரிகளில் 139 உதவி பேராசிரியர் பணியிடங்கள்
காலியாக உள்ளன. இந்த பணியிடங்களுக்கான போட்டி தேர்வை ஆசிரியர் தேர்வு வாரியம் அக்.,26 ல் நடத்த உள்ளது. இன்ஜினியரிங் பாடப்பிரிவுகளுக்கு பி.இ., அல்லது பி.டெக்., மற்றும் எம்.இ., அல்லது எம்.டெக் படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். ஆங்கிலம், கணிதம், இயற்பியல், வேதியியல் பாடப்பிரிவுகளுக்கு எம்.ஏ., அல்லது எம்.எஸ்.சி., படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். மொத்தம் 55 சதவீதத்திற்கு மேல் மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும். நெட் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 2014 ஜூலை 1 ல் 35 வயதிற்குட்பட்டவராக இருத்தல் வேண்டும். விண்ணப்பங்கள் திண்டுக்கல் முதன்மை கல்வி அலுவலகத்தில் நாளை (ஆக.,20) முதல் வினியோகிக்கப்படுகிறது. ரூ.100 செலுத்தி விண்ணப்பங்களை பெற்று கொள்ளலாம். மாற்றுத்திறனாளிகள், எஸ்.சி., எஸ்.டி., பிரிவினர் தேர்வு கட்டணம் ரூ.300, மற்ற பிரிவினர் ரூ.600 யை பாரத ஸ்டேட் வங்கி, ஐ.ஓ.பி.,யில் சலானாக செலுத்த வேண்டும்.

 பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை செப்.,5 மாலை 5 மணிக்குள் முதன்மை கல்வி அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.

Popular posts from this blog

அகஇ - 100% வாசித்தல் திறன் பெற்ற பள்ளிகளுக்கு ஊக்கத்தொகை - செயல்முறைகள்

அகஇ - 100% வாசித்தல் திறன் பெற்ற பள்ளிகளுக்கு ஊக்கத்தொகை - இயக்குனர் செயல்முறைகள்

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய யோகா

               சிபிஎஸ்இ பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் 40 முதல் 45 நிமிடங்கள் கட்டாய யோகா பயிற்சி அளிக்